E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நூலக அலுவலர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
23:40

சென்னை:""நூலகங்களில், புதிதாக, ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, மாவட்ட நூலக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் வலியுறுத்தினார்.நூலகத் துறை இயக்குனரகம் சார்பில், மாவட்ட நூலக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், டி.பி.ஐ., வளாகத்தில் நடந்தது. பள்ளிகல்வி அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கல்வித் துறை செயலர் சபிதா, நூலகத்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:புத்தகங்கள் இருப்பு குறித்து சரிபார்த்து, இருப்பு குறைந்துள்ள புத்தகங்கள் பற்றி கணக்கெடுக்க வேண்டும். இந்த வகை புத்தகங்களை, கூடுதலாக கொள்முதல் செய்து, நூலகங்களில் வைக்க வேண்டும்.அனைத்துப் பள்ளிகளிலும், வரும் 23ம் தேதி, உலக புத்தக தினத்தை கொண்டாட வேண்டும்.

உலக புத்தக தினமான, வரும், 23ம் தேதியில் இருந்து, மே 22ம் தேதி வரை, புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்டங்களை கவுரவிக்க, விருது வழங்கப்படும்.மேலும், நூலகங்களில், புரவலர்களையும், அதிகளவில் சேர்க்க வேண்டும். 1,000 ரூபாய் வழங்குபவர்கள், புரவலர்களாகவும், 10 ஆயிரம் ரூபாய் வழங்குபவர்கள், கொடையாளிகளாகவும் சேர்க்க வேண்டும்.உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தாலுகா அளவில், வாசகர்களிடையே கட்டுரைப்போட்டியை நடத்தி, முதல் மூன்று இடங்களைப் பெறும் வாசகர்களுக்கு, பரிசு வழங்க வேண்டும். நூலகங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளை கண்டறிந்து, அங்கு, பகுதி நேர நூலகங்களை துவங்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஏப்-201300:51:10 IST Report Abuse
தமிழவேல் எல்லாமே நல்லாத்தான் இருக்கு...... ஆனா நம்ம தாத்தா நூலகத்த கண்டுக்காம இந்த நிலையில உட்டுடீன்களே ?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.