India delaying visa for Lankan envoy: report | இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் இழுத்தடிப்பு| Dinamalar

இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் இழுத்தடிப்பு

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 07, 2013 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இலங்கை தூதருக்கு இந்தியா பாடம் : விசா தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பு,India delaying visa for Lankan envoy: report

கொழும்பு : சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை தூதருக்கு, விசா தராமல், இந்தியா காலம் கடத்துவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009ல் நடந்த சண்டையின்போது, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்காத ராஜபக்ஷே அரசுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த பிட்சுகளும் சமீபத்தில் தாக்கப்பட்டனர்.சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன், அடிக்கடி போராட்டம் நடப்பதால், கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு தூதரகத்தை மாற்ற, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு, துணை தூதராக சபருல்லா கான் என்பவரை, அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.இவருக்கு விசா வேண்டி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, இலங்கை வெளியுறவு செயலர் அமுனகாமா கூறியதாவது:இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சபருல்லா கானுக்கு விசா கிடைத்த பின், சென்னையில் பொறுப்பேற்பார். ஆனால், அவருக்கு இதுநாள் வரை விசா கிடைக்கவில்லை. இந்திய அரசு, இதுவரை விசா தருவதில், இவ்வளவு தாமதம் காட்டியதில்லை. எனினும், விசா கிடைக்கும் வரை காத்திருப்போம்.இவ்வாறு, அமுனகாமா கூறினார்.

இதுவரை, இலங்கை கூறிய கருத்துகளை ஏற்று வந்த இந்திய அரசு, சமீபகாலமாக, அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம், அதிபர் ராஜபக்ஷேயின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவுக்கான துணை தூதருக்கு விசா வழங்க மறுக்கப்படுகிறது என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik Karthik - Riyadh,சவுதி அரேபியா
08-ஏப்-201314:32:50 IST Report Abuse
Karthik Karthik இது எதுக்குன்னா,தூதர் னா அந்த வேலைய மட்டும் பாக்கணும்,தூண்டி விற்ற வேலையெல்லாம் பாக்க கூடாது.அதுக்குதான் இந்த visa delay.
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
08-ஏப்-201313:19:10 IST Report Abuse
maravan ஒருவேலை இலங்கையை பார்த்து இந்திய பயபடுகிறது என்று நினைகிறேன்..இந்த மோசமான காங்கிரஸ் ஆட்சியில் எல்லாம் சகஜம்....மறவன்
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201311:39:31 IST Report Abuse
saeikkilaar இது படம் , பாடம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201311:35:28 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இதிலே என்ன பாடம் வேண்டிக்கிடக்குது..அந்த தூதர் சிங்களவன் அல்ல..இலங்கை முஸ்லிம்..சிங்களவனா இருந்தால் விசா கொடுத்திருப்பார்கள்...அந்த முஸ்லிம் துணை தூதுவருக்கு தமிழ் தெரியும் தெரியும் என்பதால் இழுத்து அடிக்கிறார்களோ ?
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
08-ஏப்-201310:40:59 IST Report Abuse
Venkatesan Jayaraman இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டறன்கலாமா.... நம்புங்கோ சாமியோ
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
08-ஏப்-201310:16:03 IST Report Abuse
Tamilan எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு...............
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
08-ஏப்-201308:54:51 IST Report Abuse
PRAKASH பழிவாங்குறோம் மாம் ...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:19:58 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இதுக்கும் சேர்த்து இன்னைக்கு ஒரு 100 பேரை எக்ஸ்ட்ரா வாக அங்கே போட்டு தள்ளிடுவாங்க...
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
08-ஏப்-201307:05:26 IST Report Abuse
Appan ஈழ பிரச்சினை குறித்து இப்போ காங்கிரஸ் கொஞ்சம் விழித்திருக்கிறது.போன வாரம் வாசன் , இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்தது கொள்ளக்கூடாது என்றார். நேற்று ஜெயந்தி நடராசன் ,எம்.பி குழு சிறிலங்கா செல்லக்கூடாது என்கிறார் இந்தியா பிரபாகரனை அழிக்க வெண்டும். இதில் வேறு கருத்து இல்லை. இதற்க்கு அமேரிக்கா போல் Perision Bomb போட்டு கொன்றிருக்கல்லாம். அதை விட்டு இந்த வேலையை ராஜபக்ஷேவிடம் இந்தியா கொடுத்து ,உதவியும் செய்தது. புத்திசாலித்தனமாக ராஜபக்ஷே , பிரபாகரனை கொன்றதோடு , ஈழ தமிழினத்தையும் அழித்து விட்டான்.காங்கிரசிற்கு இப்போ 4 வருடம் கழித்துத்தான் இது தெறிந்தது. இதோடு ராஜபக்ஷே சீன, பாகிஸ்தான் ..என்று இந்தியாவை மிரட்டுகிறான் .சிறி லங்காவில் நடப்பது பாசிச குடும்ப ஆட்சி.இதை சிங்களர்களே ஒழிக்க வெண்டும். இல்லை சிறி லங்க கம்போடியா போல் பட்,ஈரக் சதம் மாதிரி ஆகிவிடும்.இந்திய மீனவர்கள் இப்படி கொல்லப்படுவதற்கு காரணம் ,பாதுகாப்பு மந்திரி ஆந்தொனியெ காரணம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு பாதுகாப்பு மந்திரியாக இருந்த பொது , மீனவர்களுக்கு பாது காப்பு கொடுத்தார். ஆனால் இந்த அந்தொனியியொ, மலையாளி மீனவர் கொல்லப்பட்டால் கோபம் கொள்கிறார் . தமிழ மீனவர்கள் கொல்லப்பட்டால் சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறார். இதேர்க்கேல்லாம் முக உடந்தையாக இருந்தார். இப்போ மத்தியிலிருந்து ராஜினாமா செய்து, ,தமிழக மீனவர்களை சிறி லங்க கொல்வது தப்பு என்கிறார். அதோடு கேரளா மாதிரி ஜேஜே , இந்த மீனவர் பிரச்சினையை டெல்லிக்கு எடுத்து செல்ல வெண்டும் என்கிறார்.நேற்று வரை மீனவர்கள் கொல்வதர்க்கு உடந்தையாக இருந்து விட்டு இப்போ திடீர் என்று ,இது தப்பு என்கிறார்.ஈழ மக்களின் இந்த நிலைக்கு காரணம் முக.9 வருடம் டெல்லியிலாட்சி செய்து விட்டு இப்போ ஐயோ கொய்யோ என்று குதிக்கறார். தமிழர்கள் கேனையன் என்று முக நினைக்கிறார்.
Rate this:
Share this comment
karuppaiah ashokumar - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201307:48:11 IST Report Abuse
karuppaiah ashokumarஇல்லை, தேர்தலுக்காக நடிக்கிறது. தேர்தல் முடிந்தால், காட்டுகுரல் கத்தினாலும் திரும்பி பார்க்காது. காங்கிரஸ் மட்டுமல்ல, இங்கே உள்ள ஜே.ஜே, மு.க எல்லாருக்கும் பொருந்தும். ...
Rate this:
Share this comment
Cancel
rajkumaar - bangalore  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201306:43:43 IST Report Abuse
rajkumaar தி்ருப்பி அடிக்க துப்பு இல்ல விசா கொடுக்காம இழுத்து அடிக்கின்க இதுலம் சின்ன புள்ள தனம இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை