தானியங்கி "டஸ்டர்' : மதுரையில் கல்லூரி மாணவர்கள் சாதனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும் இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.பள்ளி, கல்லூரிகளில் கரும்பலையில் ஆசிரியர்கள் எழுதியதை அழிக்கும் பழக்கம், பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதில் எழும் தூசி, ஆசிரியர்கள், முதல் வரிசையில் உள்ள மாணவர்களின் நாசி, வாயில் புகுந்து, கண்களையும் "பதம்' பார்க்கின்றன. காற்றில் தூசி பறப்பதால் மூச்சு குழாயில் படிந்து திணறல், இரப்பை பாதிப்பு, ஆஸ்துமா பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், இக்கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் மணிகண்டன் வழிகாட்டுதலில், தூசிகளை தானாக உள்வாங்கும் வகையிலான இயந்திரத்தை, மாணவர்கள் சுதர்சன், ஜான் பேட்ரிக், லக்ஷ்மண பாண்டியன் கண்டுபிடித்துள்ளனர்.

இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மாணவர்கள் கூறியதாவது:இக்கருவி மிக சிறிய "டி.சி.', பேட்டரிகள் உதவியுடன், சுழலக்கூடிய உருளையும், கரும்பலகையின் மேற்பரப்பினை துடைக்கும் வகையில் "ஸ்பான்ச்' அடைப்பையும், தூசியை உறிஞ்சி உள்வாங்கும் வகையில் வெற்றிடத்தையும் கொண்டுள்ளது. "ஸ்பான்ச்' பரப்பு மூலம் கரும்பலகையை துடைக்கும்போது எழும் தூசியை, இயந்திரத்தில் உள்ள "இம்பெல்லரின்' உதவியுடன், காற்று அழுத்த வேறுபாட்டால் உள்வாங்கப்படுகிறது. பின், இத்தூசி, இயந்திரத்தின் பின்புறம் உள்ள மூடியினை சுற்றி எளிதாக அப்புறப்படுத்த முடியும். "டி.சி.', மோட்டாரினை 6 வோல்ட் ரீ சார்ஜர் பேட்டரி மூலம் இயக்கலாம். இக்கண்டுபிடிப்புக்கு மத்திய, மாநில அரசுகளின் விருதுகள் கிடைத்துள்ளன. காப்புரிமைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர். தொடர்புக்கு: 96003 75600

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kirubaharan Devarajan - chennai,இந்தியா
11-ஏப்-201319:44:16 IST Report Abuse
Kirubaharan Devarajan வாகும் கிளிநேர் ஆகவே இருக்கட்டும் இதுவரை யார் அதில் அழிப்பானை கண்டுபிடித்தது, பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
narasimman - rasalaffan,கத்தார்
08-ஏப்-201315:36:58 IST Report Abuse
narasimman பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
08-ஏப்-201313:42:06 IST Report Abuse
LAX வாழ்த்துக்கள். முக்கியமாக காப்புரிமை பெற்றதற்கு.
Rate this:
Share this comment
Cancel
Parivel - Blore,இந்தியா
08-ஏப்-201310:39:11 IST Report Abuse
Parivel இது போன்ற செய்திகளை பார்பதற்கும் படிபதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது மாணவர்கள் ரிமோட் பொம்மைகளையும் உருவாக்கி பார்க்கவேண்டும். பொம்மை என்று சாதாரணமாக நினைக்கவேண்டாம். இதற்கான தொழில் நுட்பம் மிகவும் பயன் உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் வளாச்சி அடியும் வாய்ப்பும் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:53:55 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பேசாமல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் magic slate போல magic black board வழங்கலாம். சுற்றுச்சூழலுக்கும் மாசு வராது..
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:48:26 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் I think, it's functioning the priciple of vacuum cleaner.
Rate this:
Share this comment
Cancel
Sathya - Madurai,இந்தியா
08-ஏப்-201306:55:09 IST Report Abuse
Sathya காப்புரிமை யாருக்கு மாணவர்களுக்கா...................
Rate this:
Share this comment
Cancel
Sathya - Madurai,இந்தியா
08-ஏப்-201306:51:17 IST Report Abuse
Sathya காப்புரிமை யாருக்கு........... மாணவர்களுக்கா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்