Explanation for AMMA scheme | "அம்மா' திட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் விளக்கம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"அம்மா' திட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் விளக்கம்

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (26)
Advertisement
"அம்மா' திட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் விளக்கம்

தமிழக அரசின், "அம்மா' திட்டத்துக்கு, வருவாய்த் துறை புது விளக்கம் கொடுத்துள்ளது. எதிர்க்கட்சியினர், கேள்வி எதுவும் எழுப்பிவிடக்கூடாது என்பதற்காகவே, ஆங்கிலத்தில் அதற்கான வாசக விளக்கம் தரப்பட்டிருக்கிறதோ என, எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவித்தொகை, நலத்திட்ட உதவி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, கலெக்டர் அலுவலகத்துக்கும், தாலுகா அலுவலகத்துக்கும் தொலை தூரங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுடைய சிரமத்தை போக்கும் வகையில், முதல்வரின் பிறந்த நாளையொட்டி, வருவாய்த் துறை சார்பில், அம்மா திட்டம் துவக்கப்பட்டது. அதிகாரிகளை தேடி மக்கள் வருவதைத் தவிர்த்து, மக்களை தேடி அதிகாரிகள் நேரடியாக வந்து மனுக்கள் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கம்.ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, வாரம் தோறும் செவ்வாய் கிழமையன்று, தாசில்தார், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அங்கு செல்வர். அக்கிராம மக்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே தகவல் அளிக்கப்படும்.அங்கு செல்லும் அதிகாரிகள், மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலப்பட்டா உள்ளிட்ட, 10 வகையான மனுக்களை பெறுவர். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த திட்டம், முதல்வரை, அவருடைய கட்சியினர் அன்புடன் அழைக்கும், "அம்மா' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சியினர், அ.தி.மு.க., அரசை கிண்டலடிக்கக்கூடாது என்ற நோக்கில், தற்போது, அம்மா என்பதற்கான ஆங்கில வாசகம் உருவாக்கப்பட்டு உள்ளது."அம்மா' என்பதற்கு (Assured Maximum Service to Marginal People in All villages) என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பெயரில், அந்த திட்டம் இல்லை, மக்களை தேடி வருவாய்த் துறை செல்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "எந்த பெயரில் இருந்தால் என்ன, மக்களுக்கு உண்டான சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே, எங்களுடைய நோக்கம்' என்றார்.
"மத்தியில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரியும் காங்கிரஸ் முன்னணி திட்டங்களுக்கு காந்தி, இந்திரா, ராஜிவ் என்று பெயர் சூட்டுவது போல, இதுவும் இருக்கட்டுமே' என, பொதுமக்கள் பலரும் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
10-ஏப்-201313:10:00 IST Report Abuse
MOHAMED GANI எதிர்க்கட்சியினர், அ.தி.மு.க., அரசை கிண்டலடிக்கக்கூடாது என்ற நோக்கில், தற்போது, அம்மா என்பதற்கான ஆங்கில வாசகம் உருவாக்கப்பட்டு உள்ளது."அம்மா' என்பதற்கு (Assured Maximum Service to Marginal People in All villages) என்று விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் சமாதியிலுள்ள ரெட்டை இலைக்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தை கேட்டு புல்லரித்து ,புளகாங்கிதமடைந்த மக்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள் . அதிகாரிகள் இதுமாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி செயல்பட்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
08-ஏப்-201315:19:43 IST Report Abuse
arabuthamilan அம்மா திட்டம் .... அப்படின்னா என்ன அர்த்தம்? அப்போ இனிமேல் நம்ம தமிழ் நாட்டில் அப்பா திட்டம்... தாத்தா திட்டம், அய்யா திட்டம்,,, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, மாமா, அத்தை , சித்தி, சித்தப்பா திட்டங்கள் என இனிமேல் திட்டங்கள வந்து குவியப் போகுதுன்னு சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
08-ஏப்-201314:43:45 IST Report Abuse
KKsamy ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
08-ஏப்-201314:24:22 IST Report Abuse
T.C.MAHENDRAN ஏற்கனவே எம்.ஜி.ஆர் சமாதியிலுள்ள இரட்டை இலை சின்னத்திற்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தைக்கேட்டு புல்லரித்து ,புளகாங்கிதமடைந்த மக்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள் .
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
08-ஏப்-201314:14:50 IST Report Abuse
T.C.MAHENDRAN ஏற்கனவே எம்.ஜி.ஆர் சமாதியிலுள்ள ரெட்டை இலைக்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தை கேட்டு புல்லரித்து ,புளகாங்கித மடைந்த மக்கள் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
08-ஏப்-201313:52:48 IST Report Abuse
Rangarajan Pg பெயரில் என்ன இருக்கிறது. மக்களுக்கு உதவும் வகையில் இருந்தால் சரி தான். எடுத்து கொண்ட வேலையை அந்த அந்த துறை சேர்ந்த அதிகாரிகள் செவ்வனே செய்து முடித்தால் இதை போன்ற மக்களை தேடி அதிகாரிகள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. எப்படியோ இதையாவது சொன்னது போல விரைந்து முடியுங்கள் ஆபீசர்களே. மக்கள் உங்களை போன்ற அரசு அதிகாரிகளிடம் மாட்டி கொண்டு முழி பிதுங்கி நிற்கிறார்கள். பணமும் வாங்கி கொள்கிறீர்கள், வேலையையும் செய்வதில்லை. இதை போன்ற திட்டங்களையாவது முழு மனதுடன் செயல்படுங்கள். அம்மா ஐயா ஆடு மாடு என்று பெயர்களில் என்ன இருக்கிறது. நாங்கள் கட்டும் வரி பணம் ஏழை மக்களுக்கு உதவினால் சரி தான்.
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
08-ஏப்-201312:30:17 IST Report Abuse
MJA Mayuram சும்மா ''Service for Useless Men, Mad and Allakkai '' அடுத்த திட்டம் ரெடி
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201311:45:30 IST Report Abuse
saeikkilaar திட்டம் எல்லாம் திடமா இருக்கு ஆனால் திண்ணமா நிறைவேறுமா ????
Rate this:
Share this comment
Cancel
azhagurajan - salalah,ஓமன்
08-ஏப்-201311:09:36 IST Report Abuse
azhagurajan நல்ல திட்டம் அம்மா வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
08-ஏப்-201310:54:46 IST Report Abuse
Kavee ஹ்ம்ம்.... இவங்க எல்லாம் சேவை செய்ய போறாங்களாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை