நீதியரசர் கடைப்பிடித்த உண்மை, நேர்மையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்: வாசன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதியரசர் கடைப்பிடித்த உண்மை, நேர்மையை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்: வாசன்

Added : ஏப் 08, 2013
Advertisement

சென்னை:""நீதியரசர் சோமசுந்தரம் கடைப்பிடித்த உண்மை, நேர்மையை இன்றைய இளைஞர்கள் பின்பற்றி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்'' என, மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.நீதியரசர் பி.எஸ்.சோமசுந்தரத்தின் நூற்றாண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வரவேற்று பேசுகையில், ""சென்னை ஐகோர்ட்டின் நீதிபதியாக சோமசுந்தரம் பணியாற்றிய போது, மனிதாபிமானம் அடிப்படையில், பல தீர்ப்புகளை வழங்கினார். முதன் முறையாக நடமாடும் கோõர்ட் அவரது முயற்சியால் உருவானது.""அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவி அவரை தேடி வந்தது. ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் பண்பாளர். தமிழக அரசின் நீதிவிசாரணைக் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்று, திறம்பட பணியாற்றினார்,'' என்றார்.முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பேசுகையில், "அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், இரு ஆண்டுகள் துணைவேந்தராக சோமசுந்தரம் பணியாற்றினார். நூலகத்தை விரிவுப்படுத்தினார். தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்' என்றார்.

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மோகன் பேசியதாவது:சோமசுந்தரம் நல்ல நீதிபதியாகவும், நேர்மையான நீதிபதியாகவும் பணியாற்றினார். பதவியில் இருந்த போது, படாடோபம் இல்லாதவராக திகழ்ந்தார். தவறான நீதியை வழங்கிவிடக் கூடாது என்பதை தனது குறிக்கோளாக கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுப்பட்ட அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன் போன்றவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர்.அப்போது, அவர்களுக்கு தண்டனை கொடுப்பதா? என்று அவர் தயங்கவில்லை. "இந்தி எதிர்த்து போராட்டம் நடத்துவது உங்கள் லட்சியம். உங்கள் நோக்கம் மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்' எனக் கூறி தண்டனை வழங்கினார். நீதிபதிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.சோமசுந்தரத்தால் தண்டிக்கப்பட்ட அண்ணாதுரை, முதல்வராக இருந்த போது, போக்குவரத்து ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அவர்கள் மத்தியில் சமரசம் ஏற்படுத்துவதற்காக, ஒரு நபர் நீதி விசாரணைக்குழு தலைவராக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டார். அவரது அறிவுரைகளின் படி இருத்தரப்பினரும் சமரசம் அடைந்தனர்.இவ்வாறு, நீதியரசர் மோகன் பேசினார்.மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது:சோமசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறை, இன்றைய இளைஞர்கள் தெரிந்துக் கொண்டு, உண்மை, நேர்மை போன்ற நெறிமுறைகளை கடைப்பிடித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஐகோர்ட்டின் நீதிபதியாக பதவி வகித்த போது, அவர் அளித்த தீர்ப்பு நியாயமாக இருந்தது. மிக விரைவாக தீர்ப்பு கொடுத்து தனிச்சிறப்பு பெற்றார்.பல்வேறு வழக்குகளில், அவரது தீர்ப்பு இன்று கோடிட்டு கூறப்படுகிறது. தெய்வ பக்தியும், தேச பக்தியுடன் அவர் செயல்பட்டார். துணைவேந்தர் பதவியிலும், பழநி முருகன் கோவில் சீரமைப்புக்குழுத் தலைவர் பதவியிலும், அவர் முத்திரை பதித்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், நிர்வாகத்திறன் கொண்ட துணைவேந்தராக செயல்பட்டார்.இவ்வாறு, வாசன் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை