E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவை நடத்த மாணவர்களிடம் வசூல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 ஏப்
2013
00:52
பதிவு செய்த நாள்
ஏப் 10,2013 23:33

சேலம்:சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., பயிற்சி முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை நடத்த, ஒவ்வொரு மாணவரிடமும் தலா, 4,000 ரூபாயை, நிர்வாகம் வசூலித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற விழாவை நடத்த, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் முயற்சி எடுக்காமல், மாணவர்களிடம் வசூல் செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சேலம் இரும்பாலை ரோட்டில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி உள்ளது. ஐந்தரை ஆண்டு படிப்புடைய, எம்.பி.பி.எஸ்., மூன்று ஆண்டு படிப்புடைய, எம்.டி.,- எம்.எஸ்., உள்ளிட்டவற்றில், ஒவ்வொரு ஆண்டும், மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., டாக்டர் படிப்புக்கு, 75 பேர் வரை சேர்க்கை நடக்கும். மற்ற எம்.டி.,- எம்.எஸ்., பிரிவுக்கு, ஆறு பேர் வரை சேர்க்கப்படுவர்.நான்கரை ஆண்டு காலம், கல்லூரி படிப்பை முடித்துர தேர்ச்சி பெற்ற பின், அரசு மருத்துவமனையில் டாக்டர் பயிற்சி பெறுவர். அப்போது, மாதந்தோறும், 8,000 ரூபாய் வீதம், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். சமீபத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்த, 82 பேருக்கு பட்டம் வழங்கும் விழா, அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வீரமணி, நெடுஞ்சாலை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, எம்.பி., செம்மலை, கலெக்டர் மகரபூஷணம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை நடத்துவதற்கு, பட்டம் பெறும் ஒவ்வொரு மாணவ மாணவியரிடமும், மருத்துவமனை நிர்வாகம் தலா, 4,000 ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, ஒரு சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக, பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரம், அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு, பல்வேறு கட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அவ்வாறு இருந்தபோதும், மாணவர்களிடம் பணம் வசூலித்து பட்டமளிப்பு விழா நடத்தியது வேதனையான ஒன்று என, மாணவர்களின் பெற்றோர் குமுறுகின்றனர்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில், ஐந்தரை ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கும் விழா, சமீபத்தில் நடந்தது. அப்போது, அமைச்சர் வருகிறார், அதிகாரிகள் வருகின்றனர் என கூறி, ஒவ்வொரு மாணவரிடத்திலும், 4,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்து. மேலும், மருத்துவ அதிகாரிகள் தங்களுக்கு தாங்களே கவுரவித்துக் கொண்டனர். வேறு எந்த அரசு கல்லூரியிலும், இதுபோன்ற கொடுமை நடக்காது, என்றார்.

மருத்துவக்கல்லூரி முதல்வர் வள்ளிநாயகம் கூறுகையில், "" யாரிடமும் நாங்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கவில்லை. மாணவர்களுடைய பிரதிநிதியான தினேஷ் என்பவர், தங்களுடைய டெபாசிட் பணமாக உள்ள, 5,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயை பட்டமளிப்பு விழாவுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என, கூறினார். மருத்துவக்கல்லூரி வார்டன், அந்த தொகையை வசூல் செய்து எங்களிடம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை நாங்கள் போட்டு விழாவை நடத்தினோம். மருத்துவமனையில் இருக்கும் சில மாணவர்கள், வேண்டுமென்றே புரளியை கிளப்புவர், அதையெல்லாம் கேட்காதீர்கள்,'' என்றார்.

மாணவர்களிடம் பணம் வசூலித்தது மட்டுமல்லாமல், அதை கட்டாயப்படுத்தி வசூலிக்கவில்லை என, டீன் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH - CHENNAI,இந்தியா
11-ஏப்-201308:44:53 IST Report Abuse
PRAKASH இதெல்லாம் சாதாரணம் ... பெரும்பாலான அரசு கல்லூரியில் இது நடக்கிறது.. 4000 பெரிய தொகை என்பதால் இந்த விஷயம் வெளியே வந்திருக்கிறது
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-201304:00:16 IST Report Abuse
Baskaran Kasimani 400082 = 320000 (3.2 லட்சம்) சில்லறை கூட பெரிய தொகை ஆவதை நன்கு உணர்ந்து வைத்திருக்கும் நிர்வாகம். ஒருவேளை இந்த மந்திரிகளுக்கு சாப்பாட்டு செலவு அவ்வளவு ஆகி இருக்குமா?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
joseph thomas - bukitpanjang,சிங்கப்பூர்
11-ஏப்-201305:15:14 IST Report Abuse
joseph thomasthis is not first time and this is not the first deportment who is collecting money like this. all the department in this collage is doing the same. so pls respective deportments what for government paying u all? the students have to pay for u all? dear sir minister pls take a action for this. by tamilan...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.