| E-paper

 
Advertisement
கோலப்பொடி தொழிலைமுடக்கும் மின் வெட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தொட்டியபட்டி:மதுரை மாவட்டம் தொட்டியபட்டி பகுதியில், கடும் மின் வெட்டு நிலவுவதால், கோலப்பொடி தொழிற்சாலைகள் முடங்கின.இப்பகுதியில் 4 பேரும், எழுமலையில் ஒருவரும், கோலப்பொடி தயாரிப்பை குடிசை தொழிலாக நடத்தி வருகின்றனர். இவர்களிடம் சில்லரை வியாபாரிகள் கோலப்பொடியை வாங்கி, வீடுகளில் விற்கின்றனர். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இங்கு நிலவும் கடும் மின் வெட்டால் தொழில் முடங்கியுள்ளது.உற்பத்தியாளர் முத்துவேல்: உசிலம்பட்டி, நெல்லையில் பாளையத்தில் இருந்து "சீனிக்கல்' எனும் வெள்ளை நிறக் கண்ணாடி கற்களை விலைக்கு (ஒரு டன் ரூ.950) வாங்குகிறோம். அதை உடைத்து, இயந்திரத்தில் கொடுத்து, கோலப்பொடி தயாரிக்கிறோம். 50 கிலோ சிப்பம் ரூ.75க்கு விற்கிறோம். கோலப்பொடியின் கழிவுகளில் தாவரங்களுக்கு தேவையான கால்சியம் சத்து உள்ளது. இதை விவசாயிகள் உரமாக பயன்படுத்துகின்றனர்.இதன் விலை (50 கிலோ சிப்பம்) ரூ.70. கடும் மின் வெட்டு நிலவுவதால், இங்கிருந்த கோலப்பொடி கம்பெனிகள் மூடப்பட்டு விட்டன. நான்கு பேர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். குடிசை தொழில் என்பதால் அதிக முதலீடு செய்ய வழியில்லை. வங்கியிலும் கடன் கிடைக்காது. மின் வெட்டை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அமல்படுத்தினால் கூட ஓரளவு தப்பிப்போம். அறிவிக்கப்படாத பல மணி நேர மின் வெட்டால் தொழில் முடங்கியுள்ளது, என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANBE VAA J.P. - madurai,இந்தியா
08-ஏப்-201311:23:29 IST Report Abuse
ANBE VAA J.P. இந்த தொழில் மட்டுமா தமிழ்நாடே முடங்கியுள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.