E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
டில்லி மாநாட்டில் மத்திய அரசு மீது மாநில முதல்வர்கள் அதிருப்தி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2013
01:36
பதிவு செய்த நாள்
ஏப் 07,2013 23:46

புதுடில்லி :"பெண்களுக்கு எதிரான குற்றங்களை, விரைவாக விசாரிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், விரைவு கோர்ட்டுகள் செயல்படுவதற்காக, அளித்த நிதியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு நிறுத்தி விட்டது. இப்படி இருந்தால், வழக்குகளை, எப்படி விரைவாக விசாரிக்க முடியும்' என, பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள், நேற்று நடந்த, முதல்வர்கள் மாநாட்டில், அதிருப்தி தெரிவித்தனர்.


தடாலடி கூடாது :




ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு, நேற்று டில்லியில் துவங்கியது. இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. டில்லி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், "பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்த துவங்கிஉள்ளனர்.எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக, இந்த விஷயத்தில், தடாலடியாக கருத்துக்களைத் தெரிவிப்பது சரியல்ல. அப்படி தெரிவித்தால், எந்த நோக்கத்துக்காக நாம் கருத்து தெரிவித்தோமோ, அந்த நல்ல நோக்கம், நிறைவேறாமல் போய் விடும்.அடித்தட்டு மக்களுக்கு, விரைவான நீதி கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டும். தற்போதுள்ள மக்கள் தொகைக்கு, இன்னும் அதிகமான நீதிபதிகள் தேவைப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

இந்த மாநாட்டில் பேசிய, பெரும்பாலான முதல்வர்கள், குறிப்பாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அல்லாத முதல்வர்கள், நீதித் துறை விவகாரத்தில், மத்திய அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


செயல்பாடு முடக்கம் :




வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காக அமைக்கப்பட்ட, விரைவு கோர்ட்டுகள் செயல்பட, அளித்து வந்த நிதியை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், தங்கள் மாநிலங்களில், விரைவு கோர்ட்டுகள் செயல்பாடு முடங்கியுள்ளதாக, முதல்வர்கள் புகார் தெரிவித்தனர்.

குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடி பேசியதாவது: விரைவு கோர்ட்டுகள் மூலம், ஏராளமான வழக்குகள், உடனுக்குடன் விசாரித்து முடிக்கப்பட்டன. ஆனால், இதற்காக அளித்து வந்த நிதியை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால், குஜராத்தில், விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
மத்திய அரசு, தன் முடிவை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநிலங்களில், நீதித் துறை பலப்படுத்த வேண்டுமெனில், மத்திய அரசின் நிதி உதவி, அவசியம் தேவை. நீதித் துறையை பலப்படுத்த, நீண்ட கால திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அடிக்கடி நடைமுறையை மாற்றுவது, குறுகிய கால திட்டங்களை அறிவிப்பது ஆகியவற்றால், எந்த பயனும் இல்லை.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

உ.பி., முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவின் உரை, மாநாட்டில் வாசிக்கப்பட்டது. அவர் தெரிவித்துள்ளதாவது:கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகளை அமைக்க, மாநில அரசு, ஆர்வமாக உள்ளது. ஆனால், இதற்கு தேவையான நிதி வளம், எங்களிடம் இல்லை. இந்த நிதியை, மத்திய அரசு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.இவர்களைப் போலவே, வேறு சில முதல்வர்களும், நீதித் துறைக்கான, நிதி உதவியை நிறுத்தியதற்கு, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


சிறார் சட்ட நடைமுறை: தலைமை நீதிபதி கவலை :




சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அல் தாமஸ் கபீர் பேசியதாவது: நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 42 சதவீதம் பேர், குழந்தைகள். இவர்கள் தான், நாட்டின் எதிர்காலம்; நாட்டின் வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிக்கப் போகிறவர்கள். ஆனால், இவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.இளைய தலைமுறையினரில் பலர், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வேறு பல பிரச்னைகளும் அவர்களுக்கு உள்ளன. எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறார் சட்ட நடைமுறையை பலப்படுத்த வேண்டும்.சட்ட சிக்கலுக்கு ஆளாகும் சிறார்களில் பெரும்பாலானோர், வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; ஏழைக் குழந்தைகள். இவர்களின் முன்னேற்றத்துக்கு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி, அல் தாமஸ் கபீர் பேசினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vramanujam - trichy,இந்தியா
08-ஏப்-201319:39:34 IST Report Abuse
vramanujam நமது முதல்வர் ஏன் புறக்கணித்தார் என்று தெரியவில்லை ? கர்ஜனை யை கேட்டிருக்கலாம் .இது போன்ற மகாநாடுகள் இவருடைய திறமையை எல்லாருக்கும் வெளிபடுத்தும். பல பேத்தல் களுக்கு இடையில் ஒரு தெளிவான பேச்சை கேட்டிருக்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-ஏப்-201308:02:37 IST Report Abuse
kumaresan.m " தமிழ் நாட்டின் சார்பாக யார் கலந்து கொண்டது ? ......அவர்களின் கருத்துக்கள் என்ன என்பதை தினமலர் வெளியிட வில்லையே ? ....ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நீதி துறையில் குறுக்கீடு செய்யாமல் இருந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும் .....மற்றும் ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லாமல் .....சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் "
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201306:17:43 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பல மாநிலங்களில் இருந்தும் (தமிழகம் உட்பட) பிரதிநிதிகள் தான் வந்து அமர்ந்து பொழுது போக்கினர். எனவே அதிருப்தி இல்லை என்றால் தான் அது செய்தி....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201303:53:37 IST Report Abuse
Baskaran Kasimani ஏதாவது மாநில அரசு ஒழுங்காக நடந்தால் அது மத்திய அரசுக்கு கண்டிப்பாக பிடிக்காது.
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201301:09:00 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam பெரும்பாலான முதல்வர்கள் அதிருப்தி என்றால் மத்திய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பதுதான் உண்மை.யாரையோ ஒரு அன்னியரை திருப்திபடுத்த இந்த காங்கிரஸின் இந்திய தலைவர்கள் என சொல்லப்படும் நபர்கள் செயல்படுகிறார்கள். நமது முதல்வர் சொன்னதுபோல் இந்த வீண்போன கட்சியை கலைத்து விடவேண்டும்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.