Advertisement
பயணிகள் கூட்டத்தில் கார் புகுந்தது பெண் பலி; அ.தி.மு.க., பிரமுகர் உள்பட 7பேர் காயம் தூத்துக்குடி அருக விபத்து
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
07:11

தூத்துக்குடிதூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளத்தில் பஸ்”க்காக நின்றுகொண்டிருந்த பயணிகள் கூட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த அதிமுக பிரமுகர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் பலியனார். 7 பேர் படுகாயமடைந்தனர்.இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:ஆழ்வார்திருநகரி அ.தி.மு.க., யூனியன் துணைச் சேர்மனாக இருப்பவர் ராஜ்நாராயணன்(45). இவர் நேற்று காரில் அதிமுக நிர்வாகி சுப்பிரமணியன்(55) என்பவருடன் தூத்துக்குடிக்கு பாளை ரோட்டில் வந்துகொண்டிருந்தார். கார் கோரம்பள்ளம் அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி கோரம்பள்ளம் பஸ்ஸ்டாப்பில் பஸ்”க்காக நின்றுகொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்து தலை குப்புற கவிழந்தது. இதில் காரில் அடிபட்டு கோரம்பள்ளத்தைச் சேர்ந்த தங்கையா என்பவரது மனைவி ரோஸ்லின் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். மேலும் கோரம்பள்ளம் அருகேயுள்ள பொன்னகரத்தைச்சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி ஜெயராணி(27), அவரது மகன் முத்துக்கணேஷ்(4),வீராச்சாமி(50), குமரப்புரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் செந்தூர்பாண்டி(30) கோரம்பள்ளம் சுரேஷ், மற்றும் காரில் வந்த யூனியன் துணைச் சேர்மன் ராஜ்நாராயணன், மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்தகோர விபத்து குறித்து புதுக்காட்டைபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.