E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தமிழக காற்றாலைகளில் உற்பத்தி சரிவு: மின் பற்றாக்குறை மீண்டும் அதிகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 ஏப்
2013
00:58
பதிவு செய்த நாள்
ஏப் 09,2013 23:54

காற்றாலைகளில், மின் உற்பத்தி கடந்த இரண்டு நாட்களாக குறைந்து விட்டதால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் மின்தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள மின்கழக காற்றாலைகள் மூலம், 17.5 மெகாவாட், தனியார் காற்றாலைகள் மூலம், 7,115 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை, தென்மேற்கு பருவகாற்று பலமாக வீசும். அப்போது காற்றாலைகளில் முழு அளவில் மின் உற்பத்தி நடக்கும். இதர மாதங்களில் காற்றின் வேகம் குறைந்து விடும் என்பதால், அதற்கேற்ப, காற்றாலைகளில், மின் உற்பத்தி குறைந்து விடும்.காற்றின் வேகம் அதிகரித்ததால் கடந்த, 5ம் தேதி காற்றாலைகள் மூலம், 1,349 மெகாவாட்; 6ம் தேதி, 820 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலைகள் கைகொடுத்ததால், கடந்த, 6 ம் தேதி மின் வினியோகம், 10,164 மெகாவாட் ஆக உயர்ந்தது. அதற்கேற்ப, கடந்த, 4ம் தேதி, 2,224 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் மின் பற்றாக்குறை, 6ம் தேதி, 1,610 மெகாவாட் ஆக குறைந்தது.

காற்றாலை மின்சாரம் கை கொடுத்ததால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடை நேரம் குறைக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில், காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக சரிந்து விட்டது. நேற்று முன்தினம், 278 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று காலை, 14 மெகாவாட் ஆக சரிந்தது.நேற்று தமிழகத்தின் மின்தேவை, 11,789 மெகாவாட் ஆக இருந்த நிலையில், 9,483 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. மின் பற்றாக்குறை, 2,306 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

- நமது நிருபர் -


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201307:19:13 IST Report Abuse
Mohammed Azeez மின்சார வாரிய அமைச்சரை புடிச்சு ரெண்டு நாளைக்கு கரண்டு இல்லாம இருட்டுல போடுங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
10-ஏப்-201318:45:12 IST Report Abuse
Tamilan சோலார கோளாரா செயல்படுத்தினால் கண்டிப்பாக தமிழ் மக்கள் மின்வெட்டில் இருந்து தப்பிப்பார்கள்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Sameside Sekarsekaran - chennai,இந்தியா
10-ஏப்-201317:56:03 IST Report Abuse
Sameside Sekarsekaran அம்மா, வாயுவை கைது செய்ய சொல்லி சட்ட சபையிலே தீர்மானம் போட்டு " வாயுவை வென்ற வள்ளலே" என்ற பட்டத்தை நமக்கு நாமே.....
Rate this:
1 members
0 members
95 members
Share this comment
Cancel
Lalitha Subramaniam - tirupur,இந்தியா
10-ஏப்-201317:51:54 IST Report Abuse
Lalitha Subramaniam தோழர்களே தோழிகளே ரொம்ப ரொம்ப யோசிச்சு இதுக்கு கருத்து சொல்ல வேண்டியதில்லை. போற போக்க பார்த்தா சுவாசிக்கவே காற்று இருக்காதுங்க. அப்புறம் எங்க போய் காற்றிலிருந்து மின்சாரம் எடுப்பது. இதுக்கு அரசியல் வாதிகளையோ ஆட்சியாளர்களையோ சொல்லி தப்பில்லைங்க. முழுக்க மக்களாகிய நாம்தான் காரணம். நல்லா யோசிங்க. தொட்டதுக்கெல்லாம் நமக்கு கரண்டு வேணும். ஆனால் அது கிடைக்ககூடிய வாழ்வாதாரங்களை நாம அழித்துக்கொண்டிருக்கிறோம். எங்கோ பொய் மழை வரும் காற்றடிக்கும் நாம கரண்டு எடுக்கறதுக்கு மொதல்ல சுவாசிக்க காற்றும் குடிக்க தண்ணீரும் கிடைக்க வழிபாருங்க அதுக்கப்றம் காற்றில் தண்ணீரில் மின்சாரம் எடுப்பது பற்றி பேசலாம்
Rate this:
0 members
37 members
3 members
Share this comment
pattikkaattaan - Muscat,ஓமன்
13-ஏப்-201310:27:47 IST Report Abuse
pattikkaattaan வாழ்வாதாரங்களை பாதுகாப்பது பற்றி திருப்பூர்காரங்க பேசுறது மிகவும் வியப்பாக இருக்கிறது ..சாயப்பட்டறை தண்ணீரை விட்டு சுற்று வட்டார விவசாய நிலங்களையே அழித்துவிட்டீர்களே... ஒரு dam முழுக்க நச்சு தண்ணீரை நிரப்பிய பெருமை உங்களையே சாரும் .....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
poomalai - sundarapandiam,இந்தியா
10-ஏப்-201316:47:17 IST Report Abuse
poomalai காற்றாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசே அல்லது தனியார் நிறுவனங்களோ ஏன் சோலார் மின் சாதனங்களுக்கு கொடுப்பதில்ைல, ஒவ்வொரு கிராமமும் மின்சாரத்தில் தன்நிறைவு பெற அக் கிராமத்திலேயே சோலார் அமைப்புகள் அமைத்து அதற்கான செலவு தொகையினை அரசு அமைத்து விட்டால் காந்தி கண்ட கனவு நனவாகிவிடும். மழைநீர் சேமிப்பு போன்று ஒவ்வொரு வீட்டிலும் சோலார் அைமத்தால் தான் கட்டிட உரிமை போன்று சட்டங்கள் மூலம் சோலார் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும்
Rate this:
1 members
33 members
5 members
Share this comment
Cancel
Wesly - Tanjore,இந்தியா
10-ஏப்-201316:25:26 IST Report Abuse
Wesly இதற்கு முந்தய மைனாரிட்டி தி மு க அரசு தான் காரணம் என கூறி ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றலாம் ....மன்மோகன் சிங் க்கு ஒரு கண்டனம் தெரிவிக்கலாம் ....நீங்க ஒரு திட்டமும் போடாதீங்க
Rate this:
1 members
0 members
30 members
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
10-ஏப்-201315:42:00 IST Report Abuse
KKsamy கருணாநிதி மத்தியஅரசுல இருந்தாலாவது அவர் குறுக்கே விழுந்து அடிக்கிற காத்தையும் மறைசிட்டார் என்று கதை சொல்லலாம் அதுக்கும் வழியில்லையே இப்ப என்ன பண்ணுறது. MLA யங்க டேபிள் தட்டுரமாதிரி மலரும் ஜிங்சக் தட்ட வேண்டியதுதான்.
Rate this:
1 members
0 members
166 members
Share this comment
Cancel
Tamilan - Bangalore,இந்தியா
10-ஏப்-201315:10:01 IST Report Abuse
Tamilan காத்த விட்டுட்டு வெயில புடிங்க அது தான் சுட்டெரிக்குதே.....
Rate this:
0 members
77 members
5 members
Share this comment
Cancel
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
10-ஏப்-201315:00:25 IST Report Abuse
Nagarajan, Panagudi கைகொட்டி சிரிக்க வேண்டிய தருணம் இது. பொருளாதார வளர்ச்சி பெற வேண்டி வருடந்தோறும் பட்ஜெட் என்ற பேரில் நாட்டினை இருட்டுக்கு கொண்டுவந்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உரியது .தமிழ்நாட்டை பொருத்தவரை இரண்டு திராவிட கட்சிகளும் பெருமை சேர்த்து கொண்டன. மூத்த தலைவர்கள் இளைய தலைமுறை யினரை ஆட்சியில் அமர வழி விட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் திட்டமிடும் நிதி அமைச்சர் / அரசு அடிப்படையான மின்சாரத்துக்கு திட்டம் வகுக்காமல் கோடி கோடியாக பட்ஜெட் அறிவித்து என்ன பயன் . மின்சாரத்தால் தான் தொழில் வளர்ச்சி என்பது அரசு மற்றும் நிதி அமைச்சருக்கு தெரியவில்லையோ ? என்று என்ன தோன்றுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை இரண்டு திரவிடகட்சிகளும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதிலும் / வழக்குகள் பதிஉ செயையும் தனது குடும்பத்தாருக்கு சொத்து செஅர்பதிலும் / ஒரு திட்டத்திற்காக இருவரும் போட்டி போடுவதிலும் தமிழ்நாட்டை இருட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள் . மக்களே நாட்டின் வளர்ச்சி உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதனை மறவாதீர்.நீங்கள் முயற்சித்தால் எதையும் உருவாக்க முடியும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்
Rate this:
23 members
1 members
3 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
10-ஏப்-201314:05:45 IST Report Abuse
ANBE VAA J.P. என்னமோ ஷேர் மார்க்கெட் போல நீங்க தான் தினம் தோறும் காற்றாலை மின்சாரம் கூடுது குறையுது அப்படின்னு ஆளும் கட்சிக்கு சாதமாக எழுதுறீங்க ஆனா எங்களுக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியல ?16 மணிநேர கொடுமையை நடு இரவிலும் அனுபவுச்சிகிட்டு தான் இருக்கோம் அது சரி தமிழ் நாடே காற்றலையில தான் ஓடுதா., ஒரு நேரத்தில் காற்றலையின் உபரி மின்சாரத்தை வாங்க மறுத்த அரசு இப்போது மற்றும் ஏன் அதை எதிபார்கின்றது /? ஏன் நிலக்கரியில எல்லாம் இறக்குமதி செய்து ஒட்டி கரண்ட தரமுடியாதா? வாக்களித்த மக்களுக்காக இந்த சுமையை ஏற்க கூடாதா?
Rate this:
1 members
0 members
121 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.