மவுன விரத போராட்டம் நடத்தும் 27 கிராம தலித் சமூகத்தினர்தினமும் நடை பயணமாக கலெக்டர் ஆபீஸ் செல்கின்றனர்| Dinamalar

மவுன விரத போராட்டம் நடத்தும் 27 கிராம தலித் சமூகத்தினர்தினமும் நடை பயணமாக கலெக்டர் ஆபீஸ் செல்கின்றனர்

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

போபால்:ம.பி.,யில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 27 கிராமங்களை சேர்ந்த தலித் சமூகத்தினர், மவுன விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், தினமும் மவுனமாக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடந்து சென்று, மீண்டும் ஊர் திரும்புகின்றனர்.


தீண்டாமை:மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் நகரத்தை சுற்றியுள்ள, பெரும்பாலான கிராமங்களில், தலித் சமூகத்தினரே அதிகம் வசிக்கின்றனர். இன்றளவும், இந்த கிராமங்களில், தீண்டாமை கொடுமை நடைமுறையில் உள்ளது. பொதுக் குளங்களில் தண்ணீர் எடுக்கவும், பொதுச்சாலை வழியாக நடந்து செல்லவும், தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


மேலும், கிராம பள்ளிகளில், தலித் சமூக குழந்தைகளின் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியே சேர்த்தாலும், அவர்கள் தனியாக அமர்த்தப்படுகின்றனர். இப்பகுதிகளில், அரசின் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை. தலித் சமூகத்தினருக்கு, ரேஷன் கார்டுகள் வழங்கவும், அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். காலம் காலமாக, இங்கு வசிப்போருக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு, முறையான பட்டா வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.


புது இயக்கம்:இதுபற்றி, பல முறை அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் அணுகி, நியாயம் கிடைக்காததால், இப்பகுதி கிராமங்களில் தலித்கள், "வஞ்சிக்கப்பட்ட தலித்கள் இயக்கம்' என்ற பெயரில், ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.அந்த இயக்கத்தின் சார்பில், தற்போது, 27 கிராமங்களைச் சேர்ந்த தலித்கள், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 27 கிராமங்களில் வசிக்கும் தலித் சமூகத்தினரும் ஒன்றிணைந்து, தினமும் ராஜ்கர் நகரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, நடை பயணமாக செல்கின்றனர். அப்போது, இவர்கள் யாரும், ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதில்லை. மாவட்ட கலெக்டரிடமும் மனு எதுவும் கொடுப்பதில்லை.


பேசுவதில்லை:அதற்குப் பதிலாக, தங்களின் கோரிக்கைகளை, துணிகளில் எழுதி, அதை, நடை பயணத்தின் போது, தங்களின் மேல் போர்த்திக் கொள்கின்றனர். ஊர் திரும்பிய பிறகும், இவர்கள் யாரும் பேசிக் கொள்வதில்லை. இந்த மவுன விரத போராட்டத்தை, வரும், 13ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.அதற்குப் பிறகும், அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கலெக்டர் அலுவலகம் முன், அமர்ந்து, தொடர் மவுன விரதத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை