கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம்...ஐகோர்ட் உத்தரவிட்டும் அரசாணை பிறப்பிக்க தாமதம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம்...ஐகோர்ட் உத்தரவிட்டும் அரசாணை பிறப்பிக்க தாமதம்

Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு, நஷ்ட ஈட்டை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சண்முகத்தை, ஐகோர்ட் நியமித்தது. ஐகோர்ட் உத்தரவிட்டு, நான்கு மாதங்கள் ஆகியும், தமிழக அரசு இதுவரை, அதுதொடர்பான அரசாணையை பிறப்பிக்கவில்லை.கடும் விதிமுறைகள்கும்பகோணத்தில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நடந்த தீ விபத்தில், 94, குழந்தைகள் பலியாகினர்; 18, குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம், தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 2004ம் ஆண்டு, ஜூலையில், சம்பவம் நடந்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு, தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை உருவாக்கியது.பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு, 1 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், சிறிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, கருணைத் தொகையை, அரசு வழங்கியது; ஆனால், உரிய இழப்பீடு எதுவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை.இதையடுத்து, சம்பவத்தில் இரண்டு குழந்தைகளை பறி கொடுத்த, இன்பராஜ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; அதை நிர்ணயிக்க, ஒரு நபர் கமிஷனை நியமிக்க வேண்டும்' என, மனுவில் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், "இழப்பீட்டை நிர்ணயிக்க, ஒரு நபர் கமிஷன் நியமிப்பது அவசியம்; எனவே, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சண்முகத்தை, நியமிக்கிறேன்' என, உத்தரவு பிறப்பித்தார்.மருத்துவ உதவிமேலும், "எந்த அளவுக்கு அஜாக்கிரதை நடந்தது; சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு என்ன; காயங்களின் தன்மை என்ன; ஒவ்வொரு குடும்பத்துக்கும், எவ்வளவு இழப்பீடு வழங்கலாம்; காயமடைந்தவர்களுக்கு, மேற்கொண்டு மருத்துவ உதவி தேவையா என, நீதிபதி சண்முகம் கமிஷன் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டிருந்தார்.ஒரு நபர் கமிஷன் செயல்பட ஏதுவாக, அலுவலக வசதி மற்றும் ஊழியர்கள் வசதிகளை, அரசு அளிக்க வேண்டும்; ஆறு மாதங்களுக்குள், அறிக்கை தாக்கல் செய்யவும், கமிஷன் பணிகள் விரைவில் முடிய ஏதுவாக, அரசு மற்றும் அதன் துறைகள், பள்ளி நிர்வாகம், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவு, கடந்த ஆண்டு, நவம்பரில், பிறப்பிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மிகாமல், அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிபதி சண்முகம் கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி உத்தரவு பிறப்பித்து, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. கமிஷன் செயல்படுவதற்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அலுவலக, ஊழியர்களுக்கு வசதிகள் எதுவும், இதுவரை செய்து தரப்படவில்லை.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழரசன் கூறியதாவது:ஐகோர்ட் உத்தரவின் நகல், தலைமைச் செயலர், பள்ளி கல்வித் துறைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. உத்தரவு, இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இழப்பீடுஅரசு தரப்பில், எந்த நடவடிக்கையும் எடுக்காதது, வருத்தம்அளிக்கிறது. ஆறு மாதங்களுக்குள், அறிக்கை தாக்கல் செய்ய, கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.இப்போதே, நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. அரசு இன்னும், கமிஷன் செயல்படுவதற்கான, அரசாணையை பிறப்பிக்கவில்லை. அரசு, உடனடியாக, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, தகுந்த இழப்பீடு கிடைக்க வகை செய்ய வேண்டும்.இவ்வாறு, வழக்கறிஞர் தமிழரசன் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr.Zero - Tirunelveli,இந்தியா
08-ஏப்-201313:28:57 IST Report Abuse
Mr.Zero நம்ம நாட்டுல கடவுளா பாத்து எதாவது செஞ்சா தான் உண்டு, மத்த படி நோ யூஸ்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:17:53 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பேஷ் பேஷ் ரொம்ம நன்னாருக்கு.....காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையாக வெளியிட பட்ட அவஸ்தைகள் இங்கயும் படனுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை