CM Jayalalithaa urges SC to allow use of Tamil as official language in HC | சென்னை ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ் : ஜெயலலிதா | Dinamalar
Advertisement
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ் : ஜெயலலிதா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

டில்லியில், முதல்வர்கள் மற்றும் அனைத்து மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாடு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில், நேற்று நடந்தது. மாநாட்டை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்து பேசினார்.மாநாட்டில், தமிழக உள்ளாட்சி துறை மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார்.

அதில், முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:நம் நாட்டின், சிறந்த தலைவர்கள் உருவாக்கிய சட்ட நெறி முறைகளின்படி, நமது நாடு, ஜனநாயக பாதையில் இயங்குகிறது. சட்டசபை, நிர்வாகம், நீதி ஆகிய மூன்றும், மாநிலங்களில், மூன்று தூண்களாக விளங்குகின்றன.இந்த மூன்று அமைப்புகளும், தனித்தனி அதிகாரம் பெற்றதாகும். இருப்பினும், ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்றி வருகிறது. அரசியல் சட்டத்தில் உறுதி அளித்துள்ளபடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதி, உரிமை ஆகியவை, சமமாக வழங்கப்பட வேண்டும்.
கடந்த, 65 ஆண்டு கால, ஜனநாயக பயணத்தில், சிறப்பு வாய்ந்த, தீர்ப்புகள் மூலம், நீதித் துறை தலை நிமிர்ந்து நிற்கிறது. இதை, தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. காவிரி நதி நீர் பிரச்னையில் தீர்வு காண, 20 ஆண்டுகளாக, பலகட்டமாக போராடினோம். சுப்ரீம் கோட்டின் உத்தரவால் தான், காவிரி நடுவர் மன்ற உத்தரவு, மத்திய அரசின், அரசிதழில் வெளியிடப்பட்டது.

மாநாட்டில், ஏழை மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பது குறித்து, ஆலோசிக்க வேண்டும். சட்ட ரீதியில் பாதுகாக்கும் வகையில், ஏழைகளுக்கு விரைவான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே பொதுவான குறிக்கோளாகும்.தமிழக அரசு, நீதித் துறைக்கு தேவையான, உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது. 2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில், 695 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நீதித் துறைக்கு, 162.13 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும், 857 கீழ் கோர்ட்கள் இயங்குகின்றன. இவற்றில், 87.28 சதவீத கோர்ட்கள், சொந்த கட்டடங்களில் இயங்குகின்றன. வாடகை கட்டடங்களில், 12.72 சதவீத கோர்ட்கள் மட்டுமே உள்ளன. இவற்றுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட, 222.44 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தமிழக அரசு தன் சொந்த நிதியிலிருந்து, சொந்த கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்குகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில், பாரபட்சம் காட்டுகிறது. 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டுகளில், தமிழகத்திற்கு, நிதி ஒதுக்கீடு செய்யவே இல்லை.

2012-13ம் ஆண்டுக்கு, 19.53 கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2013-14ம் ஆண்டுக்கு, 70 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான், 2016ம் ஆண்டுக்குள், அனைத்து கோர்ட்களுக்கும் சொந்த கட்டடம் கட்ட முடியும்.டில்லியில், மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு, உறுதியான பாதுகாப்பு அளிக்க, 13 அம்ச திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.நீண்ட கால கோரிக்கை: நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் கீழ், மாநில மொழிகளில், கோர்ட் நடவடிக்கைகள், தீர்ப்புகள் வழங்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு மாநிலங்களில், மாநில மொழிகளில், கோர்ட் நடவடிக்கைகள் அமலில் உள்ளன.

இதேபோன்ற நடைமுறையை, சென்னை ஐகோர்ட்டிலும் கொண்டு வர வேண்டும் என, நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு, இது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டுள்ளது.மாநில மொழிகளில், வழக்கு நடவடிக்கைகள் இருந்தால் தான், அது மக்களுக்கு புரியும். எனவே, சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வர, மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201309:50:10 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இந்த கோரிக்கை வெற்றி பெற்றால் வழக்கு மொழி வீராங்கனை என்ற பட்டம் கொடுக்க ஒரு விழா ஏற்பாடு செய்யப்படுமா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
08-ஏப்-201309:20:44 IST Report Abuse
Kannan முதலில் 3 1/2 கோடி வழக்குகளை முடிக்க வழி செய்ய வேண்டும். அதற்கு கோர்ட் விடுமுறைகளை ரத்து செய்ய வேண்டும். Computerise பண்ண வேண்டும். copy section முழுவதும் computer இல் ஸ்கேன் செய்து உடனே copy கொடுக்கு மாறு வழி செய்ய வேண்டும், இதனால் கோர்ட் நேரம் வீணாகாமல் சீக்கிரம் வழக்குகளை முடிக்க வழி செய்யலாம். அம்மா இதையும் செய்ய வழி செய்வார்கள் என்று நம்புகிறேன் வாழ்க இந்திய Jaihind
Rate this:
2 members
0 members
20 members
Share this comment
Cancel
udanpirappu3 - chennai ,இந்தியா
08-ஏப்-201307:51:06 IST Report Abuse
udanpirappu3 நீதி மன்றங்களில் மட்டும் தமிழ் ??? ஆனா , செம்மொழி பூங்கா, செம்மொழி அலுவலகத்தை சீரழித்து தமிழை வளர்ப்போம் ??????????
Rate this:
7 members
0 members
91 members
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
08-ஏப்-201307:25:42 IST Report Abuse
R.Subramanian இது சரியல்ல காரணம் தமிழ் தெரியாத நீதிபதி இருந்தால் அவருக்கு வக்கீல் வாதாடுவது புரியாது, இதில் மக்களுக்கு புரிவதை விட சரியான நீதி தான் முக்கியம், தமிழில் உள்ளதை ஆங்கிலத்திற்கு translate பண்ண வேண்டும் இதனால் தேவையில்லாத நேர விரியம் ஆகும் இது வழக்குளை தாமத படுத்த வழி வகுக்கும், நிச்சயம் இதனால் ஏழைகள் பாதிக்க படுவார்கள், இதில் மிக முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த வக்கீல்கள் மற்ற மாநிலங்களோ அல்லது சுப்ரீம் கோர்ட் சென்றோ வாதாட முடியாத அளவுக்கு கொண்டு சென்று அவர்களை தமிழகத்திலேயே முடக்கி போட்டுவிடும்... நம் திறமைசாலிகளை நாமே முடக்கிக்கொள்ள கூடாது அதனால் நீதிமன்ற வழக்குகள் ஆங்கிலத்தில் வாதாடும் முறை தான் சரியாக இருக்கும், அப்படி தமிழில் தான் வாதாடுவேன் என்று அடம் பிடித்தால் அப்போது தமிழ் தெரிந்த நீதிபதிகள் அந்த வழக்குகளில் பணியாற்ற வேண்டும்....
Rate this:
17 members
0 members
33 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
08-ஏப்-201306:35:40 IST Report Abuse
Samy Chinnathambi ஜெயாவின் இந்த கோரிக்கை வரவேற்க பட வேண்டியது....அந்தந்த மாநில உயர் நீதி மன்றத்தில் வழக்காடுபவருக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்தால் அந்த மாநில மொழியிலேயே வாதாடலாம் என்ற சட்டம் நிச்சயமாக தேவை....குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னை வைத்து என்ன பேசி கொள்கிறார்கள் என்று அறியும் உரிமையும் தேவைபட்டால் தானே வாதாடும் உரிமையும் உண்டு...
Rate this:
24 members
1 members
26 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201303:50:30 IST Report Abuse
Baskaran Kasimani இப்படியே போனால் கர்நாடகத்தில் கன்னட மொழியில் வாதாடவேண்டும், திரும்பவும் கேள்விபதில்களின் சந்தேகத்தை மொழிபெயர்க்க வேண்டும். காலம் கடத்துவதற்கு நல்ல ஏற்பாடாக அமையும். வாழ்க அம்மாவின் நுண்ணிய அறிவு.
Rate this:
14 members
0 members
110 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
08-ஏப்-201303:24:29 IST Report Abuse
Sekar Sekaran அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழிகளை பயன்படுத்த தடை என்னவோ? உரையாடல் மொழி என்பது..சுலபமாய் இருக்கும்..அன்னிய மொழியை அது பொதுவான மொழியாய் தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தலாமே..வழக்குரைஞர்கள் சில சமயம் ஆங்கிலத்தின் நுட்பமான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த இயலாமல்..தங்களுக்கு தெரிந்த சாதாரணமான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்த நேரிடும்..அப்போது பாதிக்கப்படுவது..வழக்கு தொடுத்த சாமான்ய மக்கள்தானே..நடைமுறைக்கு ஒவ்வாத முறையை நாம் திணிக்கப்படும் நடைமுறையாய் பயன்படுத்துவதை தவிர்த்து..அம்மாவின் ஆலோசனையை ஏற்க்க வேண்டும்..அதுவே சரியான முடிவாகும்..
Rate this:
62 members
0 members
16 members
Share this comment
Elangovan Govindasamy - Jacksonville,யூ.எஸ்.ஏ
08-ஏப்-201306:22:50 IST Report Abuse
Elangovan Govindasamyதி மு க வினால் தான் நான் இந்தி படிக்கமுடியாமல் போனது நான் இரண்டு ஆண்டுகள் பீகாரில் பணிபுரிந்த பொது அக்கஷ்ட்டம் என்னவென்று என்னால் உணர முடிந்தது கேரளாவில் உள்ளவர்களுக்கு மூன்று மொழிகளிலும் சரளமாக பேசவரும் நமக்கு ஆங்கிலமும் சரியாக வராது இந்தியும் தெரியாது தமிழிலும் பாண்டித்தியம் கிடையாது இதற்கெல்லாம் யார் காரணம் இதோ இந்த கலைஞ்சர்தான் காரணம் குடியை அறிமுக படுத்தியதும் நம் முத்தமிழ் தலைவர் டாக்டர் மு க தான் நாட்டுக்கு எதாவது நல்லது அவரால் நடந்துள்ளதா என எண்ணி பார்க்கின்றேன் ஒன்றும் புலப்படவில்லை அய்யகோ என் அருமை தாயகமே இன்னும் எவ்வளவு நாளைக்கு இவர் அறிக்கையை படிகிறதோ தெரியவில்லை ...
Rate this:
32 members
0 members
13 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
08-ஏப்-201306:36:31 IST Report Abuse
Samy Chinnathambiநீங்கள் கூறுவது சரிதான்......
Rate this:
35 members
1 members
12 members
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:45:04 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் திரு. இளங்கோவன் கோவிந்தசாமி அவர்களே..கேரளத்தில் உள்ளவர்களுக்கு மூன்று மொழியும் சரளமாக பேச வரும் என்பது உண்மை அல்ல..அங்கு உள்ளவர்களின் ஹிந்தி புலமை 5 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்த ஒருவர் எந்த அளவு அளவு ஆங்கிலத்தில் பேச இயலுமோ அந்த அளவுதான் அவர்களும் அறிவார்கள்..இந்தி பேசுபவர்களோடு பணி புரியும் போது தான் அந்த மொழியில் பேச பாண்டித்தியம் பெற இயலும். இந்தி பேச்சு மொழியை இலங்கை நாட்டினர் கூட சுமார் 3 மாதத்தில் பயின்று விடுவார்கள்...நீங்கள் பீகாரில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்த போதும் பயில இயலாததற்கு ஆட்சியாளரை குறை கூறி பயனில்லை....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஏப்-201301:25:04 IST Report Abuse
தமிழ்வேல் சமீபத்தில் தங்கச்சி மொழிபிரச்சனையால் பெங்களூருவில் பட்ட கஷ்டம் ஞாபகம் வருகின்றது.
Rate this:
5 members
0 members
69 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஏப்-201301:24:07 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை..அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழி கோர்ட்டில் அனுமதிக்கப்படவேண்டும்..
Rate this:
36 members
0 members
15 members
Share this comment
Cancel
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201301:18:30 IST Report Abuse
MRSaminathan - Thirumangalam கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்களின் எல்லா நடவடிக்கையும் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவிடும் என்பதால் இதை வரவேற்பதா வேண்டாமா என குழம்புகிறது. இதி தேர்தலை நினைத்து சொன்ன காரியமாக இல்லாமல் தீர்மானமாய் செய்தால் நிச்சயம் நீங்கள் போற்றப்படுவீர்கள். அப்படியே இந்த டாஸ்மாக்கையும் எடுத்துடுங்களேன் மேடம். ப்ளீஸ்.
Rate this:
1 members
66 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்