கோலாகலமாக நிறைவு பெற்றது "தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி:ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோலாகலமாக நிறைவு பெற்றது "தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி:ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு

Added : ஏப் 07, 2013
Advertisement
கோலாகலமாக நிறைவு பெற்றது "தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி:ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவியர் பங்கேற்பு

சென்னை:பெற்றோர் மற்றும் மாணவர் களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் நேற்று, கோலாகலமாக நிறைவடைந்தது.
தினமலர் நாளிதழ், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் இணைந்து வழங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதா னத்தில், ஏப்., 5ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது.நீண்டவரிசைபிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லூரியில் சேர்வது, எந்தெந்த கல்லூரியில், என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது குறித்த தகவல்கள், நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.இதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங், நர்சிங், தொழிற்படிப்பு, கடல்சார் படிப்பு உள்ளிட்ட, 95 முன்னணி கல்வி நிறுவனங்கள், தங்களின் அரங்கு களை அமைத்தன. மாணவர்களும், பெற்றோரும் நீண்ட வரிசையில் நின்று, கல்லூரி விவரங்களை பெற்று சென்றனர்.முதல் நாள் கருத்தரங்கில், சிவில் சர்வீஸ் தேர்வுகள், பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங், கடல் சார் அறிவியல் படிப்புகள், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங், வெளிநாட்டில் படிக்க செல்லும் போது, கவனிக்க வேண்டியவை குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாள் கருத்தரங்கில், பேஷன் டெக்னாலஜி, ஹெல்த் சயின்ஸ், ஊடகத் துறை, சி.ஏ., - ஏ.சி.ஏஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகளில் உள்ள, வேலை வாய்ப்புகள் குறித்து, துறை வல்லுனர்கள் விவரித்தனர்.நிறைவு விழா கருத்தரங்கத்தில், "60 சதவீதத்திற்கு மேல், மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உள்ள, மேற்படிப்புகள் குறித்த வாய்ப்புகள்' குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா, தகவல் தொழில் நுட்பத் துறையின் தற்போதைய போக்குகள் குறித்து, ஹேமா கோபால், வேலைக்கு தயாராவது எப்படி? என்ற தலைப்பில், சுஜித் குமார் ஆகியோர் பேசினர்.தற்போது, அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள, நானோடெக், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் ஆட்டோ மொபைல், மெக்கட்ரானிக்ஸ் படிப்புகள் குறித்து, டாக்டர் அரவிந்தன், வங்கிகளில் கல்வி கடன் பெறும் வழிமுறைகளை குறித்து, வணங்காமுடி, மொழிப் பாடங்களை தேர்ந்தெடுத்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி? என்பது குறித்து, ஞான சம்பந்தம் ஆகியோர், கருத்துகளை எடுத்துரைத்தனர். 20 பல்துறை வல்லுனர்களிடம் இருந்து, தங்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்கள் விளக்கம் பெற்றனர்.புத்தகம்மூன்று நாட்கள் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர் களுக்கும், தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் விவரங்கள் அடங்கிய, வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.எதிர் காலத்தை தேர்ந்தெடுக்க உதவிய, "தினமலர்' நாளிதழுக்கு மாணவர்களும், பெற்றோரும், மனமுவந்து நன்றி தெரிவித்ததை காண முடிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை