இ.எம்.ஐ., முறையில் பணம் வசூலிக்கும்வடகிழக்கு மாநில பயங்கரவாத குழுக்கள்| Dinamalar

இ.எம்.ஐ., முறையில் பணம் வசூலிக்கும்வடகிழக்கு மாநில பயங்கரவாத குழுக்கள்

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வட கிழக்கு மாநிலங்களில், புற்றீசல் போல பெருகியுள்ள, பயங்கரவாத இயக்கங்கள், ஆட்கடத்தல், மிரட்டல் மூலமே, தங்கள் வருமானத்தை பார்த்துக் கொண்டுள்ளன. இந்நிலையில், மொத்தமாக, மிரட்டல் பணத்தை கொடுக்க முடியாதவர்களிடம், கொஞ்சம், கொஞ்சமாக பெற்றுக் கொள்ள முன்வந்துள்ளன.


தனி நாடு:வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில், தனி நாடு கோரிக்கையை முன்வைத்து, உள்நாட்டு சண்டையில் ஈடுபடும், பயங்கரவாத குழுக்கள் பல உள்ளன.நாகாலாந்து மாநிலத்தில், கார்பி ஆங்லோங்க் மாவட்டத்தை, தனி நாடாக அங்கீகரிக்க கோரி, போராடி வரும், கார்பி மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, அசாம் கவிஞர், ரோங்போங்க் டெராங்குக்கு சமீபத்தில் மிரட்டல் கடிதம் அனுப்பியது.அதில், "உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருக்க, எங்களுக்கு, 3 லட்சம் ரூபாய் தர வேண்டும்; தவறினால், உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். அதிலிருந்து தப்பிக்க, ஒரு வழியும் உள்ளது. எங்களின் ஆயுதங்களை, நாகாலாந்திற்கு கடத்தி சென்று சேர்த்து விடுங்கள் போதும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


வினோத கோரிக்கை:அசாமில் பிரபலமான கவிஞர் என்பதால், போலீஸ் செக் - போஸ்டுகளில், அவரின் காரை யாரும் சோதனையிடுவதில்லை. இதை அறிந்திருந்த பயங்கரவாதிகள், "பணம் கொடுங்கள்; இல்லையேல், ஆயுதங்களை கொண்டு போய் சேருங்கள்' என, வினோத கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.அந்த கடிதத்தை, மாநில அரசிடம் சமர்ப்பித்த கவிஞருக்கு, 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதேபோல், குகி பழங்குடியின மக்களுக்காக போராடும், மற்றொரு பயங்கரவாத அமைப்பு, அந்த பகுதி மக்களிடம், தனியாக வரி வசூல் செய்து வருகிறது. வறட்சியால் விளைச்சல் சரி வர இல்லை என்பதை அறிந்த, அந்த அமைப்பினர், "பணமாகத் தர வேண்டாம்; பொருட்களாக தாருங்கள்' என, கிடைத்ததை எல்லாம் வாங்கி, வயிற்றை வளர்க்கின்றனர்.


ரூ.35 கோடி தேவை:வட கிழக்கு மாநிலங்களில், வலிமையானதும், நீண்ட காலத்திற்கு முந்தையதுமான, "உல்பா' பயங்கரவாதிகளுக்கு, முக்கிய வருமானமே, மிரட்டல், ஆள்கடத்தல் தான். 1979ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த அமைப்பு, இ.எம்.ஐ., எனப்படும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் முறையை பின்பற்றி வருகிறது.


தொழில் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களை மிரட்டியே, காரியம் சாதிக்கும் இக்குழுவினர், சமீபகாலமாக, இ.எம்.ஐ., முறையை பின்பற்றுகின்றனர். அமைப்பை நிர்வகிக்க, ஆண்டுக்கு, 35 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்த தொகையை, மாதந்தோறும், கொஞ்சம் கொஞ்சமாக வசூலித்துக் கொள்ள தயாராக இருக்கிறது, இந்த அமைப்பு.


- நமது கவுகாத்தி நிருபர் -


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை