E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மதுரை கூலிப்படைகள் ரொம்ப "பிசி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2013
00:58
பதிவு செய்த நாள்
ஏப் 08,2013 00:01

மதுரை : தென்மாவட்டங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்தின் பார்வையையே தங்கள் பக்கள் "ஈர்த்து' வருகின்றனர் மதுரை கூலிப்படையினர். அரசியல், முன்விரோதம், பழிக்குப்பழி வாங்குதல் என, எந்த கொலை என்றாலும், அதில் மதுரை கூலிப்படையின் பங்கு இருப்பதால், எப்போதும் "பிசி'யாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

போலீஸ் கணக்கின்படி, மதுரையில் உள்ள பிரபல ரவுடிகளின் எண்ணிக்கை 39. சில ஆண்டுகளுக்கு முன் வரை, கட்டப்பஞ்சாய்த்து செய்வது; ஆட்களை கடத்தி பணம் பறிப்பது; தொழிலுக்கு இடையூறாக இருந்தால் "போட்டு' தள்ளுவது என இவர்களின் "பணி' இருந்தது. இதில் சிலர், அரசியல்வாதிகளின் நட்பை பெற்றதால், அரசியல் கொலைகளை செய்ய ஆரம்பித்தனர். உதாரணமாக, முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, கிருஷ்ணன் ஆகியோர் "வாக்கிங்' சென்றபோது, கூலிப்படையால் கொலை செய்யப்பட்டனர். திருச்சியில் ராமஜெயத்தையும் மதுரை கூலிப்படையே கொன்றிருக்கக்கூடும் என சந்தேகம், இன்னும் போலீஸ் மத்தியில் நீடிக்கிறது.

பின், ரவுடிகளுக்கு இடையே "தொழில்' போட்டியால், அரசியல் கொலைகள் மட்டுமின்றி, "அட்வான்ஸ்' கொடுத்தாலே போதும், சிலரின் தனிப்பட்ட விஷயங்களுக்காககூட கொலை செய்ய ஆரம்பித்தனர். பிரபல ரவுடிகள் எல்லாம் பாதுகாப்பு கருதி "உள்ளே' உள்ள நிலையில், அவர்களது ஆட்கள் கச்சிதமாக காரியத்தை முடித்து வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள், வசதியாக வாழ வேண்டும் என நினைப்பவர்களை "மூளை சலவை' செய்து, தங்களுடன் சேர்த்து வருவதால், மதுரை கூலிப்படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் பா.ம.க., இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன், தி.மு.க., செயற்குழு உறுப்பினர் "பொட்டு' சுரேஷ், ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க., கவுன்சிலர் குமரன் கொலைகளில் தொடர்பு உடையவர்கள், கூலிப்படையில் புதிதாக சேர்ந்தவர்கள். பரமக்குடி பா.ஜ., செயலாளர் முருகன் கொலை வழக்கிலும், மதுரையை சேர்ந்தவர்களே கூலிப்படையாக செயல்பட்டுள்ளனர். "இவர்கள், வழக்கு செலவுக்காக மீண்டும் குற்றங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில், தமிழகம் முழுவதும் வலம் வந்து, எப்போதும் "பிசி'யாகவே இருக்கின்றனர்' எனக் கூறும் போலீசார், அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HARINARAYANAN - Chennai,இந்தியா
08-ஏப்-201313:02:26 IST Report Abuse
HARINARAYANAN சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே கூலிப்படை பிசியாக இருப்பதாக கூறுவது இந்த அரசின் செயல்திறனை காட்டுகிறது........
Rate this:
1 members
0 members
22 members
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
08-ஏப்-201312:12:16 IST Report Abuse
Rangarajan Pg ரௌடிகள் என்று நன்றாக தெரிகிறது. கூலிபடையை சேர்ந்தவர்கள் யார் யார் என்று காவல் துறையினருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இவர்கள் செய்யும் காரியங்கள் எந்த வகையை சேர்ந்தது என்றும் தெரிந்திருக்கிறது. ஆனால் எந்த முன்னெச்சரிக்கை கைது இல்லை, எந்த வித PROTECTION நடவடிக்கையும் இல்லை. THEY ARE LEFT TO WALK FREE ON A ING SPREE . இவர்கள் எல்லோரும் யாரையாவது கொன்ற பிறகு தான் காவல் துறை நடவடிக்கை எடுக்கும் பிறகு தான் குற்றவாளிகளை வலைவீசி தேடும். ""வருமுன் காப்போம்"" என்ற பழமொழி இவர்களுக்கு சரி வராது. ""வந்த பின் பார்ப்போம்"" என்று நினைத்து கொண்டு தான் இவர்கள் வெறுமனே உட்க்கர்ந்திருக்கிரார்கள். இப்படி காவல் துறையினர் சும்மா வேலை செய்யாமல் இருப்பதால் தான் ரௌடிகள் பிசியாக இருக்கிறார்கள். என்னத்தை சொல்ல.
Rate this:
0 members
0 members
25 members
Cancel
R Bhaskaran - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201311:34:16 IST Report Abuse
R Bhaskaran இதற்க்கு முதல் காரணமே அஞ்சாநெஞ்சன் தான். இதன் மூல காரணம் கருணா
Rate this:
10 members
0 members
26 members
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
08-ஏப்-201310:51:40 IST Report Abuse
PRAKASH வேலை இன்மை படிப்பறிவின்மை .. இரண்டும் தான் இதற்கெல்லாம் மூல காரணம்
Rate this:
3 members
0 members
17 members
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-ஏப்-201310:48:19 IST Report Abuse
mirudan சிதம்பரம் அவர்கள் கூலி கொலை செய்பவர்களுக்கு சர்வீஸ் டாக்ஸ் சட்டத்தின் படி பதிவு செய்து அவர்களிடம் இருந்து சர்வீஸ் டக்ஸ் கூட வசூல் செய்யலாமே ? தேவை இல்லாமல் போலிசுக்கு மாமூல் கொடுத்து, மாமூல் கொடுக்க முடிய வில்லையென்றால் மாட்டி கொள்கிறார்கள், சட்ட படி தொழில் ஆகி விட்டால் தேவையற்ற பயம் அவர்களுக்கு இருக்காது அல்லவா ?
Rate this:
1 members
0 members
29 members
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
08-ஏப்-201310:46:57 IST Report Abuse
PRAKASH வேலை இன்மை படிப்பறிவின்மை .. இரண்டும் தன இதற்கெல்லாம் மூல காரணம்
Rate this:
3 members
2 members
4 members
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
08-ஏப்-201310:44:16 IST Report Abuse
PRAKASH வேலை இல்ல திண்டாட்டம், படிப்பறிவின்மை .. இரண்டும் தான் இதற்கெல்லாம் மூல காரணம்
Rate this:
1 members
0 members
2 members
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
08-ஏப்-201310:09:23 IST Report Abuse
s. subramanian மதுரையில் மட்டுந்தான் இந்த நிலை என்றால் எல்லாம் அந்த அஞ்சா நெஞ்சன் இருக்கும் தைரியமோ என்னவோ... . அதை விட்டுவிட்டு சும்மா ரவுடிகள் பிசி என்றால் அவரின் மரியாதை என்னாவது.
Rate this:
3 members
0 members
10 members
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
08-ஏப்-201309:43:00 IST Report Abuse
saeikkilaar மதுரை என்றால் நம்ம நீனைவுக்கு வருவது மதுரை மல்லி , மரிகொழுந்து, மீனாச்சி அம்மன் , வைகை, சித்திரை திருவிழா என்று பல பெருமை கொண்ட மா நகரம் என்று ரௌடிகளின் தலை நகரமாக உள்ளது . இதறுக்கு யார் காரணம் ??? நம்ம அரசியல் வியாதிகள் தான்
Rate this:
1 members
0 members
19 members
Cancel
Sangamithra.R - Seoul,தென் கொரியா
08-ஏப்-201309:26:52 IST Report Abuse
Sangamithra.R This is kind of distortion among people. If they could find a job, thry dont need to come to this kind of crimes. Creating job opportunities is important role here. Government should give assurance to employ all so that to reduce such crimes. Crimeless country is a 100% grown and developed country.
Rate this:
1 members
0 members
74 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.