அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விவகாரம் தானே மாநகராட்சி துணை ஆணையர் உட்பட 9 பேர் கைது| Dinamalar

அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விவகாரம் தானே மாநகராட்சி துணை ஆணையர் உட்பட 9 பேர் கைது

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விவகாரம் தானே மாநகராட்சி துணை ஆணையர் உட்பட 9 பேர் கைது

தானே:மகாராஷ்டிரா மாநிலம், தானே அருகே, அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து, 74 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி துணை ஆணையர் உட்பட, மேலும், ஆறு பேர், நேற்று கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது.


தானேயின், ஷில் பாட்டா பகுதியில், கடந்த வியாழக்கிழமை, ஏழு அடுக்கு மாடி கட்டடம் ஒன்று, இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி, 74 பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக, அடுக்கு மாடி குடியிருப்பை கட்டிய, பில்டர்கள் இருவரும், தானே மாநகராட்சி உதவி ஆணையரும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், தானே நகராட்சி துணை ஆணையர், பாபாசாகேப் அன்டாலே உட்பட, மேலும் ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும், வரும், 20ம் தேதி வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இதற்கிடையில், அடுக்குமாடி கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட, 8 மாத பெண் குழந்தை மற்றும் 6 வயது சிறுமியின், குடும்ப உறுப்பினர்கள் யார் என, இதுவரை அடையாளம் காணப்படாததால், அந்தக் குழந்தைகள், அனாதை இல்லத்தில், ஒப்படைக்கப்பட உள்ளன. அதேநேரத்தில், தானே மாநகர பகுதியில், முறைகேடாக கட்டப்பட்டுள்ள, கட்டடங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை