பாகிஸ்தான் பார்லி தேர்தல் முஷாரப் வேட்பு மனு ஏற்பு| Dinamalar

பாகிஸ்தான் பார்லி தேர்தல் முஷாரப் வேட்பு மனு ஏற்பு

Added : ஏப் 08, 2013
Advertisement
பாகிஸ்தான் பார்லி தேர்தல் முஷாரப் வேட்பு மனு ஏற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப்பின், வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.


பின், 2002ல், பாகிஸ்தான் அதிபரான இவரது ஆட்சிக் காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது, குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.வரும், மே 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், "அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி' சார்பாக, நான்கு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.


கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள, சித்ரால், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர், கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய தொகுதிகளில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முஷாரப் மீது கசூர் தொகுதியில், நான்கு வழக்குகள் உள்ளதாக, வழக்கறிஞர் ஒருவர், தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கசூர் தொகுதியில், அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் கடந்த வாரம் நிராகரித்தனர்.


"ஆட்சியில் இருந்த போது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய, முஷாரப்பின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்' என, கராச்சியை சேர்ந்த வழக்கறிஞர், ஜாவித் கசூரி, தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதனால், கராச்சி தொகுதியிலும், முஷாரப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.பழங்குடியினர் அதிகம் வசிக்கும், கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள, சித்ரால் தொகுதி, முஷாரப் செல்வாக்கு பெற்ற இடம். இத்தொகுதிக்கு பல நல திட்டங்களை முஷாரப் நிறைவேற்றியுள்ளார். இந்த தொகுதியில், அவரது மனு, நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இஸ்லாமாபாத் தொகுதியில், சையத் தாரிக் அலி என்பவர், முஷாரப்பின் வேட்பு மனுவை எதிர்த்துள்ளார். இந்த தொகுதியில், அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது தெரிய வில்லை. இதற்கிடையே, முஷாரப் மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான பெஞ்ச், இந்த வழக்கை விசாரிக்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை