கொடூர கொலை குற்றவாளிகள் எட்டு பேரை தூக்கிலிடுவதை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

கொடூர கொலை குற்றவாளிகள் எட்டு பேரை தூக்கிலிடுவதை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (4)
Advertisement
கொடூர கொலை குற்றவாளிகள் எட்டு பேரை தூக்கிலிடுவதை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:பல்வேறு கொலை வழக்குகளில், மரண தண்டனை விதிக் கப்பட்ட, எட்டு பேரை தூக்கிலிடுவதை, நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டுள்ளது.


நிராகரிப்பு:கொடூர கொலை குற்றங்களில் ஈடுபட்டதற்காக, மரண தண்டனை விதிக்கப்பட்ட, உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுரேஷ், ராம்ஜி, குர்மீத் சிங் மற்றும் ஜாபர் அலி, அரியானா முன்னாள் எம்.எல்.ஏ., ராஜு ராம்புனியாவின் மகள் சோனியா, அவரது கணவர் சஞ்சீவ், கர்நாடகா மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களைச் சேர்ந்த, பிரவீன் மற்றும் சுந்தர் சிங் ஆகியோரின், கருணை மனுக் களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமீபத்தில் நிராகரித்தார்.


இதையடுத்து, அவர்களை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளை, அந்தந்த மாநில சிறைத் துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் களின் உறவினர்களும், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பும், நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்றை தாக்கல் செய்தன.


அதில், "பல கொலை வழக்குகளில் தொடர்புடைய, இந்த எட்டுப் பேருக்கும், சுப்ரீம் கோர்ட் சில ஆண்டுகளுக்கு முன்னரே, மரண தண்டனையை உறுதி செய்துவிட்டது. இருந்தாலும், தண்டனை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான, மரண தண்டனையை நிறைவேற்றுவது சரியாக இருக்காது. அதற்கு தடை விதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.


இந்த மனுவை, நேற்று முன்தினம் மாலை விசாரித்த, நீதிபதி சதாசிவம் தலைமையிலான சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் (அப்சல் குரு) சமீபத்தில், தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்படும் தகவல், தூக்கிலிடப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே, அவர்களின், உறவினர்களை சென்றடைந்து உள்ளது. இதன்மூலம் கடைசியாக ஒரு முறை, அந்த நபரை, அவரின் உறவினர்கள் பார்க்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது.


நோட்டீஸ்:அதனால் தற்போது, மரண தண்டனையை எதிர்கொள்ள உள்ள எட்டுப் பேரை, தூக்கிலிடுவதை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும்படியும், இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பும் படியும் உத்தர விடுகிறோம். அந்த நோட்டீசுக்கு, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:15:22 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீதி மன்றங்கள் மேல் மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். அதனால் மக்களே நீதிபதிகளாக மாறும் எண்ணம் மேலோங்கும்.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:14:28 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மனித உரிமை அது இது என்று பேசி வழக்கு வாய்தா, ஒத்திவைப்பு என்று சொல்லி நல்ல உள்ளங்களை கத்தி பிடிக்க வைக்கும் செயல் இது.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201307:13:16 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி காவல் துறையில் இருக்கின்ற நல்ல உள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி இது போன்ற கொடூரமான குற்றவாளிகளை ஏதாவது ஒரு காரணம் கூறி போட்டு தள்ளுங்கள்... வழக்கு, விசாரணை, காவல், நேரம், பணம் இப்படி அத்துனை விரயங்களும் தவிர்க்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
A JEYARAJ - Tallahassee,இந்தியா
08-ஏப்-201305:13:17 IST Report Abuse
A JEYARAJ சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை ஜனாதிபதியே நியமிக்கிறார் ,, ஆனால் அவரது," கருணை மனு தள்ளுபடியான " உத்திரவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி தடை உத்திரவு பிறப்பிக்கின்றார் ,, ஏற்க்கனவே சுப்ரீம் கோர்ட் மரணதண்டனையை உறுதி செய்த பின் தான் கருணைமனு போடுகிறார்கள் ,, பின் ஏன் தடை ? இதுதான் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டைகளில் ஒன்று ,, இது போன்று உள்ள நடைமுறைகள் சீரமைக்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை