TN fishermen arrest: Centre adopting soft approach,says Karunanidhi | கேரள முதல்வருக்கு அக்கறை : கருணாநிதி கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரள முதல்வருக்கு அக்கறை : கருணாநிதி கருத்து

Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கேரள முதல்வருக்கு அக்கறை : கருணாநிதி கருத்து,TN fishermen arrest: Centre adopting soft approach,says Karunanidhi

சென்னை : "தமிழக மீனவர்களை காப்பாற்றுவதில், கேரள முதல்வரின் உணர்வு, இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை' என, கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி - பதில் வடிவில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா நிவாரணம் அறிவித்துள்ளார். நிவாரணம் அறிவித்து, இரு மாதங்களாகியும், இதுவரை எவ்வித நிவாரண பணிகளும் துவக்கப்படவில்லை.கோடை காலம் துவங்கியதால், குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தீவிரமடையும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நடவடிக்கை குறித்து, அதிகாரிகள் சிந்திப்பதாக தெரியவில்லை.
கேரள மீனவர்கள் இருவரை சுட்டுக் கொலை செய்த, இரு இத்தாலி கடற்படையினர் குறித்து, மத்திய அரசு, அகில இந்திய அளவில் பல நிலைகளில் விவாதித்து, வேகமும், விறுவிறுப்பும் காட்டுகிறது.

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகின்றனர். இந்த விஷயத்தில், மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.இது வேதனை அளிக்கிறது. கேரள மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கை போல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழக மீனவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதும்; கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் வேறுபடுத்தி பார்க்காமல், நியாயமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறல்ல.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samraj - ulaanbaatar ,மங்கோலியா
08-ஏப்-201310:26:21 IST Report Abuse
samraj பயனில்லாமல் வாழ்ந்தவன் கதை எப்படி இருக்கும்,என்பதற்கு கருணா பற்றிய வாசகர் கருத்து ஒரு அடையாளம்.உரிமை கொடுத்தோம் உழைக்கவில்லை. 10 வருடத்து தேவைகளை மக்களுக்கு பூர்த்தி செய்ய கடுமையாக குடிகார எதிரிகளையும்,மத்திய அரசை உதவி செய்யவிடாமல் தடுக்கும் சகுநிகளையும் மீறி மக்கள் செல்வாக்கு ஒன்றையே பிரதானமாக கொண்டு உழைத்துக்கொண்டும் , வீரமாக எடுத்தகாரியத்தை நிறைவேற்றவும் போராடிகொண்டிருக்கிறார். அவருக்கு அக்கறை அதிகம். ஆடு தழையை மெல்லுவது போலே தமிழையும்,தமிழனையும் தின்னவேண்டாம்.கொஞ்சம் கருணை செய்யுங்கள். சாம்ராஜ் மொங்கோலியா
Rate this:
Share this comment
Cancel
Abdul Razzaq - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201310:22:58 IST Report Abuse
Abdul Razzaq மஞ்சள் துண்டு தாத்தா, நீங்கள் ஆட்சியில் இருக்கும் போதும் சிங்கள கடற்படையினர் நம் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டு கொன்றும், காய்படுத்தியும், சிறை பிடித்து சென்றனர். இன்றைய முதல்வரை குற்றம் சாட்டும் நீங்கள், அன்று தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்து கொண்டு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எல்லாம் நீங்கள் நடத்தும் நாடகமே நம் நாட்டு மீனவர்கள் ஏன் இலங்கை கடல் எல்லைக்கு சென்று மீன் பிடிக்க செல்கின்றனர்? அப்படி நம் மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்தால், சிங்கள படையினர் நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். மீனவர்கள் நம் நாட்டு எல்லையில் அல்லது சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்து, சிங்கள கடற்படையினர் சுட்டால், நம் நாட்டு கடலோர காவல்படையினர் என்ன புடிங்கி கொண்டு இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
08-ஏப்-201310:21:56 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana என்னமோ நேத்து நடந்த மாதிரி பேசுறிங்க ..கால காலமா நடந்துகிட்டு இருக்கு ..முன்னால் முதல்வரே நீர் என செய்தீர் ..முடிகிட்டு போங்கோ ..
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar Amalakanti - Hougang,சிங்கப்பூர்
08-ஏப்-201310:12:26 IST Report Abuse
Siva Kumar Amalakanti கேரளாவில் மீன் பிடித்த குமரி மாவட்ட மீனவர்களை தான் இத்தாலிகாரன் சுட்டான் தாத்தாவுக்கு குமரி மாவட்டம் , தமிழ்நாடில் இருப்பது தெரியாதோ
Rate this:
Share this comment
Cancel
Ali - Trichy,இந்தியா
08-ஏப்-201309:59:43 IST Report Abuse
Ali இரண்டு மீனவர்களில் ஒருவர் தமிழர் என்பது இங்கு உள்ளவர்களுக்கு தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201309:58:09 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மதுரை சென்னைக்கு இடையில் துரந்தோ எக்ஸ்பிரஸ் மாதிரி உங்கள் மகள் ஓடி கிட்டு இருக்காங்க. முதலில் அதை கவனிங்க.... ஒரு வேலை ரிடயர் ஆகிட்டதால உங்கள் வீட்டில் வியட்நாம் வீடு திரைப்படம் போல் செய்தித்தாளை நிறுத்தி விட்டார்களா? தினமலர் பேப்பர் பக்கத்துக்கு வீட்டுல கடன் வாங்கி பாருங்க...உங்க வீட்டு விவகாரம் சிரிப்பா சிரிக்குது....
Rate this:
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
08-ஏப்-201309:39:42 IST Report Abuse
lakshman நீ.. ஆட்சியில் இருந்தபோது தமிழக மீனவர்கள் மீது ஒரு தாக்குதலுமே நடக்கலியா என்ன? அப்போ எங்கே போயிருந்திங்க? மானாட மயிலாட பார்க்க போயிட்டிங்களா? உங்கள் வயசுக்கும் அனுபவத்திற்கும் உள்ள மரியாதையை இப்படி கண்ணா பின்னாவென்று பேசி கெடுத்து கொள்ளவேண்டாம்.கேரளாவில் இருப்பது காங்கிரஸ் கூட்டணி அரசு. இங்கு இருப்பது எதிர்க்கட்சி அரசு. கொடுப்பதை எல்லாம் தடுத்தவர் நீங்கள். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை சொல்லமுடியுமா ? லூசு .....ப நீ வயபோதிகிடு இருந்தாலே போதும் . நீ அதிகாரத்தில் இருக்கும் போது என்ன பூ ...கிட்டே .உனக்கு ஜால்ரா போடா வீரமணி லூசும் சுப.வீ மீசை யா பென்சிலால வரஞ்சவனும் ..... உன் மேல வெறியோட இருக்கோம் தமிழ் மக்கள் எல்லாரும் ஒழுங்கா பொய் அறிக்கை விடுறத நிருதிகொள்..
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201309:35:00 IST Report Abuse
saeikkilaar குழம்புன குட்டைல மீன் பிடிப்பது அய்யாவுக்கு கைவந்த கலை
Rate this:
Share this comment
Cancel
lakshman - Muscat,ஓமன்
08-ஏப்-201309:32:02 IST Report Abuse
lakshman கேரளாவில் இருப்பது காங்கிரஸ் கூட்டணி அரசு. இங்கு இருப்பது எதிர்க்கட்சி அரசு. கொடுப்பதை எல்லாம் தடுத்தவர் நீங்கள். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதை சொல்லமுடியுமா ?
Rate this:
Share this comment
Cancel
mohan - kumbakonam,இந்தியா
08-ஏப்-201309:30:09 IST Report Abuse
mohan 9 varudam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை