LK Advani, Narendra Modi to skip BJP's major Karnataka rally | கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம்:அத்வானி,மோடி மிஸ்ஸிங்| Dinamalar

கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம்:அத்வானி,மோடி மிஸ்ஸிங்

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம்:அத்வானி,மோடி மிஸ்ஸிங்

பெங்களூரு:கர்நாடகாவில் ச‌ட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 5 ம் தேதி நடைபெறுகிறது. இதனைமுன்னிட்டு தேர்தல் பிரச்சார பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இதில் அத்வானி, நரேந்திர மோடி ‌பெயர்கள் விடுபட்டுள்ளன.இது குறித்து பா.ஜ.க., எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் மனுதாக்கல் ஏப்ரல் 10 ம் தேதி ‌தொடங்கி ஏப்ரல் 17 ம் தேதி மனுதாக்கல் முடிகிறது. மே 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, முடிவுகள் மே மாதம் 8 ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரச்சார கூட்டத்தில் பேசுபவர்கள் பட்டியலை குறித்து பா.ஜ.க., ‌பொதுச்செயலாளரும் மற்றும் பெங்களூரு தெற்கு மக்களவை எம்.பி.,யுமான அனந்தகுமார் கூறுகையில், கர்நாடக ‌சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு பா.ஜ.க., தலைவர்களான அத்வானியும், நரேந்திர மோடியும் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுவார்கள் எனத்தெரிவித்துள்ளார். அவர்கள் பெயர்கள் விடுபட்டு இருந்தாலும் உறுதியாக அவர்கள் பிரசாரம் செய்து பேசுவார்கள் என நம்பிக்‌கை தெரிவித்திருந்த‌ார்.
இந்த இரு தலைவர்களும் பேசினால் கட்சியின் வலிமையை காட்ட முடியும்.கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் டில்லியில் முதலில் முடிவு செய்யப்பட்ட 140 பேரை பா.ஜ.க., பார்லிமென்ட் குழு தேர்வு செய்தது. இதில் மோடி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த இரு தலைவர்களின் பெயர்கள் விடுபட்ட நிலையில் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, பா.ஜ.க.,விலும் பல்வேறு ஊகங்கள் எழுகின்றன.இந்நிலையில் கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டார் ‌நேற்று அறிவிக்கையில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களில் 5 மாவ‌ட்டங்களில் மோடி பிரசாரம் செய்வார் என்றார். கடந்த 2008ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு மோ‌டி பிரசாரம்‌ செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது அவர் 10 நாட்கள் பிரசாரம் செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
09-ஏப்-201310:09:03 IST Report Abuse
Yoga Kannan ஆனந்த் கருத்தே தான் என்னுடைய கருத்தும்,,,, மாற்றமில்லை .... உண்மையான வீரனுக்கு அழகு போரில் கலந்து கொள்வதே,,,,, அப்பறம் எப்படி டெல்லி ,,,,,,,,,,,கனவோடு போயிடும்,,,,,,,,,,,,,,,
Rate this:
Share this comment
Cancel
Anand - Nanjil Nadu,இந்தியா
08-ஏப்-201314:23:02 IST Report Abuse
Anand இதே காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருந்தால் தலைப்பே வேற மாதிரி இருந்திருக்கும் - தோல்வி பயத்தால் ஓட்டம் , பின்வாங்கினார் என்றெல்லாம் பின்னி பெடலேடுத்திருப்பிங்க................ ஒண்ணே ஒண்ணு நல்ல புரியுது நடுநிலைமை மிஸ்ஸிங்
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
08-ஏப்-201314:22:45 IST Report Abuse
Mohamed Nawaz கடந்த முறை ஜெயித்தது காங்கிரஸ் உட்பூசலால்.... இம்முறை பிஜேபி வாய்ப்பில்லை என்பது கர்நாடக மக்களின் தீர்ப்பு....
Rate this:
Share this comment
Cancel
g. Tharanipathi - chennai,இந்தியா
08-ஏப்-201312:55:06 IST Report Abuse
 g. Tharanipathi இதற்க்கு எதற்கு இவ்வளவு பில்ட் அப் மோடிக்கு
Rate this:
Share this comment
Cancel
yousuf - riyadh,சவுதி அரேபியா
08-ஏப்-201310:37:26 IST Report Abuse
yousuf மோடியால் வெற்றி யை தேடி தரமுடியாது , வெற்றி பெரும் இடத்தில மட்டும் இருந்து கொண்டு வெற்றி என்னால் தான் என்பார்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
08-ஏப்-201309:24:32 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் அன்னா ஹஜாரே கேஜ்ரிவால் மற்றும் யோகா சாமி கூட வரமாட்டாங்க....காங்கிரஸ் எங்கே எல்லாம் நாலாம் எடம் பிடிக்க போகுதோ அங்கெல்லாம் முன்னால போய் நிப்பாங்க பிரச்சாரத்துக்கு..
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
08-ஏப்-201309:18:43 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தோல்வி நிச்சயம் என்ற நிலையில் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முந்துபவர்களை கர்நாடகத்தில் இறக்கி அசிங்கபடுவதை தவிர்க்கலாம் என்னும் எண்ணம் தலை தூக்கி இருப்பதில் தவறு இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை