மாநில பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் : ராகுலிடம் வாசன் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் : ராகுலிடம் வாசன் வலியுறுத்தல்

Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாநில பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் : ராகுலிடம் வாசன் வலியுறுத்தல்

சென்னை:""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினேன். காங்கிரஸ் மேலிடம், மாநில பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, கவனம் செலுத்த வேண்டும் என, அவரிடம் தெரிவித்தேன்,'' என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.சென்னையில் அவரது பேட்டி:
தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக நிலவுகிறது. மின்வெட்டை குறைக்கும் வகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறப்பதற்கு, போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட வேண்டும். அணுமின் நிலையம் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டால், தமிழகத்தில் நிலவும், மின்வெட்டுக்கு நிவாரணம் கிடைக்கும்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை, கடந்த, 4ம் தேதி சந்தித்து பேசினேன்.

அப்போது, அவரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினேன். காங்கிரஸ் மேலிடம், மாநில பிரச்னைகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என, ராகுலை கேட்டுக் கொண்டேன்.நவம்பர் மாதம், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பதையும் ராகுலிடம் வலியுறுத்தினேன். காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு, காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, காங்கிரஸ் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjay Kumar - சென்னை,இந்தியா
08-ஏப்-201310:21:36 IST Report Abuse
Sanjay Kumar சுப்பிரமணி என்று ஒரு காங்கிரஸ் காரர் இருந்தாரே, அவர் எங்கே? இன்று உங்கள் தானை தலைவரை பற்றி விக்கி லீக்ஸ் கிலி கிலின்னு கிழிச்சு இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
Sanjay Kumar - சென்னை,இந்தியா
08-ஏப்-201310:19:33 IST Report Abuse
Sanjay Kumar கடந்த ஐந்து வருடம் எங்கே போனீர்கள் வாசன் அவர்களே. எத்தனையோ தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை இராணுவதால் சித்திரவதை படும் பொது நீங்கள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? ஓ, அடுத்த வருட தேர்தலுக்கு தான் இந்த கூப்பாடா? காங்கிரஸ் தமிழ் நாட்டில் என்றோ செத்து விட்டது. அதை எம் மக்கள் மதிப்பதும் கிடையாது. நீங்கள், எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அந்த கட்சியும் தோற்கடிக்கப்படும். காங்கிரஸ் இந்த தமிழ் நாட்டில் இருக்கவே கூடாது. தமிழ் இன எதிரி காங்கிரஸ்ஐ புறகணிப்போம்
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
08-ஏப்-201309:26:14 IST Report Abuse
Rajasekar ம்ம்ம்ம் தேர்தல் நெருங்குன உடனே உங்களுக்கு மாநில பிரச்சனை பற்றி பேச தெரியுது இவ்வளவு நாள் நல்லா தூங்கியாச்சி..... இந்த பேச்சி எதுவும் மக்கள் மத்தியில் எடுபடாது இன்றுவரை வழித்தடம் இல்லை என்ற பொய்யான காரணம் கூறி பிற மாநில மின்சாரத்தையும் கிடைக்க விடாமல் செய்த உங்களின் மக்கள் பணிக்கு உரிய பிளான் கிடைக்கும். பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தும் பொது தெரியாத மக்கள் பிரச்சனை மாநில பிரச்சனை இப்போது உங்களுக்கு தெரிகிறது..... மீண்டும் சைகிள எடுக்கலாம் ஆனால் சிங்கிளாதான் போகமுடியும்.....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-ஏப்-201309:16:36 IST Report Abuse
villupuram jeevithan தமிழக காங்கிரசாருக்கு தேர்தலில் சீட்டு கொடுப்பதே கருணா தான், அப்படி இருக்கும் போது அவரைத்தான் சுற்றி சுற்றி வருவார்கள். மாநில பிரச்னையை பற்றி எப்படி பேசுவார்கள் கருணாவை மீறி?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-ஏப்-201309:14:11 IST Report Abuse
villupuram jeevithan மாநில பிரச்சனைகளை தமிழக காங்கிரசார் கண்டு கொள்ளுவதே இல்லையே? அப்படி இருக்கும் போது மத்திய அரசு எப்படி கண்டு கொள்ளும்?
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
08-ஏப்-201308:10:12 IST Report Abuse
amukkusaamy பாவம் பச்சப் புள்ள கண்ணு முழுச்சிடுச்சு பாரும்மா...அழுவுரதுக்கு முன்னாடி கொஞ்சம் ங்கா கொடும்மா ...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201306:56:50 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மகனே... நீ தலை கீழா நின்னாலும் திராவிட கட்சி ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் தேர்தலில் நின்று இனி ஒருக்காலும் வெற்றி பெற முடியாது. ஏன் உங்கள் தலைவர் கிட்ட போய் வெட்டி பேச்சு பேசுறீங்க? சரிதான், பொது கூட்டம் என்றால் ஏதாவது பேச வேணாமா? ஆமாம். இது தமிழக காங்கிரஸ் கட்சியின் எத்தனையாவது பிரிவு நடத்திய பொது கூட்டம். ?
Rate this:
Share this comment
Cancel
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201300:48:50 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam அய்யா வாசன் சாரே உங்கள் தந்தையின் மதிப்பு நிலைநிற்க வேண்டுமானால் இதுதான் தக்க சமயம். வீணபோன காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியில வாங்க. எப்படியும் தமிழ் மக்கள் உங்களை கைதூக்கி விடுவார்கள். சும்மா அந்நிய அன்னையின் மகன் ராகுல நம்பி உங்க மதிப்பு மரியாதையை இழந்து விடாதீர்கள். என் சொந்த மாவட்டத்து தலைவர் என்பதால் மிகவும் உரிமையாய் கேட்கிறேன். சிதம்பரம் அய்யா அவரு மகன் மனைவியின் செயல்களால் பேரு கேட்டு விட்டது. இனி அவரால் ஜெயிக்கவும் முடியாது.சும்மா பீலா வுட்டுகிட்டு நிக்கலம்னு அவரு ஐடியா.நீங்க வெளியில் வந்து தமாகவை திரும்பவும் தொடங்குங்கள். நிச்சயம் வெற்றிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை