பதிவு செய்த நாள் :
கருத்துகள் (37)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை:தி.மு.க.,வில், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தென் மண்டல அமைப்பாளர் அழகிரி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையேயான மோதல், அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மதுரைக்கு நேற்று, கட்சியின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி வந்திருந்த போது, அழகிரி ஆதரவாளர்கள் அவரை வரவேற்றும், ஸ்டாலின் ஆதரவாளர்கள் புறக்கணித்தும், தங்களிடையே உள்ள பனிப்போரை, வெட்ட வெளிச்சமாக்கினர்.

தி.மு.க., இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம், மதுரையில் சமீபத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் பேசினார். அக்கூட்டத்தை, அழகிரியின் ஆதரவாளர்கள், 13 பேர் புறக்கணித்தனர். அவர்கள் அனைவரிடமும், கூட்டத்தைப் புறக்கணித்த காரணத்தைக் கேட்டு, தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. "இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்ப வேண்டாம்' என்ற முடிவை, அழகிரி ஆதரவாளர்கள் எடுத்திருந்தனர்.

ஐவர் சஸ்பெண்ட்:
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள், ஐவரை, கட்சி மேலிடம் சஸ்பெண்ட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, இளைஞர் எழுச்சி நாள் விழா, மதுரையில் சமீபத்தில் நடந்தது.இந்தக் கூட்டத்தை சந்திரசேகரன், பழனிச்சாமி, சந்தானம், சுரேந்தர், முருகன் ஆகிய ஐவரும் சேர்ந்து நடத்தியுள்ளனர். தற்போது கொட்டாம்பட்டி ராஜேந்திரன் என்பவர் ஒன்றிய செயலராக உள்ளார். ஆனால், சந்தானம் என்பவர் ஒன்றிய செயலர் என, அச்சிட்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.பழனிச்சாமி என்பவர் தேர்தல் நிதியை, மாவட்டச் செயலர் மூர்த்தியிடம் வழங்காமல், தன்னிச்சையாக ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். சந்திரசேகரன், ஸ்டாலின் ஆதரவாளர் என்றாலும், அழகிரியின் மருமகனிடம் தொடர்பு கொண்டவர். ஒன்றிய செயலர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தானம்

உட்பட, ஐவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நோட்டீசுக்கு பதில்:
ஸ்டாலின் ஆதரவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டவிவகாரம், அழகிரி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது, கட்சி தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுக்கும் போது, கட்சி தலைமை அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அனுப்பாமல் இருந்தால், தங்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என, அழகிரி ஆதரவாளர்கள் அச்சம் அடைந்தனர்.அதன் விளைவாக நேற்று முன்தினமே, அழகிரி ஆதரவாளர்கள், 13 பேரும், மேலிடம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அளித்த பதிலில், உடல் நலம் சரியில்லை; வெளியூர் சென்றிருந்தோம் போன்ற காரணங்களை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் கனிமொழி:
தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கு, மதுரையில் நேற்று, அழகிரி ஆதரவாளர்கள், "தடபுடல்' வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் கண்டுகொள்ளவில்லை.பேரவையின், மதுரை நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, விமான நிலையம் வந்த கனிமொழியை, அழகிரி ஆதரவாளர்கள் வரவேற்றனர். அங்கிருந்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்ற கனிமொழி, ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின் இருவரும், சிங்கந்தர் சாவடியில்

Advertisement

நடந்த திருமணத்தில் பங்கேற்றனர். அழகிரி வீட்டுக்கு மீண்டும் கனிமொழி சென்றார்.அவரை வரவேற்று நகரின் பல இடங்களில், "அண்ணனின் அன்பே', "பாசமலரே' போன்ற வாசகம் அடங்கிய, "பேனர்கள்' வைக்கப்பட்டிருந்தன. சென்னை செல்லும் வரை, ஸ்டாலின் ஆதரவாளர்கள், கனிமொழியை கண்டுகொள்ளவில்லை.

சமரச முயற்சியா?
மதுரை விமான நிலையத்தில், நிருபர்களை சந்தித்த கனிமொழி, ""தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி மற்றும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது குறித்தும், கட்சி தலைமை தான் கருத்து சொல்ல வேண்டும்,'' என்றார்."நீண்ட நாட்களுக்கு பின் மதுரை வந்தது, அழகிரி, ஸ்டாலினுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சியா?' என்ற கேள்விக்கு, ""என் அண்ணனை பார்க்க வந்தேன். அடிக்கடி மதுரை வருகிறேன்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
11-ஏப்-201312:49:56 IST Report Abuse
MOHAMED GANI திண்டிவனத்தில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை பொன்முடியின் தலையீட்டால் பிரச்சினை ஏற்பட்டபோது, தான் விட்டுக்கொடுத்து, அக்கூட்டத்திற்கு செல்லாமல் ரத்து செய்தார் கனிமொழி. கலைஞர் டி,வி விவகாரத்திலும் கட்சியின் நலனுக்காக தான் சிறை சென்று வந்தாலும் அமைதியாக தன் பணியைக் கவனிக்கிறார் கனிமொழி. பாராளுமன்றத்திலும் அவருடைய செயல்பாடு நல்லபடியாக அமைந்துள்ளது. கனிமொழியை சரியான வகையில் பயன்படுத்திக் கொண்டால், தி.மு.க எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அடுத்த தலைவராக வழிமொழியப்படும் ஸ்டாலின் தன்னுடைய தந்தையின் வழியில் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து நடந்தால் எந்தப் பிரச்சினைக்கும் இடமில்லை.
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
10-ஏப்-201313:02:46 IST Report Abuse
MOHAMED GANI ஸ்டாலின், அழகிரி சகோதரர்கள் இருவரும் செய்யும் பரபரப்பு, மோதல் அரசியலால் தி.மு.க விற்குதான் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆனால், கனிமொழி என்றுமே வெறும் பரபரப்புக்காக மட்டுமே பேட்டி அளிப்பவரல்ல. மதுரையிலும் தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணியா என்ற கேள்விக்கு, தலைவர்கள் தான் பேசி முடிவு செய்ய வேண்டும்.என்றுதான் கூறியிருக்கிறார். அவருடையை பேட்டி, அறிக்கை எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நிதானமாகவே உள்ளது. யாரோ செய்த குற்றத்திற்காக, கலைஞர் டி.வி பணப்பறிமாற்றதிற்காக சிறை சென்று வந்தபின்னரும் கூட கட்சிக்காக அமைதி காப்பதே அதற்கு சான்று.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
08-ஏப்-201310:13:20 IST Report Abuse
Yoga Kannan சாமி சின்னத்தம்பி தாய்லாந்து ..... உங்களுடைய கருத்து......பாராட்டப்படவேண்டும்.... சிந்திப்பது கூட சிறப்பாக அமைய வேண்டும் .... சமன் செய்து சீர்தூக்கும் கோல்ப்போல் .......
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201309:46:42 IST Report Abuse
 Palanivel Naattaar அழகிரியின் தொல்லை இல்லாமல் இருந்த திமுகவுக்கு திருமங்கலம் இடைதேர்தல் மூலம் ஆரமப்மானது அது நேற்று இன்று நாளை என்று சென்றுகொண்டிருக்கிறது.அழகிரி மற்றும் கனிமொழி ஆகியோரால் திமுகவுக்கு எந்த உபயோகமும் இல்லை,இதை உணர்ந்து அவருக்கு ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டிருக்கின்றவர்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு கருணாநிதியின் மகன், மகள் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத இவர்களை கண்டுகொள்ளாமல் ஓரம்கட்டவேண்டும்.கட்சிக்காக உழைத்த உழைத்துக்கொண்டிருக்கின்ற ஸ்டாலினை ஆதரிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
08-ஏப்-201309:33:06 IST Report Abuse
Rangarajan Pg ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் செய்திகளில் இடம் பெற இந்த திமுக தலைமை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. எதை பற்றியாவது அறிக்கைகளை தட்டி விட்டு கொண்டே இருப்பது. எதுவும் மேட்டர் இல்லை என்றால் அண்ணன் தம்பி பனி போர் சனி போர் என்று எதையாவது கிளப்பி விட்டு கொண்டே இருப்பது. குடும்பத்தில் யாராவது ஒருவர் குறுக்கும் மறுக்கும் இப்படியும் அப்படியும் விமானத்தில் பறந்து கொண்டே இருப்பது. ஊடங்களில் ஊகத்தை கிளப்பி விட்டு கொண்டே இருப்பது. சி.பி.ஐ. ரைடு அது இது என்று VOLUNTEER ஆக கமிஷனர் அலுவலகம் சென்று ""என்னை கைது செய்யுங்கள்"" என்று கேட்டு கொள்வது. PUBLICITY சூடு தணியாமல் பார்த்து கொள்வது. சிறைக்கு சென்று திரும்பி வந்தாலும் அதற்கு ஒரு விழா, போஸ்ட் ஆபீஸ் உத்யோகம் பார்த்து விட்டு ஊர் திரும்பினாலும் ஒரு விழா, கூட்டணியை விட்டு பிரிந்தாலும் ஒரு விழா, சேர்ந்தாலும் ஒரு விழா, இலங்கையில் தமிழர் கஷ்டபட்டால் மாநாடு என்ற பெயரில் ஒரு விழா... இப்படி தான் போய் கொண்டிருக்கிறது திமுகவினரின் நாட்கள். தற்போது ஆட்சியில் இல்லாததால் இப்படி. ஆட்சியில் இருந்தால்,, அது விஷயமே வேறு. அரசியல் ப்ரோக்கர்களுடன் பேச்சு வார்த்தை, பெரும் தொழிலதிபர்களுடன் NEGOTIATION . விஞ்யான முறையில் ஊழல் என்று அவர்களது நாட்கள் போகும். இந்த ஒரு கட்சி இந்த நாட்டை விட்டு ஒழிந்தால் இந்த நாடு சுபிட்சமடையும். இவர்கள் ஒருவர் இருப்பதால் தான் மற்ற கட்சிகளும் தங்களுக்கான வேலைகளை பார்க்காமல் கேவல அரசியல் செய்ய வேண்டியதாக உள்ளது.
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
08-ஏப்-201310:20:36 IST Report Abuse
TamilArasanசுப்பர் பாஸ்....|| குடும்பத்தில் யாராவது ஒருவர் குறுக்கும் மறுக்கும் இப்படியும் அப்படியும் விமானத்தில் பறந்து கொண்டே இருப்பது. ||...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:31:15 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவர்கள் நடத்தும் COLD WAR சிலர் நடத்தும் COLD BLOODED WAR ஐ விட மோசமில்லை..
Rate this:
Share this comment
Cancel
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
08-ஏப்-201309:05:42 IST Report Abuse
Chandra Sekaran உள்ளதொல்லை பற்றவில்லை, இவனுகவேற காமெடி பன்றானுராகப்பா தாங்கமுடியலைப்பா
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-ஏப்-201309:02:08 IST Report Abuse
villupuram jeevithan பாவம், இந்த ஆதரவாளர்கள் எல்லோருக்கும் இந்த வாரிசுகளுக்கு மட்டுமே காவடி தூக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது?
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
08-ஏப்-201308:35:50 IST Report Abuse
PRAKASH அண்ணன் தங்கை பாசம் .. இத்தனை வருடங்களில் இல்லாத பாசம் என்ன திடீர்னு வந்துருக்கு .. சரி இல்லையே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
08-ஏப்-201306:46:27 IST Report Abuse
ஆரூர் ரங அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அளவுக்கு மிஞ்சிய தொடுப்புக்களும் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.