Advertisement
கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைத்துள்ள மத்திய அரசு: முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 ஏப்
2013
01:01
பதிவு செய்த நாள்
ஏப் 09,2013 23:48

கோல்கட்டா :""ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, காங்., அல்லாத கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களை, பாரபட்சமாக நடத்துகிறது. இப்படி, பாரபட்சம் காட்டுவதற்கான, எந்த உரிமையும், மத்திய அரசுக்கு இல்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நாட்டின், கூட்டாட்சி தத்துவத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் உள்ளது ,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பாஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, அந்த கட்சி மேலிடம், திட்டமிட்டுள்ளது.இதையடுத்து, நரேந்திர மோடி, ஒவ்வொரு மாநிலமாக சென்று, முக்கியமான பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகளில் பங்கேற்று வருகிறார். நேற்று முன் தினம் டில்லியில் நடந்த, தொழில் மற்றும் வர்த்தக சங்க, பெண்கள் பிரிவு கூட்டத்தில் பங்கேற்று, உரை நிகழ்த்தினார்.

நேற்று, மேற்கு வங்கம்... :



இதையடுத்து, நேற்று, மேற்கு வங்க மாநிலம் சென்றார். கோல்கட்டாவில் உள்ள, வர்த்தக சங்க விழாவில், நரேந்திர மோடி பேசியதாவது:காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, தவறான கொள்கைகளை பின்பற்றுகிறது. இந்த ஆட்சி, ரொம்ப நாள் நீடிக்காது. நாள் கணக்கில் அல்ல; மணிக்கணக்கில் தான், இந்த ஆட்சி நீடிக்கும். ஐ.மு., கூட்டணி அரசின், வெளியுறவு கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டன.இத்தாலிய கடற்படையினர், இந்திய மீனவர்களை சுட்டு கொன்ற விவகாரம், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்களின் தலைகளை துண்டித்த சம்பவம், வங்கதேச வீரர்கள், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் போன்றவை, மத்திய அரசின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்து விட்டதை, உறுதிபடுத்துகின்றன.

பாரபட்சம்:



வெளியுறவு கொள்கையை உருவாக்கும்போது, முதலில், நாட்டின் நலனை பரிசீலிக்க வேண்டும். காங்., தலைமையிலான மத்திய அரசு, காங்., அல்லாத கட்சிகள் ஆளும், மாநில அரசுகளிடம், பாரபட்சமாக நடந்து கொள்கிறது. வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில், எதிர்க்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நாட்டின், கூட்டாட்சி தத்துவத்தையே, குழி தோண்டி புதைக்கும் வகையில் உள்ளது. எந்த ஒரு மாநிலத்தையும், பாரபட்சமாக நடத்துவதற்கு, மத்திய அரசுக்கு உரிமை இல்லை; அதை, அனுமதிக்கவும் மட்டோம்.தகுதியை இழந்தது ஐ.மு.கூ.,வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தபோது, எந்த மாநிலத்திடமும், பாரபட்சம் காட்டப்படவில்லை. ஆட்சி நடத்தும் தகுதியை, ஐ.மு., கூட்டணி இழந்து விட்டது. இரவல் ஆதரவுடன், காலம் தள்ளுகிறது.மத்திய அரசால், மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் கவர்னர்கள், மாநில அரசுகளுடன், மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. மாநில அரசின் திட்டம், அவர்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ, அரசியல் சட்டப்படி, அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தை, 32 ஆண்டுகளாக ஆட்சி செய்த, இடதுசாரி கட்சிகள், பல, ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி விட்டன. இவற்றை சரி செய்ய, கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி. இதற்கான நடவடிக்கையை எடுப்பார் என, நம்புகிறோம்.

விவேகானந்தரின் கொள்கை :



இளைய தலைமுறையினர், சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பின்பற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். என், இளம் வயதில், சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட மடத்துக்கு, அடிக்கடி வந்துள்ளேன். முதல்வரானபின், இப்போது தான், முதல் முறையாக வருகிறேன்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதை அடுத்து, தனக்கு ஆதரவு திரட்டும் வகையில், அவர், ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் செய்து வருகிறார். மம்தாவின் ஆதரவை பெறுவதற்காகவே, அவர், மேற்கு வங்கத்துக்கு சென்றார். ஆனால், மம்தா பானர்ஜி, டில்லிக்கு சென்று விட்டார்' என்றன.மோடியின் வருகையை எதிர்த்து, விழா நடந்த இடத்துக்கு முன், சிலர், ஆர்ப்பாட்டம் நடத்தியதால், சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudarsan - Coimbatore,இந்தியா
10-ஏப்-201318:17:20 IST Report Abuse
Sudarsan கேரளா மீனவர்களை பற்றி பேசுகிற மோடி தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை பற்றி ஏன் பேசவில்லை ? இவரும் பிரதமர் ஆனவுடன் தமிழகத்தை கழட்டி விட்டு விடுவர் போல
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Manasatchi - Chennai,இந்தியா
15-ஏப்-201309:09:29 IST Report Abuse
Manasatchiதமிழகத்தில் எத்தனை கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள் என முதலில் சொல்லுங்கள்.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-ஏப்-201318:14:47 IST Report Abuse
JALRA JAYRAMAN கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைத்துள்ள மத்திய அரசு சரி உங்கள் மாநிலத்தில் பஞ்சயத், நகராட்சி, மாநகராட்சிக்கு என்ன அதிகாரம் கொடுத்துள்ளிர்கள் மாநிலத்தில் அதுவும் உங்கள் கையில் தானே அதிகாரம் குவிந்துள்ளது சாத்தான் வேதம் ஓதுகிறது
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Nazeer Ahamed(INDIAN) - Kuala Lumpur,மலேஷியா
10-ஏப்-201318:03:56 IST Report Abuse
Nazeer Ahamed(INDIAN) மோடி காமெடி பிஸ், பகல் கனவு வேண்டாம்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
10-ஏப்-201317:43:57 IST Report Abuse
நீலகண்டன் இப்பொழுது இந்தியாவின் தேவை நல்ல பிரதமர், திரு. மோடி அவர்களே இதற்கு தகுதி ஆனவர். திரு. மோடி அவர்களின் சிறந்த நிர்வாக திறமை மற்றும் குஜாரத்தில் சமுக ஒற்றுமை போற்றுதல் கணக்கில் எடுத்தால் அவர் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்ய தகுதி நிறைந்தவர். மேலும் இன்றைய சுழலில் இந்தியாவின் தலைஎழுத்து சிறந்த நிர்வாகிகளால் நிரப்ப வேண்டும் மற்றும் நம் அண்டை நாடுகளில் உள்ள பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் நம் நாட்டின் இறையாண்மை பேனுதல் அவசியம். நேர்மையான, தைரியமான அரசியல் களத்தில் தன் திறமையை நிருப்பிப்பிக வேண்டும். திரு.மோடி அவர்களால் இது நிச்சயம் முடிந்த செயல் தான். பிஜேபி தான் இதற்கான முழு முயற்சி மேற்கொண்டு வரும் தேசிய தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டாச்சி அமைத்து பல போராட்டம் சந்திக்கும் இந்த அரசை போல் செயல் பட வேண்டாம் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும். அப்பொழுத்தான் நம் பாரத தேசம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
Rate this:
8 members
0 members
24 members
Share this comment
Cancel
Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்
10-ஏப்-201315:26:59 IST Report Abuse
Meto Enjoy இவனுக்கு பாரபட்சம் என்றால் என்னவென்றே தெரியாது. தன் சொந்த மாநிலத்தில் இவன் செய்யும் பாரபட்சதைவிடவா மோசம்?
Rate this:
34 members
0 members
14 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201317:57:52 IST Report Abuse
Nallavan Nallavanபால் பாகுபாடு காட்டுகிறார் என்று சொல்ல வருகிறீர்களா? உங்களுக்கு எப்படி?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
10-ஏப்-201313:59:49 IST Report Abuse
vidhuran பிரதமர் வேட்பாளர் ஆவதற்கே இந்த மனுஷன் இந்தளவு தகிடு தத்தம் போட்டுப் படாத பாடு படுகிறார். இந்தப் பிஜேபி ஆதரவு ஊடகங்களுக்கும், பிஜேபி சொம்புகளுக்கும் வேறு வேலையில்லை போலும். அத்வானிக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.
Rate this:
33 members
0 members
19 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201317:56:29 IST Report Abuse
Nallavan Nallavanமோதிக்கு பிரதமர் பதவியில் ஆசை இல்லை ..... மாநிலத்தில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டைக் கூற முடியவில்லை ..... CAG கூட முறைகேடு குற்றச்சாட்டைக் கூற முடியவில்லை .... நிதி மேலாண்மை சரி இல்லை என்றுதான் உப்புச் சப்பில்லாத குற்றச்சாட்டு கூறி உள்ளது ..... அத்தோடு கூட மக்கள் ஆதரவும் (தேசிய அளவில் அவர் முக்கியத்துவம் பெற்று வருகிறார் என்பது வெள்ளிடை மலை) குறிப்பாகச் சிறுபான்மையினர் ஆதரவும் பெற்று மேலும் .... மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறார் மோதி ..... இதை அறிந்த பிற முதல் நிலைத் தலைவர்கள் தங்களது ஆசையை ஓரம் கட்டிவிட்டு மோதியைப் பிரதமர் வேட்பாளராக்கினால் தான் பாஜகவுக்கு மறு வாழ்வு என்று உணர்ந்தது போலத் தெரிகிறது ..... எனினும் அத்வானி பதவி ஆசை அற்றவர் .... கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் ..... அதனால்தான் அவர் எங்கே சென்றாலும் மாஞ்சா போட ஒரு கும்பல் காத்திருக்கிறது ..... கொள்கையை உதறிவிட்டு பதவியே குறி என்றிருந்தால் அவருக்கும் மதச்சார்பின்மை பேசி ஒட்டு வேட்டை ஆடத் தெரியும் .... எப்போதோ பிரதமர் பதவியைப் பிடித்தும் இருப்பார் .... அவர் பிரதமர் பதவியை அடைந்திருந்தால் அவர் யாருக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை .... ஆக வயிற்றுப் போக்கு அத்வானிக்கும் இல்லை .... நண்பர் விதுரருக்கா? தெரியாது .........
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-ஏப்-201313:51:48 IST Report Abuse
kumaresan.m " மோடி அவர்கள் ஊழலை பற்றி எடுத்து கூறி இருக்க வேண்டும் .....காங்கிரஸ் அரசு வெளியுறவு துறை மற்றும் அல்ல அணைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நமது குடியரசு தலைவர் கடந்த வாரம் ஒப்பு கொண்டுள்ளார் "
Rate this:
5 members
0 members
17 members
Share this comment
Cancel
ahamed - nellai,இந்தியா
10-ஏப்-201311:41:01 IST Report Abuse
ahamed இளஞ்சர்கள் நாங்கள் வாரம், நீங்கள் முதலில் அரசியலை விட்டு இல்லை, இல்லை இந்தியாவை விட்டு ஓடும்....
Rate this:
48 members
0 members
13 members
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
10-ஏப்-201311:36:20 IST Report Abuse
Tamilarasu Rajakkili இவருடைய வேஷம் கலைக்கப்பட்டால் உடனடியாக இவரின் ஆவேசம் தானாக ஓடிப்போகும்.. பசுதோல் போர்த்திய புலி மோடி என்பது எல்லோருக்கும் தெரியும் குஜராத்திகளை தவிர... அத்வானிஜி இருக்கும் வரை யாரும் பி.ஜே.பி.யின் பிரதமராக வரமுடியாது.... ஒரு நல்ல தலைவர்... அனுபவம் நிறைந்தவர்.. ஆற்றலுள்ளவர்.. சந்தர்ப்பவாதி இல்லை...
Rate this:
52 members
3 members
16 members
Share this comment
vadivelu - chennai,இந்தியா
10-ஏப்-201315:59:07 IST Report Abuse
vadiveluசவுதியில் இருந்து கருத்து சொல்லும்போதே உங்களின் வேஷம் தெரிந்து விடுகிறது.அவர் வேஷம் கலையாது உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை.வெறியர் யார் அவரா/ நீங்களா?...
Rate this:
8 members
0 members
22 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201318:00:01 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ அத்வானிஜி இருக்கும் வரை யாரும் பி.ஜே.பி.யின் பிரதமராக வரமுடியாது.... ஒரு நல்ல தலைவர்... அனுபவம் நிறைந்தவர்.. ஆற்றலுள்ளவர்.. சந்தர்ப்பவாதி இல்லை...//// இந்தக் கிளிக்கு (ராஜகிளி-ன்றதுனாலையா?) தெரியுது ..... குஜராத் "பச்சைக்" கிளிகளுக்குத் தெரியலையே ...... அவங்க அதிகமா இருக்குற தொகுதியில கூட பாஜக மெஜாரிட்டி பெறுதே? ஏன்? அவங்களுக்கு இல்லாத விவரம் இந்த ராஜகிளிக்கு இருக்குதா?...
Rate this:
8 members
0 members
2 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201318:03:42 IST Report Abuse
Nallavan Nallavan\\\\அத்வானிஜி இருக்கும் வரை யாரும் பி.ஜே.பி.யின் பிரதமராக வரமுடியாது.... ஒரு நல்ல தலைவர்... அனுபவம் நிறைந்தவர்.. ஆற்றலுள்ளவர்.. சந்தர்ப்பவாதி இல்லை... //// பி.ஜே.பி. கட்சியில பிரதமர் பதவி இல்லை நண்பரே .... அப்பதவிக்கான வேட்பாளர் என்று தேர்தலுக்கு முன்னர் அறிமுகப்படுத்துவார்கள் ..... அறிமுகப்படுத்தப் படவேண்டிய தலை ஜெயிக்காது .... தேறாது என்றால் அந்த தேசியக் கட்சிக்குச் சங்கடம் தான் அதனால "இப்போ அதைப்பத்தி என்ன?" அப்படிக் கேட்டு மழுப்புவாங்க ... அது சரி .... மதுரைக் கிளிகள் அத்வானி மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்காங்க தெரியுமா? அவர் போற பாதையெல்லாம் "எதை எதையோ" வெக்கிற அளவுக்கு ..... நீங்க அத்வானியைப் "பாசத்தோட புகழ்ந்த" உடனே எனக்கு அதுதான் ஞாபகம் வந்திச்சு .... ...
Rate this:
8 members
0 members
2 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஏப்-201318:18:15 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ மதுரை திருநகர் தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் (27). இவரை அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்திருந்தனர். இன்று நீதிபதி பன்னீர் செல்வம் முன்பு இவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், திடீரென ஜாஹிர் உசேன், தான் வெறும் ரவுடிதான் என்றும், தான் பயங்கரவாதி இல்லை என்றும் கூறி, இடது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டார். இதை அடுத்து, அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். //// இவரும் (ஜாஹிர் உசேன்) நம்ம நண்பர் தமிழரசு ராஜக்கிளி மாதிரி அத்வானி மேல ரொம்பத்தான் பாசம் வெச்சிருக்காரு...
Rate this:
8 members
0 members
2 members
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
10-ஏப்-201310:56:34 IST Report Abuse
KMP மோடி நாடு முழுக்க சுற்றி இளைய தலைமுறையை சந்திக்க வேண்டும்
Rate this:
21 members
0 members
52 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.