"காங்கிரசை தனிமைப்படுத்த முடியாது' நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"காங்கிரசை தனிமைப்படுத்த முடியாது' நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு

Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"காங்கிரசை தனிமைப்படுத்த முடியாது' நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு

சென்னை:""தமிழகத்தில் காங்கிரசை எந்த கட்சியும் தனிமைப்படுத்த முடியாது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்,'' என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார்.அம்பேத்கர் பிறந்த நாள் விழா, காங்கிரஸ் சார்பில், சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:
இலங்கை தமிழர் பிரச்னையில் துவக்கத்தில் இருந்தே, காங்கிரஸ் ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால், ஐ.நா., தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர, பார்லிமென்டடில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடந்த போது, பா.ஜ., கட்சி அதை வன்மையாக எதிர்த்தது.இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், சம உரிமை, அந்தஸ்து, குடியுரிமை பெற வேண்டும். அங்கு, 2009ல் நடந்த யுத்தத்தில், கொல்லப்பட்ட விவகாரத்தில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள், விசாரணை செய்யப்பட வேண்டும்.தமிழன் வாழும் பகுதியில், தமிழன் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, உச்ச கட்ட எல்லை வரை போராடி, தமிழர்களுக்கு ஆதரவாக துணை நிற்கும். தமிழகத்தில், காங்கிரசை எந்த கட்சியும் தனிமைப்படுத்தி விட முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
09-ஏப்-201300:10:25 IST Report Abuse
பொன்மலை ராஜா // இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் // என்று வேட்டி கட்டிய கோயபல்ஸ் என் கனவில் வந்து சொன்னதும் எனக்கு, "சித்ரகுப்தன் எப்பொழுது வருவான் ... எதற்காக வருவான் ... எதுவரை துணையாக வருவான் " என்ற கேள்விகள் தோன்றி விளைந்த அச்சத்தில் கடுமையான ஜுரத்தில் படுத்துவிட்டேன் ...
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201309:56:35 IST Report Abuse
 Palanivel Naattaar மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள், ''தமிழகத்தில் காங்கிரசை எந்த கட்சியும் தனிமைப்படுத்தி விட முடியாது அது தானாகவே தனிமைபட்டுவிடும் என்று சொல்லவருகிறார்போலும்''
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
08-ஏப்-201309:32:46 IST Report Abuse
sitaramenv 2ஜி ஊழலில் அடித்த கொள்ளைக்கு..கொல்லைப்புறமாக ......வழி காண்பித்த மாபெரும் உத்தம சிவகங்கை தேர்தல் தில்லுமுல்லு நாயகனே........உனக்குத்தான் கட்சி காங்கிரஸ் கிடையாதே........ஜனநாயக பேரவை என்ற ஒரு உலக மாபெரும் கட்சியின் தலைவன் தொண்டன்...............கோடி கோடி கோடி கோடி கோடி யாக சம்பாதிக்க......கோடிகள் கொடுத்து நிதித்துறையை பெற்ற மாபெரும் செயல் வீரரே...........போதுமா உன் புலம்பல்......காங்கிரசின் யோக்யதை அடிமட்டத்தில் இருக்கும் கல்வி அறிவு அற்ற ஒரு எருமை மாட்டுக்குகூட தெரியும்..........தொலையும்எங்கேயாவது........சுத்தமாகட்டும் பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஏப்-201309:06:54 IST Report Abuse
Susil கொலைகாரனுக்கு துணை போய்விட்டு , இப்படி பேச வாய் கூசவில்லை - உங்களை யாரும் தனிமைபடுத்த முடியாது ,அது தானாகவே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
vasan - சென்னை  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201308:46:04 IST Report Abuse
vasan அய்யா சிதம்பரம். மக்கள் முன்புபோல் இப்போ இல்லை! எல்லாம் மக்களுக்கு தெரியும்! ஈழ மக்களுக்கு நீங்கள் செய்த உதவியை மக்கள் நன்கு அறிவர். உங்களை வேறு யாரும் தனிமைபடுத்த வேண்டாம். உங்க கட்சி ஆளுங்களே போதும்!
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
08-ஏப்-201307:43:05 IST Report Abuse
Skv அடபோய்யா ஒம்மவழிய பாத்துகினு .மந்திரி ஆனோமா காசு சேத்தொமான்னு ஜாலிய இருங்க சாமியோவ்
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
08-ஏப்-201307:18:16 IST Report Abuse
Krish Sami உங்க பிரசன்னை புரிகிறது. வெறும் பிரகடனங்கள் எதையும் சாதிக்காது, மதி அமைச்சரே. 2009 தில் தாங்கள் செய்தது என்ன என்பதை மட்டும் சொல்லுங்கள். அதற்கும், தமிழ்நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து செய்து வரும் துரோகங்களுக்கும் (மின்சாரம், காவிரி, முல்லை பெரியார், மத்திய அரசு நிறுவனங்கள் அமைப்பதில் பாரபட்சம் - மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு என்ன கொடுத்துள்ளீர்கள்), தமிழ் நாடு 2011 இல் பதில் கொடுத்து விட்டதே அதை 2013 / 2014 லில் மாற்றப்போவதில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் - 0 / 40. தமிழ் நாட்டுக்கு போஸ்ட் ஆபீசும், பாங்கும் திறந்து வைக்க வரீங்க. தமிழனெல்லாம் கேனையனா?
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201306:53:29 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி ஆமாம், ரொம்ப கரெக்ட். உங்களை யாராலும் தனிமை படுத்த முடியாது. கொள்ளை அடித்து விட்டு அந்த பழியை யார் மேலாவது தூக்கி போட உங்களுக்கு எப்போதும் யாரையாவது கூட வைத்து கொண்டுதான் வலம் வருவீர்கள். 2 G இல் தி மு க, நிலக்கரி ஊழலில், பிஜேபி, ஹெலிகாப்டர் ஊழல் செய்தது (பேரம் நடந்தது பிஜேபி என்று பழி) விமான நிலைய நில விற்பனை குளறுபடியில் தேசியவாத காங்கிரஸ் என்று நீங்கள் எப்போதுமே கூட்டு களவாணிகள் தான். உங்களை யாராலும் தனிமை படுத்த முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை