Advertisement
சட்டசபை புறக்கணிப்பு: விஜயகாந்த் அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 ஏப்
2013
01:04
பதிவு செய்த நாள்
ஏப் 09,2013 23:52

சட்டசபையில், உரிய நேரத்தில் பேச அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஒரு நாள் சட்டசபையை புறக்கணிக்க, தே.மு.தி.க., கட்சி முடிவு செய்துள்ளது.

சட்டசபையில், நேற்று மானிய கோரிக்கை விவாதத்தின் மீது, உரிய நேரத்தில் பேச அனுமதி மறுத்ததாக கூறி, தே.மு.தி.க., -எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

வீட்டில் ஆலோசனை :இதுகுறித்து, அலைபேசி மூலம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்த், தனது விருகம்பாக்கம் வீட்டில் இருந்தார். சாந்தி, சுபா ஆகிய இரு பெண் எம்.எல்.ஏ.,க்களை மட்டும், எம்.எல்.ஏ., விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு, மீதமுள்ளவர்களை தன் வீட்டிற்கு வருமாறு விஜயகாந்த், அழைத்தார்.இதைதொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள், பிற்பகல், 2:10 மணிக்கு விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். அங்கு, எம்.எல்.ஏ.,க்களிடம், சட்டசபையில் நடந்த விவரங்களை விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்கட்சி என்ற முறையில், உரிய நேரத்தில் தான் பேசவேண்டும். கடைசியில் பேசினால், எதிர்கட்சிக்கு மதிப்பு இருக்காது. எனவே, இந்த கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளனர்.

வேறு சில எம்.எல்.ஏ.,க்கள், கேள்வி நேரத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு, சபையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம்' என்று கூறியுள்ளனர். உரிய நேரத்தில் பேச அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாயில் கறுப்பு துணி கட்டிச்சென்று, சபையில் அமரலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. ஆனால், இது குறித்து தனது இறுதி முடிவை, விஜயகாந்த் அறிவிக்கவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்துமாறு, எம்.எல்.ஏ.,க்களை, விஜயகாந்த் அனுப்பிவைத்தார். அதன் பிறகு, 2:40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அசோக்நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் வீட்டிற்கு, எம்.எல்.ஏ.,க்கள் சென்று, ஆலோசனையில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்திற்கு பின், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களது இருப்பிடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

புறக்கணிப்பு முடிவு:



இதன் பின்னர், கட்சி தலைவர் விஜயகாந்த், வெளியிட்ட அறிக்கை: சட்டசபையில், தினமும், மானியக் கோரிக்கைகள், துறை வாரியாக, விவாதத்திற்கு எடுத்துக் கொள் ளப்படுகிறது. மானிய கோரிக்கையை, துறை அமைச்சர் முன்மொழிவார். அதன்பிறகு வெட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, பிரதான எதிர்கட்சி பேசுவது, இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.ஆனால், இன்று (நேற்று), சபாநாயகர், பிரதான எதிர்கட்சியான தே.மு.தி.க.,- எம்.எல். ஏ.,க்கள் மீது, சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் பேசிய பிறகு, தே.மு.தி.க., வினர் கடைசியாக பேசவேண்டும் என, ஏற்கனவே இருந்த நடைமுறைகளை மாற்றி அமைத்துள்ளார்.

மறுபரிசீலனை :



எம்.எல்.ஏ.,க்கள் குறித்த நேரத்தில் பேசி முடிப்பதற்கும், சம்மந்தம் இல்லாத விஷயங்கள் பேசினால் அதை நீக்குவதற்கும், அவர்களை முறைப்படி நடத்துவதற்கும் சபாநாயகர் அதிகாரம் பெற்றுள்ளார். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சை, சபாநாயகர் முறைப்படுத்தி இருக்கலாம். அதற்கு மாற்றாக, எதிர்கட்சிக்கு தரப்பட்ட அந்தஸ்தை மாற்றுவது முறையல்ல.முக்கிய எதிர்கட்சிக்கு வரிசை முறையை மாற்றி அமைத்தது, ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பதால், சபாநாயகர் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். தே.மு.தி.க.,விற்கு மட்டுமல்ல, எந்த எதிர்கட்சிக்கும், இது, தவறான முன்மாதிரியாகிவிடக்கூடாது. இந்த மாற்றத்தை ஜனநாயக உணர்வோடு எதிர்ப்பதற்காக, நாளைய சட்டசபை கூட்டத்தில் தே.மு.தி.க., -எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க மாட்டார்கள்.இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (95)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Panchu - Chennai,இந்தியா
10-ஏப்-201317:25:08 IST Report Abuse
Krish Panchu அய்யா விஜயகாந்த் அவர்களே சட்ட சபைக்கு வந்தாலும் வெளி நடப்புத்தான் செய்வீர்கள் . அப்புறம் நீங்க சட்டசபைக்கு வந்த என்ன வரட்டா என்ன எல்லாம் ஒண்ணுதான்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
KARURSELVARAJ - karur,இந்தியா
10-ஏப்-201317:09:23 IST Report Abuse
KARURSELVARAJ கேப்டன் அவர்களை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை
Rate this:
2 members
1 members
0 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
10-ஏப்-201316:11:27 IST Report Abuse
Raju Rangaraj சட்டசபைக்கு போனால் மட்டும் உருப்படியாக உங்கள் தொகுதியின் குறைபாடுகள் பற்றி பேசி விளக்கம் கேட்டீர்களா ?இல்லையே ?தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் ?உடனடி தேவை என்ன ?மக்களின் இன்றைய பிரச்சினை என்ன ?இவைகளை தொகுத்து நீங்கள் சட்ட சபையில் பேசினால் அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் குறைந்த பட்சம் செய்தி தாள்களில் அது வந்து மக்களும் படிக்க ஏதுவாகிறதுஉங்களுக்கான பணியை நீங்கள் தொடர்கிறீர்கள் என்ற எண்ணமாவது மக்களிடம் ஏற்பட்டிருக்கும்உதாரணமாக ஈரோட்டில் போக்குவரத்து பிரச்னை மேட்டூர் ரோட்டிலும் சத்தி ரோட்டிலும் கடைவீதியிலும் சூரம்பட்டியிலும் வாகனங்கள் செல்ல எத்தனை கஷ்டம் என்பதை எங்கள் எம்.எல்.ஏ உணர்வாரா ?உணர்ந்தால் என்ன நடவடிக்கை அல்லது பொது மக்களையும் கட்சி தொண்டர்களையும் திரட்டி என்ன போராட்டம் நடத்தினார் ?ஒன்றுமில்லையே தேமுதிமு சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்களின் தலைவரைப்போல் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை பெற்று ஜாலியாக வாழ்வதே சிறந்தது குறைந்தது அவர்களாவது மன நிம்மதீயோடு வாழலாம்
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
10-ஏப்-201316:10:14 IST Report Abuse
LOTUS ரொம்ப போர் அடிக்கிறப்ப .......இப்படிதான் லீவ் சொல்லிவிட்டு ஒருநாள் மட்டும் அந்த நாள் ஞாபகத்தில் தொப்புளில் ஆம்ப்லேட் சுட்டு, பம்பரம் விட்டு ரிலாக்ஸ் பண்ண போன.......... இப்படி ஆளாளுக்கு அலப்பரை பண்ணுறீங்களே ...........
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Anwar ali - havana,கியூபா
10-ஏப்-201315:52:02 IST Report Abuse
Anwar ali அது .அந்த நேரத்துல விருதகிரி போல ஒரு அருமையான படத்தில் நடிச்சு ரிலீஸ் பண்ணு தல. யார்ருகிட்ட ?
Rate this:
3 members
0 members
10 members
Share this comment
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
10-ஏப்-201315:12:44 IST Report Abuse
Tamilan ஆமா நீங்க எப்போ சட்டசபையில இருந்தீங்க புறக்கணிக்க....
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
Cancel
kannan - hyderabad,இந்தியா
10-ஏப்-201315:02:15 IST Report Abuse
kannan சட்டசபைக்கு உள்ளடியும் ஒரு டாஸ்மாக் திறந்தா அவரு ஏன் புறக்கணிக்க போறாரு .
Rate this:
5 members
16 members
12 members
Share this comment
Cancel
shivamurugan - toronto,கனடா
10-ஏப்-201314:48:52 IST Report Abuse
shivamurugan பன்னாட பண்டி & நாய் சேகர் admk சொம்புகள்
Rate this:
8 members
0 members
75 members
Share this comment
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
10-ஏப்-201318:40:00 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் திரு.சிவமுருகன் சார்...இது போன்ற விமர்சனங்கள் வேண்டாமே.....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
10-ஏப்-201314:44:35 IST Report Abuse
R.Saminathan அழகான அறிவுரை,,தே.மு.தி.க. தலைவர் கூறியுள்ளார் ,ஆளும் கட்சிக்கு புரிய வேண்டுமே,முதல்ல ஆளும் கட்சி எதிர்க்கட்சிய மதிக்க தெரிய வேண்டும்,.
Rate this:
9 members
0 members
52 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - YELAGIRI / JAVVAADHU HILLS,இந்தியா
10-ஏப்-201314:16:50 IST Report Abuse
T.C.MAHENDRAN ஐயா விசயராசு நீங்க சட்டசபையில் ஒரு ஆணியையும் புடுங்கப்போறதில்லை. நாலு ரவுண்டு சரக்கை உள்ளே தள்ளிவிட்டு குப்புற படுத்துக்கிடமையா .
Rate this:
54 members
1 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.