Pachauri warns of ecological consequences on Sethusamundram | சேது சமுத்திர திட்டம் சாத்தியமற்றது : பிரபல விஞ்ஞானி தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சேது சமுத்திர திட்டம் சாத்தியமற்றது : பிரபல விஞ்ஞானி தகவல்

Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சேது சமுத்திர திட்டம் சாத்தியமற்றது : பிரபல விஞ்ஞானி தகவல்,Pachauri warns of ecological consequences on Sethusamundram

கோல்கட்டா : ""புவி வெப்பமயமாவதால், எதிர்காலத்தில், கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், கோல்கட்டா, ஷாங்காய், தாகா, போன்ற, கடலோர நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரபல விஞ்ஞானி, ஆர்.கே.பச்சோரி கூறினார்.

அபாயம்:சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுவின் தலைவர், ஆர்.கே.பச்சோரி, கோல்கட்டாவில் கூறியதாவது:சுற்றுச்சூழல் பாதிப்புகளால், புவி, வேகமாக, வெப்பமயாகி வருகிறது. இதனால், பனிப் பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இந்த அபாயம் ஏற்படலாம்.கடல் நீர்மட்டம் அதிகரிப்பதால், உலகெங்கும் உள்ள, கடலோர நகரங்களுக்குள், கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோல்கட்டா, ஷாங்காய், தாகா போன்ற நகரங்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்படலாம்.இந்த அபாயத்தை தடுத்து நிறுத்துவதற்கு, சர்வதேச நாடுகள், இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதன் மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.


சேது சமுத்திர திட்டம்:

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்துவதற்கு, என் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி, ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் அடிப்படையிலும், இந்த திட்டம், சாத்தியமற்ற ஒன்று என, கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.என் தலைமையிலான, கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள், உறுதியானவை. இனிமேல், இந்த விவகாரத்தில், அடுத்த கட்ட முடிவை, மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.இவ்வாறு, பச்சோரி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyam nelatur - Oak Brook,IL-60523,யூ.எஸ்.ஏ
11-ஏப்-201305:30:10 IST Report Abuse
shyam nelatur Leave alone Mr.Pachori's latest comments. Many experts in the field of navigation had already expressed their opinion about the non-feasibility of this Sethu project.One expert had expressed very clearly that the sand deposition in and around the proposed project site is inevi because of the confluence of Bay of Bengal and Indian Ocean in the near vicinity. This will necessitate repeated process of removing the sand so as to enable the passage of big ships. When this repeatedly happens, how can the route be used for passage of merchant ships? Who will undertake the cleaning process repeatedly and bear the cost of the operation? Apart from this, the mythological importance attached to the Sethu Bridge and Heritage status enjoyed by it outweighs the supposed to be benefits put up by the Dravidian party, DMK. Now, as it is out of the UPA-II alliance they will not get enough support from the govt' also. DMK and its leaders always want to put down the Hindu Faith. They will not succeed and should not be allowed to have their way.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-ஏப்-201310:40:49 IST Report Abuse
mirudan பாலம் கட்ட வேண்டாம், சேது பாலத்தை கையே வைக்காமல் பயணிகள் கப்பல், சிறிய அளவில் சரக்கு கப்பலை சென்னை இருந்து கன்னியாகுமரி வரை இயக்கலாமே ? ரோட்டில் போக்குவரத்து நெரிசலாவது குறையுமே ?
Rate this:
Share this comment
Cancel
rajasekar - abbasiya,குவைத்
08-ஏப்-201310:21:10 IST Report Abuse
rajasekar நேரா சொல்ல பயந்து இந்த விஞ்ஞானிய விட்டு சொல்ல சொல்லி இருப்பாங்களோ
Rate this:
Share this comment
Cancel
Freedom_to_Express - New Delhi,இந்தியா
08-ஏப்-201310:05:41 IST Report Abuse
Freedom_to_Express அவர் குறிப்பிட்ட மூன்று நகரங்களும் (கொல்கத்தா, ஷாங்காய், டாக்கா) கடலுக்கு பக்கத்தில் அமையவில்லை. அவைகள் ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் ஆகும். சேது சமுத்திரத்தில் நீர் ஓட்டம் அதிகமானால் பயனே அன்றி பாதகமில்லை.
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
08-ஏப்-201310:00:21 IST Report Abuse
sitaramenv ஹிந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வது........காண்டிராக்டில் கோடி கோடி கோடி கோடி கொள்ளை அடிப்பது ...இவை இரண்டுதான் இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கங்கள்......இதற்கு மூல காரணம்.......சிவகங்கை கொடுத்த தேசத்துரோகியும், மஞ்சள் துண்டின் கூஜா .......கப்பல் துறை அமைச்சராக இருந்து கொள்ளை அடித்தவனும்.......மக்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்ட விட்டார்கள். 176000 கோடி ஊழலை அலசி குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.........வெளி நாட்டு கருப்பு பணத்தை கொண்டு வரட்டும். இந்த நாடு செழிக்கும்.......வேறு எதுவுமே செய்ய வேண்டாம்.......
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:36:16 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //புவி வெப்பமயமாவதால், எதிர்காலத்தில், கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், கோல்கட்டா, ஷாங்காய், தாகா, போன்ற, கடலோர நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரபல விஞ்ஞானி, ஆர்.கே.பச்சோரி கூறினார்.//-சேது சமுத்திர திட்டத்தால் அம்புட்டு தூரத்தில் இருக்கிற கொல்கத்தா, SHANGHAI மற்றும் DAKA போன்ற நகரங்கள் நீரில் மூழ்கிவிடுமா? இது மொட்டை தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சு போடுவது போல் அல்லவா உள்ளது..
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
08-ஏப்-201309:24:38 IST Report Abuse
Samy Chinnathambi இரண்டாயிரம் கோடியை அப்பட்டமாக பட்ட பகலில் லபக்கிவிட்ட கூட்டு கொள்ளை திட்டம் இது...திட்டத்தை துவக்கு போன்று துவக்கி இரண்டாயிரம் கோடியை கையில் எடுத்து கொண்டு , மணலை அள்ளுவது போன்று செட்டப் செய்து, சில பேருக்கு சில நூறு கோடிகளை மட்டும் செலவு செய்து எதிர்ப்பு வருவது போன்று காட்டி, சில சென்சிடிவ் காரணங்களை இழுத்துவிட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோடிகளை விழுங்கி விட்டார்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி...கட்டுமரம்+ டீஆர் பாலு + சிதம்பரம் மற்றும் சோனியா கூட்டணிக்கே இது விளங்கும்...
Rate this:
Share this comment
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201310:12:28 IST Report Abuse
Jeyaseelanஇந்த திட்டத்தில் ஊழல் நடந்ததாக எந்த ஒரு அமைப்புமே சொல்லவில்லையே ..........CAG, CBI உட்பட.....
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
08-ஏப்-201310:38:52 IST Report Abuse
vadiveluதமிழன் என்றாலே திருடன் என்றாக்கி விட்டனர் தி மு க வினர்....
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
08-ஏப்-201308:25:14 IST Report Abuse
yila நிலவுக்கு விண்கலம் அனுப்புவது இந்தியாவுக்கு சாத்தியமானால், இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பையும் அவர்களிடமே கொடுத்து சாத்தியமாக்கலாமே. இது ஒன்றும் முடியாத வேலையாகத் தோன்றவில்லை. ஆனால், ஊழல் செய்வோரை முதலில் கச்சத்தீவில் சிறை வைத்து விட்டு, திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-ஏப்-201307:53:41 IST Report Abuse
kumaresan.m " தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் பேச்சு (வடிவேலு பாணியில் ) இந்த திட்டத்தை செயல் படுத்த கூடாது யார் சொன்னது ? அவனை இந்த வடை மாதிரி நசுக்கி நசுக்கி தூக்கி போட்டுறேன் .....ஆஹா வடை போச்சே "
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
08-ஏப்-201307:12:19 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy முக்கியமா சில உண்மைகள் இந்த திட்டத்தால் என்ன பயன் என்று விளக்க யாருக்கும் தெரியலையாம் ஒன்று, ஆழபடுத்தியபோது எடுக்கப்பட்ட மணலை எங்குபோய் கொட்டினார்கள் அப்படி கொட்டியிருந்தால் இப்போது ஒரு தீவே உருவாயிருக்குமே? ஆகையால் தோண்டியது உண்மையா இல்லையா? இல்லை தோண்டிய இடத்திலேயே மணலை கொட்டியதால் மீண்டும் தோண்டணுமா? விஞ்ஞானபூர்வமா இந்த பாலம் உருவானதுக்கு யாராவது சான்றிதழ் கொடுத்தார்களா? அப்படி கொடுத்திருந்தால் இந்த பாலத்தை இடிப்பதற்கு அனுமதி யார் கொடுக்கணும்? ஒரு மிகபெரிய கட்டிடத்தை ஆச்பத்திரியாக்க தடை இல்லா சான்றிதழ் இல்லை என்று விதண்டாவாதம் செய்தவர்கள் இப்போ என்ன சொள்ளபோரார்கள்? இப்போது உண்மைக்குள் வருவோமா இந்த திட்டத்துக்கு geological சர்வே ஒப் இந்தியாவின் ஒப்புதலாவது வாங்கினார்களா? இந்த திட்டத்துக்கு greenpeace அன்கீகாகாரம் கொடுத்துடுச்சா? ஒரு Theri டமுக்கே பெரிய உலகளவில் போராட்டம் நடத்தி மூடுவிழா கண்டதே இந்த திட்டத்த மட்டும் ஏன் நிறைவேற்ற இவ்வளவு முனைப்போ? இதில் பயங்கர வெளிநாட்டு சதி இருக்குமோன்னு நினைக்க தோன்றுகிறது கொள்ளை அடிக்கவே தீட்டியது என்ற விவாதம் ஒருபக்கம் சாத்தியமற்றதுன்னு சொல்லுகிறது மறுபக்கம் ஆனால் எனக்கு கேள்விபட்டது ராமரின் வரலாறு சின்னம் அழிக்கபடனும்ற ஒன்றே குறிக்கோள் ராமர் பிறந்தது உண்மை என்று கோர்டே தீர்பளித்தபின்பு எப்படியாவது அந்த அவதாரபுருஷனின் முக்கிய முத்திரையை அழிக்க துடிக்கும் சக்திகளின் சதி தெரிகிறது ஒன்னுமே இல்லாத மசுபிசுக்கேல்லாம் இல்லை பிணத்தை வைக்க உபயோகித்த பிரமிடுக்கேல்லாம் உலக அதிசயம்னு பட்டம் கொடுத்தவர்கள் ஏன் இந்த அதிசய பாலத்தை அது ஆதமோ ராமர்பாலமோ எதுவானாலும் அன்கீகாகாரம் கொடுக்க மறுக்கிறார்களாம் குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்பதை யார் பார்த்தார்களாம்? Adam eve உண்மையானால் ராமர்பாலமும் உண்மையே அதை இடிக்க எவனுக்கும் உரிமை இல்லை ராமாயணம் எழுதப்பட்டது எப்போது? எப்படி அது மட்டும் கற்பனை என்று விவாதிக்க முடிகிறது? பைபிள் மற்றும் குரானையும் சீக்கியர்களின் பொக்கிஷத்தையும் கூட கற்பனை என்று கூறி விட முடியுமா? எல்லாமே உண்மை தான் அது எப்படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானோ அதே குரங்கினம் தான் இந்த பாலத்தை கட்டினார்களாம் இப்போது அறிவியலுக்கு வர்வோமா ஒரு கூடங்குலத்துக்கே இவ்வளவு எதிர்ப்பை காட்டும் நம்முடைய ஆருயிர் மீனவ நண்பர்கள் இந்த திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை? உடயகுமாரா எங்கே இருக்கை? இந்த திட்டம் vandhaal சுற்றுசூழல் பாதிக்கும் மீன்வளம் அழியும் அதுவும் புராதான கடல்வாழ் உயிரினம் முட்ட்ருமே இல்லாது போகும் மீனவர்கள் வாழ்வாதாரம் illaamal போகும் கிளம்பலாமா கடலுக்குள் ஆட்களை திரட்டி கொண்டு? மாட்டார்கள் ஏன் என்றால் அழியபோவது ஹிந்து மதத்தின் வரலாற்று சின்னமே கடைசியாக ஒரு மிகவும் சீரிய சிந்தனைபோருளுக்குள் செல்வோமா? இந்த திட்ட மதிப்பு எவ்வளவு? இதுவரை செலவு செய்தது எவ்வளவு? இன்னும் எவ்வளவு செய்தால் இந்த திட்டம் செயல்படும்? அப்படின்னா முழுமையா செயல்படும்போது இந்த திட்டத்தின் மூலம் உபயோகிக்க முன்வரும் கப்பல்கள் எந்த வகை? இப்போதே சிறிய ரக கப்பல்களுக்கு முழுக்கு போட்டுவிட்டார்களாம் ஆகையால் முழுவதுமாக செயல்படுத்தும்போது பெரிய கப்பல்கள் செள்ளமுடியாதுன்னு மூடுவிழா நடத்திடுவார்கலே அதுக்கு இப்போதே மூடுவிழா நடத்தட்டுமே நல்லதா கெட்டதா? பெரிய கப்பலோ சிறிய கப்பலோ கொழும்புவை சுற்றிவரும்போது ஏற்படும் செலவில் இந்த திட்டத்தால் செலவு செய்யும் பணத்தை ஒப்பிட்டால் இந்த திட்டம் நிச்சயமாக சத்தியமாக வேஸ்ட் திட்டமே தென்மாவட்ட வளர்ச்சி போய்டும் என்று கூவும் அரசியல் வ்யபாரிக்களை நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும் என்ன பயன் இந்த திட்டத்தால் என்று? ஒன்றுமே கூறமுடியாது கொள்ளை அடிக்க மட்டுமே போடப்பட்ட திட்டம் என்று பலர் கூறுவதுபோல் நான் கூறலை நமது பாரம்பரிய சின்னத்தை அழிக்க நினைக்கும் வெளிநாட்டு ஹிந்து எதிரிகளின் சதியே முறியடிப்பார் எங்கள் ராமர் ஜெயலலிதா என்ற பெண்மணியின் ரூபத்தில் வந்து மீண்டும் துவங்குவோம் ராவண எதிர்ப்பு யுத்தம் செய்ய புறப்பட்டு வாருங்கள் எல்லா இந்தியனும் ஹிந்துக்களும்
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201309:47:28 IST Report Abuse
Baskaran Kasimaniநவீன விஞ்ஞானம் ஒரு கேலிக்கூத்து. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தில் நீர் பனிக்கட்டியாவதற்க்கு வாய்ப்பு இல்லை என்கிறது விஞ்ஞானம் . இருந்தும் துருவத்தில் ஏகப்பட்ட பரப்பளவில் பனிக்கட்டி - பூமியின் அச்சே சாயும் அளவுக்கு (சிலர் இதை பனி யுகத்தால் வந்தது என்பர்) . அது உருக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பவரும் உண்டு - அதே நேரம் சில வருடங்களில் உருகி விடும் என்று சொல்பவரும் உண்டு. சரித்திரத்தை பார்த்தால் பல கடல் ஒர நாகரீகங்கள் இல்லாமல் போய் இருக்கின்றன - பூம்புகார், பாரதத்தில் வரும் துவாரகை போன்றவை. துருவத்தில் உள்ள எல்லா பனியும் உருகினால் தென் இந்தியாவின் பெரும் பகுதி கடலில் போய் விடும். முப்பத்தைந்து லட்சம் ஆண்டுகள் பழமையான ராமர் பாலம் இன்னும் சில மீட்டார் ஆழத்தில் உள்ளது. இதை எந்த கொம்பனாலும் இன்னும் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியவில்லை - அதாவது ஒரு நாகரீகம் கடலுக்கு மேலே சில நாட்களில் இவ்வளவு பெரிய பாலத்தை நிர்மானித்ததை. தென்னகத்தில் இருக்கும் தொழில்கள் கொட்டும் கழிவு பெரும்பாலான பவளப்பாறைகளை அழித்து விடும் என்பதை ஏன் முட்டாள்களுக்கு புரியவில்லை? இலங்கையை சுற்றி போக வேண்டும் என்றால் நிலத்தில் சில மைல்களுக்கு கால்வாய் அமைக்கக்கூடாது? சாத்தியம் இல்லையா அல்லது அதை நிற்மானிக்க மூளை இல்லையா?...
Rate this:
Share this comment
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201310:07:40 IST Report Abuse
Jeyaseelanஇத்தனை புனிதம் நிறைந்த கடலுக்குள் இருக்கும் ராமர் பாலத்தில் தினமும் பூஜை நடத்துகிறீர்களா, கடலுக்குள் இருக்கும் மணல் திட்டுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் நண்பரே.........? இத்தனை நாளும் அது ஒரு மணல் திட்டு சேது சமுத்திர திட்டம் என்று வந்தவுடேன் அது ராமர் பாலமா ..........?...
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
08-ஏப்-201310:10:57 IST Report Abuse
nandaindiaமிகவும் சரியான கருத்து. அடுத்தவன் மனைவி மேல் ஆசைபட்ட ராவணனுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்துக்கு சாவு மணி அடிப்போமாக.ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை