Finance Ministry mulls new intel wing to check service tax evasion | சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (15)
Advertisement
சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு,Finance Ministry mulls new intel wing to check service tax evasion

புதுடில்லி : சேவை வரி கட்டாமல் ஏய்ப்பவர்களால், அரசுக்கு ஏற்படும் வரி இழப்பைத் தடுக்க, பிரத்யேக புலனாய்வு பிரிவு ஒன்றை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு, நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் தான், வருவாய் வருகிறது. இதில், மறைமுக வரிகளில் ஒன்றான, சேவை வரி மூலமான வருவாயை, அரசு அதிகம் எதிர்பார்த்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சேவை வரி வரம்புக்குள் பல்வேறு துறைகள் கொண்டு வரப்பட்டன.

விமானப் பயணம், நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடுவது, ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவது, கிளப் மற்றும் விருந்தினர் மாளிகையில் தங்குவது ஆகியவை உட்பட, 100க்கும் மேற்பட்ட இடங்கள் வருகின்றன. இதில், 12 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது.இவ்வாறு வசூலிக்கப்படும் சேவை வரியானது பயனீட்டாளர்கள், வாடிக்கையாளர்களிடமே, நிறுவனங்கள் வசூலிக்கின்றன. ஆனால், வசூலிக்கப்பட்ட சேவை வரியை அரசுக்கு முறையாக செலுத்தாமல், பல நிறுவனங்கள் முறைகேடு செய்கின்றன. அந்த வகையில், அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய் ஒழுங்காக வருவதில்லை.கடந்த, 2012 - 13ம் நிதி ஆண்டின், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், 9,800 கோடி ரூபாய்க்கு சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இது, 2011 - 12ம் ஆண்டு இதே காலகட்டத்தில், 6,000 கோடி ரூபாய்க்கு ஏய்ப்பு நடந்துள்ளது என, மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் அளித்துள்ள புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவை வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க, சேவை வரி ஏய்ப்புக்கு எதிராக, புது புலனாய்வுத் துறை இயக்குனரகத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, வருவாய் புலனாய்வுத் துறைக்கு என்று டைரக்டர் ஜெனரல் (டி.ஆர்.ஐ.,), மத்திய கலால் புலனாய்வு டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.சி.இ.ஐ.,) என இரண்டு அமைப்புகள் உள்ளன.டி.ஆர்.ஐ., அமைப்பு, சுங்க வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்கும் பணியிலும், கலால் மற்றும் சேவை வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை கண்டுபிடிக்கும் பணியில், டி.ஜி.சி.இ.ஐ., ஈடுபட்டு வந்தது. இதில், சேவை வரியை மட்டும் கவனம் செலுத்தும் வகையில் புதிய புலனாய்வு அமைப்பு செயல்படும். இந்தாண்டுக்கான, மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்து பேசிய, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், சேவை வரி செலுத்துபவர்களாக, மொத்தம் 17 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஏழு லட்சம் பேர் மட்டுமே சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
08-ஏப்-201313:23:40 IST Report Abuse
Uthukkaattaan யாருக்கும் தெரியாததல்ல . உடனடியாக எல்லா MLA MP மந்திரிகள் கௌன்சிலர்கல் முதல் எல்லா பெரிய தலைகள் வீட்டிலும் அவர்கள் சின்ன வீடு உள்பட ரெய்டு விட்டால் தேவைக்கு மேலாகவே வரி கிடைக்கும். இது போன்ற புதிய அமைப்புக்கள் எல்லாம் எதிர்கட்சிகளை பயமுறுத்தவும் நடுத்தர வியாபாரிகளை பிச்சைகாரர்கள் ஆக்கும் சூப்பர் திட்டம். ஜமாயுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Govindarajan - chennai,இந்தியா
08-ஏப்-201310:43:17 IST Report Abuse
Govindarajan அரசாங்கம் எப்படி கண்டுபிடிக்கும் .......வரி ஏய்பவர்களை நம்பி தான் அரசு அதிகாரிகள் உள்ளனர் .....அரசாங்கமும் உள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
08-ஏப்-201309:53:23 IST Report Abuse
Kumaresan P இது போன்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வயிற்றில் அடிக்காத எந்த ஒரு விஷயமும் வரவேற்ககூடியவைதான். ஆனால் இந்த பொறுப்புணர்ச்சி மிகவும் தாமதம் ....
Rate this:
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
08-ஏப்-201309:01:56 IST Report Abuse
Wilsonsam Sp வெளிநாடுஹளில் ஒருவன் ஒருவீடு அல்லது நிலமோ வைத்திருந்தால் அதன் மதிப்பிற்கு தஹுந்தாற்போல் வரிகட்டவேண்டும் வந்கிஹளில் பணம் வைத்திருந்தாலும் அதற்கு தஹுந்தாற்போல் வரிகட்டவேண்டும் பினாமி பெயர்ஹளில் வைத்திருந்தாலும் யாருடைய பெயரில் உள்ளதோ அவனும் அதற்கு தஹுந்தாற்போல் வரிகட்டவேண்டும் இதை அரசாங்கம் கட்டாய படுத்தினால் பினாமி என்ற சொல் இந்தியாவில் ஒழியும் இடத்தை வளைத்து போடும் அரசியல் வாதியும் பயப்புடுவான் நிலங்களின் விளையும் சாதாரண ஏழை மக்கள் வாங்கும் அளவிற்கு குறையும்
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201311:27:37 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சின்ன வீடு போலத்தான் பினாமி பெயரில் சொத்து வைப்பதும்.....
Rate this:
Share this comment
deva - paris,பிரான்ஸ்
08-ஏப்-201314:47:01 IST Report Abuse
 devaஅரசியல் வாதிதனே அங்கே வரி கட்டாமல் ஏமாற்ற்றுவதில் முதலிடத்தில் உள்ளன், பிறகு எப்படி இந்த வரி ஏய்ப்பை தடுக்கமுடியும்....
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
08-ஏப்-201306:27:20 IST Report Abuse
saraathi மிக மிக தாமதமாக அரசு உணர்ந்துகொண்ட விஷயம் இது.அனைவரும் சொல்வதுபோல நாட்டில் இன்று முறையாக வரிகட்டுபவர்கள் சம்பளத்திற்கு வேலைசெய்வோர் மட்டுமே.ஆண்டுதோறும் அரசும் இவர்களிடமிருந்து எவ்வளவு கசக்கிபுழிய முடியுமோ அவ்வளவு கசக்கிபுழிவதில்தான் அக்கறை காட்டுகிறது.வளந்த நாடுகளில் அரசாங்கங்கள் செழிப்பாக உள்ளன.மக்கள் சாதாரணமாக உள்ளனர்.இந்தியாவில் பல மக்கள் செழிப்பாக உள்ளனர் .ஆனால் அரசாங்கங்கள் கடனில் இருக்கின்றன.புதிதாக நேரடி மற்றும் மறைமுக வரிகளை விதிப்பதற்கு பதில் இப்போது விதிக்கப்பட்ட வரிகளை முறையாக வசூலிக்க ஆரம்பித்தாலே வரும் காலங்களில் சேவைவரியை குறைத்துவிட வாய்ப்பு உள்ளது.ஏனெனில் நம்மிடம் வருமானம் அதிகம்.ஆனால் முறையான கணக்குகள் இல்லை.இப்பொது கறுப்பில் உள்ளது வெள்ளையில் வந்தால் நாம் வல்லரசுதான்.அரசு கவனம் செலுத்தவேண்டிய விசயங்களுள் இன்னொன்று வெளிநாடுகளில் வேலைசெய்வோர் நம் நாட்டிற்க்கு அனுப்பும் பணத்தை கண்காணிப்பது.இந்தவகையில் ஒவ்வொருமாதமும் பலகோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு அந்நிய செலவாணி இழப்பு ஏற்ப்பட்ட்டுவருவதை அரசு உணரவேண்டும்.வெளிநாடுகளில் இருந்து இந்திய கிராமப்புரமக்களுக்கு எளிதில் பணம் அனுப்பும் வசதிகளை செய்வதுடன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் அனைவரின் வங்கி கணக்குகளையும்,அவர்கள் பணம் அனுப்பும் முறைகளையும் அரசு கண்காணிக்க வேண்டும்.ஏற்றுமதிசெய்து அந்நிய செலவாணி ஈட்டுவதிர்க்கு நிகரானது இது.இதனால் நாட்டிற்க்கு அந்நிய செலவாணி கிடைப்பதுடன் போதைபொருள்,தீவிரவாதம் போன்றவற்றிக்குபணம் செல்லும் வழிகளும் அடைக்கப்படும். அரசு இதை கவனிக்குமா?பத்திரபதிவு உட்பட வீட்டுவரி வரை நம்மவர்களும் குறுக்கு வழியை கையாளாமல் முறையாக அரசிற்கு செலுத்தவேண்டிய வரிகளை செலுத்த வேண்டும்.அது ஊழலை ஒழிப்பதுடன் அரசின் வருவாயை பெருக்கும்.நாளடைவில் இத்தகைய சேவைவரிகள் குறைய நமது நேர்மையான வரிகட்டும் முறைகள் நமக்கு உதவும்.
Rate this:
Share this comment
Cancel
மண்புழு - Faraway Land,அன்டார்டிகா
08-ஏப்-201306:26:56 IST Report Abuse
மண்புழு டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் இதர சுயதொழில் புரிவோரும் தங்கள் சேவை கட்டணத்தை கிரெடிட் கார்ட் மூலம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம்..... இதன் மூலம் பெரும்பாலான அளவுக்கு இவர்களது வருமானம் கணக்குக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
08-ஏப்-201306:01:27 IST Report Abuse
naagai jagathratchagan போடாத வரி இரண்டு மட்டுமே ...ஒன்று..... ஜனவரி ....பிப்ரவரி ....கேட்டால் அதுவும் பரிசீலனையில் இருக்கிறது என்று சொன்னாலும் உண்டு ..அதுவும் கமிட்டி முடிவு செய்யும்
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
08-ஏப்-201308:39:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி// போடாத வரி இரண்டு மட்டுமே ...ஒன்று..... ஜனவரி ....பிப்ரவரி .. .// மார்ச்சுவரி போட்டால் சங்கு என்று அர்த்தம்.....
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
08-ஏப்-201311:01:31 IST Report Abuse
E.V. SRENIVASANஅருமையான கருத்து. விரைவில் எதிர்பாருங்கள் இவற்றையும்....
Rate this:
Share this comment
govind - Muscat,இந்தியா
08-ஏப்-201314:19:48 IST Report Abuse
govindஇவை அனைத்தும் நடுத்தர மக்களுக்கே..... ஏன் என்றால் பணக்காரர்கள் வியாபாரம் செய்பவர்கள் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கின்றனர்..... நடுத்தர மக்கள் தருவதில்லையே.... அஹ அஹ அஹ .........
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஏப்-201304:10:46 IST Report Abuse
g.s,rajan தொட்டதுக்கு எல்லாம் சேவை வரி நீங்க எல்லாம் நல்லா வருவீங்க இந்தியாவில் உயிர் வாழ "சேவை வரி" போடுங்க நல்லா வருமானம் பிச்சுகிட்டு போகும் போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும் மாதாந்திர சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களை வருமான வரிக்காக ஆக்டோபஸ் போல ரத்தத்தை உறிஞ்சி எடுக்கத்தான் மத்திய அரசுக்குத் தெரியும் இந்தியாவில் அரசுக்கு நேர்மையான வகையில் வருமான வரி செலுத்தும் மக்கள் வெறும் இரண்டு சதவீதமே மீதம் உள்ள வருமான வரி கட்டாத பலர் புத்திசாலிகளா ?கட்டுபவர்கள் ஏமாந்த சோணகிரிகளா ?புரியவில்லை ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
S.Sriram - Kumbakonam,இந்தியா
08-ஏப்-201302:33:09 IST Report Abuse
S.Sriram ஹா..ஹா... சேவை வரி ஏய்ப்பை தடுக்க ஒரு அமைப்பாம். சேவை வரி இருக்கட்டும். முதலில் அரசாங்கம் எல்லோரையும் ஒழுங்காக வருமான வரி மற்றும் விற்பனை வரிகளை கட்டும் படி செய்யட்டும். இன்று ஒழுங்காக வரி கட்டுபவர்கள் என பார்த்தால் அலுவலகம் சென்று பணி புரிவோர் தான். ஏன் என்றால் அவர்கள் வாங்கும் சம்பளத்தை மறைக்கவும் முடியாது, அதை தவிர அவர்கள் அலுவலகமே அதற்குரிய வரியையும் முதலிலேயே பிடித்துக் கொண்டு தான் கொடுக்கும். இன்று சுயமாக தொழில் செய்வோர் (டாக்டர்கள், வக்கீல்கள், மற்றும் இதர சுயமாக தொழில் புரிவோர் - வியாபாரம் தவிர) எத்தனை பேர் ஒழுகாக வரி கட்டுகிறார்கள். மேலும் வியாபாரம் செய்வோர், கடைகள் வைத்திருப்போர், கம்பெனி வைத்திருப்போர் யாரும் ஒழுகாக வரி செலுத்துவதில்லை. அவர்கள் எல்லோரும் 1000 ருபாய் வருமானம் வருகிறது என்றால், சுமார் 200 - 300 ரூபாய்க்கு தான் கணக்கு காட்டுவார்கள். நாம் பில் கேட்டால் கூட கொடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் யாரும் வரும் முழு வருமானத்தையும் மறைக்காமல் சொல்லி அதற்கு வரி கட்டுவது கிடையாது. ஆகையால் நமது அரசு இத்தகைய ஓட்டைகளை முதலில் அடைத்து, அவர்களுக்கு வரும் முழு வருமானத்தை கண்டறியவும், அதற்குரிய வரியை அவர்களிடமிருந்து பெறவும் முதலில் வழி கண்டு பிடிக்கட்டும். இதை செய்தாலே நமது அரசின் வருமானம் பல மடங்கு கூடும். இது தெரிந்திருந்தும், அரசு அதை செய்வதில்லை. ஏனென்றால் நம் அரசியல்வாதிகள் பலபேர் பல தொழில்கள் செய்கின்றனர். இதை எல்லாம் சரி செய்தால் அவர்களும் பாதிக்கப் படுவார்கள். அதனால் தான்.
Rate this:
Share this comment
kailash - chennai,இந்தியா
08-ஏப்-201310:45:35 IST Report Abuse
kailashSMS Banking மூலம், பணத்தை செலுத்த வேண்டும். கடைகள் வங்கிகளிலிருந்துதான் பணம் எடுக்க வேண்டும். 1000 ரூபாய்க்கு மேல் SMS banking மட்டுமே செய்ய வேண்டும். இப்படி செய்தால், வரிவருவாய் கொட்டும். paper currency தேவை படாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை