Srilankan reffugges travel in illegal ferry | கள்ளத்தோணியில் பயணமாகும் இலங்கை அகதிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தோணியில் பயணமாகும் இலங்கை அகதிகள்

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கள்ளத்தோணியில் பயணமாகும் இலங்கை அகதிகள்

நாகப்பட்டினம் : நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, கள்ளத் தோணி மூலமாக ஆஸ்திரேலியா செல்ல முயலும், இலங்கை அகதிகளின் நிலை தொடர்கதையாகி உள்ளது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து, எவ்வித வசதியும் இல்லாத மிகச் சிறிய படகுகள் மூலம், ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி, தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம், மோசடி பேர் வழிகள், பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, படகுகளில் அழைத்துச் செல்வது, தொடர் கதையாகி விட்டது.

இந்த ஆபத்தான படகு பயணத்தில், அவ்வப்போது வழி தெரியாமலும், படகு என்ஜின் பழுது, எரிபொருள் தட்டுப்பாடு என பல காரணங்களால், நடுக்கடலில் சிக்கித் தவிக்கும், இலங்கை அகதிகள் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக உள்ளன.இது போன்ற கள்ளத் தோணி பயணத்தில், ஆஸ்திரேலியா சென்று, நல்ல வாழ்க்கை, வேலை என, அமையப் பெற்றவர்கள் தரும், வாக்குறுதியை நம்பியே, ஏஜன்டுகளிடம் பணம் கொடுத்து, துணிந்து பயணிக்கும் இலங்கை அகதிகள், நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை வரும் போது, மீனவர்கள் மற்றும் கடற்படை, கடலோர காவல் படையினரால் காப்பாற்றப்படும் போது மட்டுமே, இவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளின் கவனம் படுகிறது.

ஏஜன்டுகளின் நெட்வொர்க் : சர்வதேச அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் மிகப்பெரிய, "நெட்வொர்க்' உள்ள கள்ளத்தோணி ஏஜன்டுகள், தமிழக முகாம்களில் அடைக்கலமாகியுள்ள இலங்கை அகதிகளைத் தொடர்பு கொண்டு, ஒருங்கிணைத்து, கள்ளத் தோணிகளில் அனுப்பி வைக்கும் வரை, போலீசாருக்கு, "எதுவும் தெரியாமல்' போய்விடுகிறது.

வேளாங்கண்ணியில் 120 பேர் : தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள, இலங்கை அகதிகள் முகாம்களில் இருந்து, 20 குழந்தைகள், 21 பெண்கள்,79 ஆண்கள் என, 120 பேரை கடந்த, 1ம் தேதி, வேளாங்கண்ணிக்கு வரவழைத்த ஏஜன்டுகள், அங்குள்ள தனியார் லாட்ஜ்களில் தனி தனி குழுவாக தங்க வைத்துள்ளனர். 5ம் தேதி நள்ளிரவு வேளாங்கண்ணி அருகில் உள்ள, தெற்கு பொய்கைநல்லூர் சவுக்குத் தோப்பில் அகதிகளை ஒருங்கிணைத்து, அங்கிருந்து பைபர் படகில், 15 நபர்களாக ஏற்றிச் சென்று, கடலில் சில மைல்களுக்கு அப்பால் நிறுத்தி வைத்திருந்த, விசைப்படகில் ஏற்றியுள்ளனர்.அகதிகளிடம், 60 நபர்கள் மட்டுமே படகில் ஆஸ்திரேலியா செல்வதாகவும், அனைத்து வசதிகளுடன் கூடிய, பெரிய படகு என்றும் ஏஜன்டுகள் கூறியுள்ளனர். படகில் ஏறியப் பின் தான் அகதிகளுக்கு படகில், 120 பேரை ஏற்றியுள்ளதும், பழைய படகு என்பதும் தெரியவந்துள்ளது.

அகதிகள் தகராறு : இதையடுத்து படகை இயக்கியவரிடம் அகதிகள் தகராறு செய்துள்ளனர். படகோட்டி அங்கிருந்து மொபைல் போனில் ஏஜன்டை தொடர்பு கொண்டுள்ளார். சற்று நேரத்தில், அகதிகள் இருந்த படகு அருகில் வந்த பைபர் படகில், அகதிகளின் படகில் இருந்து, படகோட்டி கடலில் குதித்து ஏஜன்டுகள் வந்த பைபர் படகில் ஏறி தப்பியுள்ளனர்.நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த,120 இலங்கை அகதிகளையும், இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு, நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆண் அகதிகளுக்கு சிறை : நேற்று மாலை அகதிகளிடம் விசாரணை முடிந்த பிறகு, 75 ஆண்களை மட்டும், நாகை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.21 பெண்கள், 20 குழந்தைகள், 4 சிறுவர்களை மட்டும் பாதுகாப்பாக அவரவர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


கண்டு கொள்ளாத போலீஸ் :

ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத் தோணியில் அகதிகளை அனுப்பும் ஏஜன்டுகள், நாகை மாவட்ட கடலோரத்தைக் குறி வைத்துள்ளது ஏன், ஏஜன்டுகளுக்கு படகுகளை விற்பனை செய்வோர், வாடகைக்கு விடுவோரின் தொடர்பு என்ன, இலங்கை அகதிகள் வேளாங்கண்ணியில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தும், உளவு போலீசார் கண்டு கொள்ளாமல் விட்டது, எப்படி என்று, மத்திய புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
08-ஏப்-201315:36:18 IST Report Abuse
விருமாண்டி வந்தாரை வாழவைக்கும் நம் தமிழ்மக்களோ , நமக்கு குடிக்க தண்ணீர் இல்லையென்றாலுùம் பரவாயில்லை ஆனால்ல்ல் ..., இலங்கை தமிழன் கு.....டி கழுவ பண்ணீர் தான் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பது ஏன் என்று புரியவில்லை.. போலி பிரசாரம் செய்து நம் தமிழ்நாட்டு மக்களை இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தூண்டிவிட்டால் நம் தமிழ்நாட்டு பிரச்சனையான குடிநீர் பிரச்சனை மீனவர் பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை இதை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பது அரசியல்வாதிகள் எண்ணம் ..
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
08-ஏப்-201314:55:19 IST Report Abuse
விருமாண்டி நம் மக்களுக்கு சோறு போட்ட விவசாயிகளையும் தினமும் வஞ்சர மீனையும் நண்டையும் தின்னுட்டு நன்றி இல்லாம இலங்கை தமிழனுக்காக உயிர்விடுவது வேடிக்கை .இவர்கள் என்னமோ நம் இந்திய திருநாட்டிற்கு உயிர் தியாகம் செய்தவர்கள் போல் இவர்களுக்கு போராடுவது வேடிக்கையான விஷயம்
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201311:22:48 IST Report Abuse
saeikkilaar நம்ம மீனவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து அனுப்பனும் அப்பதான் சரி பட்டு வரும்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-ஏப்-201310:55:00 IST Report Abuse
mirudan அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று ஒரு கிழவி உலக நடப்புகள் தெரியாத அந்த காலத்தில் உளறி வைத்து போய் விட்டார். தமிழராய் பிறந்து விட்டால் நாதியற்ற ஜென்மமாக போய் விட்டது >
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
08-ஏப்-201310:49:52 IST Report Abuse
Kavee இங்கே இருக்குற உள் நாட்டு அகதிகளுக்கே வாழ்வாதாரம் இல்லை. அவங்க அப்படியாவது போய் ஒரு நல்வாழ்வை தேடிக்கட்டுமே விடுங்கப்பா வாழ விடுங்க. போராடுரவங்களுக்கு தெரியும் எப்படி வாழணும்னு. விவரம் புரியாம நாம்தான் கத்திக்கிட்டு இருக்கோம் அவங்க எல்லாம் நல்ல விவரமாத்தான் இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
08-ஏப்-201307:28:49 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் உண்மை நிலை என்ன? வங்கதேசத்தினரும் தொடர்ந்து இந்தியாவுக்குள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வங்கதேச அகதிகளில் பலர் அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக மாறி, இந்தியர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி கலந்துவிடுகின்றனர். இந்தியாவில் பணம் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது சிரமம் அல்ல என்பதால், அந்த வாக்கு வங்கியை அசாம் மாநில அரசியல்வாதிகள் தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக அவர்களுக்கு காங்கிரசின் ராஜ மரியாதை ஆனால் இலங்கை அகதிகளையோ பயங்கரவாதிபோல் மோசமான முகாம்களில் அடைத்துவைத்து சித்திரவதை செய்கிறது அரசு அவர்களே மைனாரிட்டி மதத்தினராக இருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? ஏமாளிகள் இந்துத் தமிழர்களே
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
08-ஏப்-201307:14:46 IST Report Abuse
ஆரூர் ரங இங்கு அவர்களை நல்ல வேலைகளுக்கு செல்ல அரசு அனுமதிப்பதில்லை டிரைவிங் லைசென்ஸ் கொடுப்பதில்லை பாஸ்போர்ட் கிடையாது போலீஸ் தரும் தொந்தரவுகளால் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளவே தயங்குகின்றனர் முகாம்களில் அடைத்து தீவீரவாதிகள் போல நடத்துகின்றனர் ஆக மொத்தம் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் சித்திரவதைதான் அதே நேரம் நம்முடன் எந்தத் தொடர்புமில்லாத திபெத் அகதிகளை மட்டும் முழுசுதந்திரத்துடன் ராஜா போல நடத்துகின்றது இந்திய அரசு . தமிழனாய்ப் பிறப்பது அத்தனை கேவலமா?
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
08-ஏப்-201305:57:40 IST Report Abuse
G.Prabakaran வசதியான இலங்கை தமிழர்கள் விமானம் மூலம் அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டும் உணவகங்கள் நடத்துவதன் மூலமும் அங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள் அவர்கள் இலங்கையில் மீண்டும் அமைதி திரும்புவதை ஒருபோதும் விரும்புவதில்லை. என்னிடம் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் என் அயல் நாட்டு பயணங்களின் போது அவர்களின் இந்த விருப்பத்தை சொன்னது. வீடும் நிலமும் விடுதலை புலிகள் ஆக்கிரமித்ததாலும் குழந்தைகள் பாதுகாப்பு கருதியும் (சிறுவர் சிறுமியர்களை விடுதலை புலிகள் பள்ளி களின் வாசலிலேயே கடத்துவதால்) வெளி ஏறி விட்டதாக இலங்கை தமிழர்கள் சொன்னார்கள்.மிகவும் ஏழைகளாக உள்ள இலங்கை தமிழர்கள் வசதியான வாழ்வை நாடி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை agentugalidam கொடுத்து மிக ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
08-ஏப்-201304:23:08 IST Report Abuse
NavaMayam வைகோ , செந்தமிழ் செல்வம் போன்ற ஈழ தமிழ் விசுவாசிகள் எல்லாம் என் இந்த இலங்கை அகதிகள் முகாமுக்கு செல்லவதில்லை.... அங்கு சென்று அவர்களின் வசதிகளை பெருக்குவதில்லை ... இங்கு வாழ நாதி இல்லாமல் தானே உயிரை பயணம் வைத்து கள்ள தொனியில் செல்கின்றனர்.... பின் இலங்கைக்கும் நம் தமிழகத்துக்கும் என்ன வித்தியாசம் ....செத்தவங்களுக்காக போராடுவதை விட்டு இருகிறவங்களை காப்பாத்த பாருங்க....அக்கரையில் இருக்கும் தமிழர்மேல் காட்டும் அக்கறையை , இக்கரையில் உள்ள தமிழர் மீதும் காட்டுங்கள்....ஒருவேளை அவர்களுக்கு இந்திய ஒட்டுருமை இல்லையோ
Rate this:
Share this comment
Sri Daran - Vizag,இந்தியா
08-ஏப்-201314:43:11 IST Report Abuse
Sri Daranமிகச்சரியான கருத்து Nava . தமிழக சட்டப் பேரவையில் இவர்கள் அனுபவிக்கும் அவலங்களை பற்றி பேச நாதி இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
08-ஏப்-201303:57:50 IST Report Abuse
Rss இவர்களுக்கு இலங்கை பிரச்சனை மட்டும் தான் பிரச்சனையாக தெரியும் . .நம் மீனவர்கள், விவசாயிகள் எல்லாம் பாவம் செய்தவர்களா ..? பல வருஷமா இதையே அரசியல்வாதிகள் சொல்லி சொல்லி நம் மக்களையும் ஏமாற்றிவிட்டார்கள் .. இவர்கள் இலங்கை தமிழன் பேச்சை நிறுத்தினால்தான் தமிழ்நாடு உருப்படும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை