E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மம்தாவை கிண்டல் அடித்ததால் மிரட்டல் திரிணமுல் மாணவர் தலைவர் ராஜினாமா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
01:47

கோல்கட்டா:கோல்கட்டாவில், ஐ.பி.எல்., கொண்டாட்டத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றதை, விமர்சித்த திரிணமுல் காங்கிரஸ் மாணவர் தலைவருக்கு மிரட்டல் வந்ததையடுத்து, கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.


கோல்கட்டாவில், போராட்டம் நடத்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அணி தலைவர் பலியான சம்பவம், மம்தா பானர்ஜி அரசுக்கு குடைச்சலை கொடுத்தது. இப்போது, தன் சொந்த கட்சிக்கு உள்ளேயே மாணவர் அணி தலைவரால் மம்தாவுக்கு எதிராக சர்ச்சை எழுந்தது.சமீபத்தில், கோல்கட்டாவில் நடந்த, ஐ.பி.எல்., துவக்க விழாவில், முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இதுகுறித்து, பல தரப்பில் இருந்தும் மம்தாவுக்கு கண்டனம் எழுந்தது.


காரணம், அன்றைய தினம் தான், கோல்கட்டாவில் மாணவர் அணி தலைவர் மரணம் அடைந்ததால், சர்ச்சை எழுந்தது.ஐ.பி.எல்., விழாவில், மம்தா பங்கேற்றதை, விமர்சிக்கும் வகையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேற்கு மித்னாபூர் மாவட்ட மாணவ அணி செயலர், சுவஜித் தாஸ் சமூக வலைதளமான, "பேஸ்புக்'கில் துணிச்சலாக, கிண்டல் செய்து இருந்தார். அதற்கு, தலைப்பாக, "இது மாதிரி அரசியல் நிறுத்தப்பட வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.


இதற்கு, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. சுவஜித் தாஸ் போனில் தொடர்ந்து மிரட்டலாக வந்தது. இதில் பயந்து போன சுவஜித் தாஸ், கட்சி பதவியில் இருந்து விலகுவதாக, ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:


"பேஸ்புக்'கில் விமர்சித்ததும், கட்சி தலைவர்கள் என்னை தொடர்பு கொண்டு, பதவியில் இருந்து விலகும்படி மிரட்டினர். இதற்கு மேலும் கட்சியில் தொடர விரும்பவில்லை. எனவே, ராஜினாமா செய்துள்ளேன்.நான் விமர்சிப்பது முதல் முறையல்ல. ஏற்கனவே, ஆரம்ப பள்ளி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்த போது விமர்சித்து இருந்தேன். தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்து இருந்தேன். இதில், எப்படி கட்சி ரீதியான கருத்து வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.


மம்தாவை விமர்சித்தால், அவர் கதி, அதோ கதி என்பது தான், கடந்த வரலாறுகள் கூறுகின்றன. கடந்தாண்டு, ஜவத்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, மம்தா குறித்து கிண்டல் செய்ததற்காக, கைது செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.