ந‌ரேந்திர மோடியுடன் ஒப்பிடாதீர்கள்:முதல்வர் சவுகான் பெருமிதம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

போபால்:""குஜராத் முதல்வர், நரேந்திர மோடியுடன் என்னை ஒப்பிடாதீர்,'' என, மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில், குஜராத் மாநில முதல்வர், நரேந்திர மோடி, தொடர்ந்து, நான்காவது முறையாக வெற்றி பெற்று, சாதனை படைத்தவர். அதுபோல், மத்திய பிரதேசத்திலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.,வை சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். மோடி அளவுக்கு, சவுகானுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிறப்பான நிர்வாகத்தை, மோடி போலவே, சவுகான் வழங்கி வரும் நிலையிலும், அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது, அம்மாநில பா.ஜ.,வினர் வருத்தம். இதுகுறித்து, அவ்வப்போது, அதிருப்தி குரல்கள் எழுவது வழக்கம். சமீபத்தில், கட்சியின் மேலிட நிர்வாகிகள் மாற்றத்தில், முதல்வர் மோடி, கட்சியின் பார்லிமென்ட் குழுவில் இடம்பெற்றார்; பா.ஜ.,வின் மற்றொரு முதல்வரான, சவுகான் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, முதல்வர், சவுகானிடம், இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், ""என்னை, மோடியுடன் ஒப்பிடுவது தவறு; நான், மத்திய பிரதேசத்திற்கு தொண்டாற்றி வருகிறேன். அது போன்ற மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை,'' என்றார். மேலும் அவர் கூறும் போது, ""அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும், மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற, தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்; அது தான் என் விருப்பம்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
09-ஏப்-201300:44:21 IST Report Abuse
பொன்மலை ராஜா முதலில் திரு.P M Narayanan Nambisan அவர்களிடம் தெரிவிக்கலாம் என சிலர் கூறியபோது, அவர்களுடன் இருந்த திரு.P M Narayanan Nambisan அவர்களின் நண்பர்களில் ஒருவர் "அதனை விட இராஜ்பட்சேவிடம் தெரிவித்துவிடலாம்" என்று தெரிவித்ததால் வைகோவை தொடர்பு கொண்டார்களாம் ...
Rate this:
Share this comment
Cancel
அண்ணாத்தம்பி - திருச்சி ,இந்தியா
08-ஏப்-201312:41:18 IST Report Abuse
அண்ணாத்தம்பி இராஜபட்சேக்கு இலங்கையில் விருந்து வைத்த தலைவர்கள் ஆளுங்கட்சியில் இருக்க இந்தியாவில் விருந்து வைத்த உமது துணிச்சலுக்காக நிச்சயம் பிரதமர் பதவிதான் தர வேண்டும் ... சுஷ்மா சுவராஜ் வழிமொழிகிறார் ...
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
08-ஏப்-201312:41:02 IST Report Abuse
Mohamed Nawaz நீங்களும் அவரது பார்முலாவை பின்பற்றி மக்களை பிரித்தால முயற்ச்சி செய்யுங்கள் மேல போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
fardhikan - lakshmaangudi,இந்தியா
08-ஏப்-201311:36:55 IST Report Abuse
fardhikan உண்மைதான் மதக்கலவரத்தின் மூலம் நாட்டை துண்டாடி ஆட்சியை பிடிக்கும் நரமிருகத்துடன் ஒப்பிட முயன்றால் எப்படி மனது ஒப்பும்.
Rate this:
Share this comment
Anniyan Bala - Chennai,இந்தியா
08-ஏப்-201314:11:30 IST Report Abuse
Anniyan Balaகாங்கிரஸ் ஆட்சியில் தான் தீவிரவாதம் தலை தூக்குகிறது....
Rate this:
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
08-ஏப்-201309:36:04 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னிடம் வணங்கும்.... ஹாட்ரிக் அடிக்கபோகும் பிஜேபியின் இரண்டாவது முதல்வர் வாழ்க பல்லாண்டு
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
08-ஏப்-201309:23:06 IST Report Abuse
sitaramenv பண்பட்ட தேசப்பற்றுள்ள அரசியல்வாதிகள் நிறைந்த கட்சி பாரதீய ஜனதா . சரியான நேரம் வரும்.....காத்திருங்கள். மோடியுடன் உங்களையும் சேர்த்து இந்த நாடு கொண்டாடும். கேலியும் கிண்டலும் இறுமாப்பும் அகம்பாவமும் கொள்ளைக்காரர்களை பாதுகாக்கும் உத்தமகுனமும், கொண்ட ஒரு அருவருப்பான அரசியல்வாதி திக்விஜய் சிங்க் அவர்கள் வலம் வரும் மண்ணை சுத்தம் செய்து வருகிறீர்கள். ஒளிர்கின்ற நேரம் தூரத்தில் இல்லை....பொறுத்து இருங்கள். ....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
08-ஏப்-201306:33:06 IST Report Abuse
ஆரூர் ரங அதிலென்ன சந்தேகம்? சென்ற ஆண்டில் இந்தியாவிலே நம்பர் ஒன GDP வளர்ச்சி விகிதம் மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் .பீகாரைக் கூட முந்திவிட்டது (Bihar's GDP growth stands at Rs 157,957 crore in the current fiscal which is up Rs 13,679 crore from its previous fiscal's growth at Rs 144,278 crore.Madhya Pradesh clocked a growth of Rs 2,21,463 crore this year as compared to Rs 2,01,290 crore the previous year. The state has added Rs 20,000 crore to its economy )அதற்கு சவுஹான் அரசுதான் முக்கிய காரணம். மோடி யின் குஜராத் மிக அதிக வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான் . ஆனாலும் மக்கள் தொகையில் பெரும்பங்கு பழங்குடியினர் என்பதால் ம பி யில் வளர்ச்சி காட்டியது மிகக் கடினமான ஒன்று .அங்கு தாம் வெற்றிபெறும் வாய்ப்பேயில்லை என காங்கிரஸ்காரர்களே நம்புவதால் சவுகான் தன சேவையைத் தொடர பிரகாசமான வாய்ப்புள்ளது .நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் இத்தகைய முதல்வர் தொடர்வது நல்லதே
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:28:06 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..இது வரை குஜராத் தான் நம்பர் ஒன் என்ற கோசமும் பொய் தானே......
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
08-ஏப்-201312:48:16 IST Report Abuse
ஆரூர் ரஙமான் பாய்,நான் சுட்டிக் காட்டியிருப்பது கடந்த ஒரு நிதி ஆண்டு வளர்ச்சி மட்டுமே ஆனால் நீண்டகால அடிப்படையில் கடந்த பத்தாண்டு வளர்ச்சியில் குஜராத்தை மிஞ்ச எதுவுமில்லை என்பதே உண்மை சந்தேகமிருந்தால் அந்த மாநிலத்தவரைக் கேளுங்கள் .அட ஒரு ஊரடங்கு உத்தரவு கூட பிறப்பிக்ககபடாத அமைதி பூங்கா அது...
Rate this:
Share this comment
ramesh - villupuram,இந்தியா
08-ஏப்-201313:35:49 IST Report Abuse
rameshஎந்த ஒரு பூனை குட்டியும் இருப்பதாக தெரியவில்லை . ஒருவன் 95 % லிருந்து 96 % எட்ட நீண்ட நாளும் அனல் 10 % 50 % ஐ சுலபமாக எட்டி விடலாம்...
Rate this:
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
08-ஏப்-201315:29:19 IST Report Abuse
Narayanவளர்ச்சி விகிதம்னா என்ன வளர்ச்சி அப்படின்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டு அப்புறமா வந்து கமெண்ட் பண்ணுங்க சுலைமான் சார். எதிர்க்கணும்னு சொல்லிட்டாங்களேன்னு சும்மா எல்லாத்தையும் கண்மூடித்தனமா எதிர்க்க கூடாது, சுயமா நீங்களே யோசிங்க...
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201306:16:14 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இது தன்னடக்கதால் வெளிப்பட்டது என்றால் வாழ்த்துக்கள். விரக்தியின் வெளிபாடு என்றால் அனுதாபங்கள். (i meant the accent)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்