Advertisement
இவர் இப்படி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

முலாயமின் குழப்ப அரசியல் லாபம் தருமா?


சோசலிஸ்ட் தலைவர்கள், ராம் மனோகர் லோகியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரை, தன் அரசியல் குருநாதர்களாக, முலாயம் சிங் யாதவ் குறிப்பிடுவார்.


எனினும், அவரின் குழப்ப அரசியலுக்கு குருநாதர், சவுத்ரி சரண் சிங் தான். "இந்த சின்ன மனிதர், எதிர்காலத்தில் பல பெரிய சாதனைகளைப் படைப்பார்' என, சரண் சிங் கூறியுள்ளார். அதை நனவாக்க, முலாயம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்; அதற்காக பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.மத்தியில் ஆளும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்ற பிறகு, சிறுபான்மையாகி விட்ட மன்மோகன் சிங் அரசை, முலாயம் சிங் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.


ஒருபுறம், மத்திய அரசை மிரட்டிக்கொண்டு, மறுபுறம், பாஜ.,வுடன் நெருங்கவும் முயற்சிக்கிறார். இதன் மூலம், பிரதமர் வேட்பாளராக ஒருமித்து தன்னை தேர்ந்தெடுக்க, ஆதரவை திரட்டி வருகிறார். அவரின், இயல்பான முரண்டு குணத்தால், 14 ஆண்டுகளுக்கு முன், சோனியாவுக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் போனது. அப்போதைய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், அர்ஜுன் சிங், "கொடூரமான துரோகக்காரர்' என, முலாயமை வர்ணித்தார்.


பா.ஜ., ஆதரவுடன், 1989ல், உ.பி.,யில் ஆட்சியைப் பிடித்த முலாயம், பா.ஜ., தலைவர், அத்வானியின் ரத யாத்திரைக்கு எதிராக, "கிராந்தி யாத்திரை' நடத்தினார். இதன் மூலமும், "கரசேவகர்களை, பாபர் மசூதியின் மேலிருந்து சுட்டுத் தள்ளுவேன்' என, அறிவித்ததாலும், முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற்றதால், "மவுலானா முலாயம்' என, பாராட்டப்பட்டார்.


பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, 1992ல், கல்யாண் சிங் அரசு பதவியை இழந்தது. அடுத்த ஆண்டு தேர்தலில், பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, மீண்டும் முதல்வரானார்.அப்போது அவருக்கு ஆதரவான கட்சிகள், இப்போது எதிரணியில் உள்ளன. எனினும், அவரின் ஓட்டு வங்கி உயர்ந்துள்ளதால், பிரதமர் நாற்காலி மீது ஆசை ஏற்பட்டு விட்டது; நிறைவேறுமா என்பது தான் தெரியவில்லை.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201306:48:12 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி முலாயமின் பூர்வோதரத்தை நினைவு படுத்தி தினமலர் பத்திரிக்கை சோசலிஸ்ட் தலைவர்கள், ராம் மனோகர் லோகியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரை, சவுத்ரி சரண் சிங் உடன் சேர்ந்து மக்களின் சாபத்திற்கு, கோபத்திற்கு ஆளாக்கி விட்டார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.