பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

இலங்கை தமிழர் பிரச்னைக்காக போராடுவதாகக் கூறி, சுற்றுலாப் பயணிகளை தாக்குபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதால், தாக்குதல்கள் தொடர்கின்றன என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும் இதுபோன்ற தாக்குதல் தான், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறேன் என்ற சாக்கில், சினிமா இயக்கு னரின் கட்சியைச் சேர்ந்தவர்களும், வேறு சில அமைப்பைச் சேர்ந்தவர்களும், இலங்கையிலிருந்து, தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி, தங்களின் அமைப்பை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த, 16ம் தேதி டில்லியிலிருந்து, 17 ஆராய்ச்சி மாணவர்கள், தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆய்வுக்காக வந்தனர். ஆய்வு மாணவர்களில், நால்வர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

காவி உடை பிட்சு:கனலேகா என்ற ஞானதரோ, 46, என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர். புத்த மதத்தை தழுவியவர் என்பதால், அவர் புத்த பிட்சுகள் அணியும் உடையை அணிந்திருந்தார். இதை தெரிந்து கொண்ட, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர், கடந்த, 16ம் தேதி காலை, 11:30 மணிக்கு, தஞ்சை பெரிய கோவிலில், ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களில், இலங்கை புத்தபிட்சு கனலேகாவை மட்டும் குறிவைத்து தாக்க துவங்கினர்.தாக்குதலில், தமிழ் தேச பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த, பழ ராஜேந்திரன், ராஜமுனியாண்டி, வழக்கறிஞர் கரிகாலன், சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தியாகு உட்பட, பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், நீலச்சட்டை அணிந்திருந்த, வழக்கறிஞர் கரிகாலன் தான், புத்த பிட்சுவை கொடூரமாக தாக்கினார்.தஞ்சை மேற்கு போலீசார், கனலேகா உட்பட, 17 பேரையும் மீட்டு, பெரியகோவில் அருகேயிருந்த, தொல்லியல் துறை அலுவலகத்தில், பாதுகாப்பாக தங்க வைத்தனர். இதையறிந்த, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை மற்றும் பலர், தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

சிறையிலடைப்பு:திருச்சி வரும் வழியில், திருவெறும்பூர் அருகே, ம.தி.மு.க., திருச்சி மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமையில், அக்கட்சியினர் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் அவர்களை, பத்திரமாக அழைத்து வந்து, திருச்சியிலிருந்து

விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.மேற்கண்ட தாக்குதல் குறித்து, தஞ்சை மேற்கு போலீசார், இரு சம்பவமாக பிரித்து, வழக்குப்பதிவு செய்தனர். முதல் சம்பவம் கோவிலுக்குள் நடந்த தாக்குதல் தொடர்பாக, பழ ராஜேந்திரன், ராஜமுனியாண்டி, தியாகு, வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட, சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில், சம்பவம் நடந்த அன்றே, பழ ராஜேந்திரன், ராஜமுனியாண்டி, தியாகு ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.இவ்வழக்கில், முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட, சிலர் தலைமறைவாயினர். அவர்களை கைது செய்ய, போலீசார் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.தொல்லியல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால், முன்னெச்சரிக்கை பிரிவில், நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, வீரபிரபாகரன், கருணாநிதி, சுரேஷ், அருண் மாசிலாமணி, செந்தில்குமார், ராஜேந்திரன், புகழேந்தி, சசிக்குமார் ஆகிய, ஒன்பது பேரையும், தஞ்சை மேற்கு போலீசார் சம்பவத்தன்று கைது செய்து, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள், அன்று மாலையே ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

உடனடி ஜாமின்:அதேபோல், திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் புத்தபிட்சு வந்த வேன் மீது தாக்குதல்நடத்திய, ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகி சேரன் உள்ளிட்ட, ஆறு பேர் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அவர்களும், உடனடியாக ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.ஏற்கனவே, வேளாங்கண்ணி வந்த, 80 இலங்கை நாட்டினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த துணிச்சலில் தான், சீமான் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இது, உலக அரங்கில், தமிழகத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், இலங்கையில் வசிக்கும், தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், சூழலையும் உருவாக்கியுள்ளது.இந்த தாக்குதல்களால் ஆத்திரமடையும் சிங்கள ராணுவத்தினர், இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடிக்கும், அப்பாவி தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுடுவது, தாக்குவது, மீன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகளாகவே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடந்தால், அன்றோ, அதற்கு மறுநாளோ, தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுகின்றனர். தொடர்ந்து தாக்கப்படும் அபாயமும் உள்ளது.இதைக் கண்டித்து, தடுத்து

Advertisement

நிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள, மத்திய அரசும் கண்டு கொள்ளாமல், மாற்றந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், "விளம்பர' அமைப்பினர் மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகையால், இலங்கை தமிழர்களுக்காக, உண்மையாக போராடுவதாக இருந்தால், வன்முறையை கைவிட்டு, ஆக்கபூர்வமான செயல்களில் தமிழார்வ அமைப்புகள் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தவிர்க்கப்படும் தமிழக சுற்றுலா : மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலிருந்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தமிழகத்துக்கு சுற்றுலா வருகின்றனர். அவர்கள் சென்னையையும், திருச்சியையும் மையமாக வைத்து, தங்களின் சுற்றுலாப் பயண பட்டியலை தயார் செய்கின்றனர்.அவர்கள் பெரும்பாலும், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தஞ்சை, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளிலேயே சுற்றுலா செல்கின்றனர்.தமிழகத்தில் நடந்த, இலங்கை நாட்டினர் மீதான தாக்குதலால், இலங்கை அரசு, தமிழகம் சுற்றுலாசெல்வதை தவிர்க்குமாறு, அந்நாடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.அதேபோல், மலேசியா, சிங்கப்பூர் நாட்டு சுற்றுலாப் பயணிகளும், இங்கு நடக்கும் தாக்குதலால், தமிழகம் வர தயங்குகின்றனர். இரண்டு மாதங்களில், தமிழகத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணி பாதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை நம்பிஉள்ள வியாபாரிகளும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைகூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால், தமிழகம் என்றாலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடும் மனோபாவம், வெளிநாட்டினர் மத்தியில் ஏற்பட்டுவிட்டால், அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் மூலம், தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு, இது போன்ற சிலரால் பாதிக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை, நாகை, ராமேஸ்வரம், மதுரை போன்ற பல ஊர்களில், சுற்றுலாப் பயணிகளுக்காக ஏராளமான விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. பயணிகள் வருகை குறைவால் அங்கு வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. இதனால், ஏராளமான தமிழர்களுக்கு வேலைவாய்ப்பும் பறி போகிறது.சுற்றுலா மூலம் தான், அதிக வருவாயை ஈட்ட முடியும் என்பதை தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் நிரூபித்து உள்ளன. குறைந்த முதலீடு, அதிக அன்னிய செலாவணி வருவாய், ஏராளமான வேலை வாய்ப்புகள் போன்றவற்றை தரும், சுற்றுலாவை மேம்படுத்த, அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
09-ஏப்-201301:53:02 IST Report Abuse
SUDARSAN வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்குபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். உண்மையில இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மேல் அன்பிருந்தால் இந்த மாதிரியான முட்டாள்தனங்களை நிறுத்தவேண்டும் . இவர்களுடைய செயலால் ஈழத்தமிழர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு ஈழ்த்தமிலர்களைப் பற்றி எந்த கவலையுமில்லை . விளம்பரத்திற்காக இதை செய்கிறார்கள். அரசாங்கம் தண்டிக்கவில்லை என்றால் சுற்றுலாப் பயணிகள் வருவது குறையும். அரசாங்கத்திற்கு வருமானம் குறையும். தங்களுடைய குண்டர்படை குண்டர்களை அழைத்துக் கொண்டு இலங்கை சென்று இலங்கை ராணுவத்துடன் போர் செய்து ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel
bacqrudeen - doha,கத்தார்
08-ஏப்-201322:38:54 IST Report Abuse
bacqrudeen தேவையா இதெல்லாம், அவங்களை போட்டு துவைச்சதால என்ன பலன், அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயம் அது, நாம் தமிழர் என்று மூலைக்கு மூலை கத்தினால் மட்டும் போதுமா? நம்முடைய செயல்கள் எல்லாமே முட்டாள் தனத்தையே வெளிப்படுத்துகிறது. -அ.பஹ்ருத்தீன்
Rate this:
Share this comment
Cancel
kumaresan - vriddhachalam,இந்தியா
08-ஏப்-201310:01:16 IST Report Abuse
kumaresan இந்தியாவின் கையாலகாத தனம் இவர்களின் கோபம்
Rate this:
Share this comment
Cancel
chakrapani ramachandran - chennai,இந்தியா
08-ஏப்-201308:03:27 IST Report Abuse
chakrapani ramachandran சுண்டக்காய் ஸ்ரீலங்கன் ராணுவத்திடமிருந்து மீனவ மக்களை காப்பற்றமுடியாத இந்திய அரசு எப்படி சீனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற போகிறது
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
08-ஏப்-201305:41:17 IST Report Abuse
NavaMayam பத்து பேரை அடிக்க விட்டா பத்தாயிரம் ஒட்டு கூடும்...... அம்மா ஒட்டு கணக்கில் புலி .....பொருளாதாரம் , அவர் இஷ்ட பாடமாக எடுக்கவே இல்லை ... எனவே அதை பற்றி கவலை இல்லை ....
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
08-ஏப்-201303:18:12 IST Report Abuse
jagan இயக்குனர் சைமன் (ஊரை ஏமாற்ற சீமான் என்ற பெயர்) மற்றும் அவர்கள் கூட்டாளிகளை தட்டி வைப்பது ஆளும் கட்சிக்கு நல்லது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.