Is Ooty hill train privatisation | தனியார் மயமாகிறது நீலகிரி மலை ரயில்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் மயமாகிறது நீலகிரி மலை ரயில்?

Updated : ஏப் 12, 2013 | Added : ஏப் 10, 2013 | கருத்துகள் (12)
Advertisement
தனியார் மயமாகிறது நீலகிரி மலை ரயில்?

குன்னூர்:நீலகிரி மலை ரயிலை, தனியார் மயமாக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மலை ரயில் (என்.எம்.ஆர்) 100 ஆண்டுகளை கடந்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்றளவும் இயங்கி வருகிறது."யுனெஸ்கோ' நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து பெற்று, சர்வதேச சுற்றுலா வரைபடத்திலும் இடம் பிடித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் பயணிப்பதை, அனைத்து தரப்பு மக்களும் முக்கிய பொழுது போக்காக கருதி வருகின்றனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் இடைப்பட்ட 27 கி.மீ., தூரம் வரை, நீராவி மற்றும் பர்னஸ் ஆயில் எரிபொருளால் இயங்கும் இன்ஜினும், குன்னூர் - ஊட்டி இடைப்பட்ட 19 கி.மீ., தூரம் வரை, டீசல் இன்ஜின் ரயிலும் இயக்கப்படுகிறது. "மலை ரயிலை இயக்குவதால், ஆண்டுக்கு 4-5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது' என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ஒரு முறை நீராவி இன்ஜினை இயக்க 3 டன் நிலக்கரி, ஊட்டி - குன்னூர் இடையே ஒரு முறை டீசல் இன்ஜின் சென்று வர 150 லிட்டர் டீசல் செலவாகிறது. தற்போது, பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் இன்ஜினும் இயக்கப்படுகிறது.மலைப் பாதையில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு "மைலேஜ்' எனப்படும் பண பலன், சம்பளம் உட்பட நிர்வாக செலவினங்கள் மாதத்திற்கு பல லட்சம் ரூபாயை தாண்டும் நிலையில், மலை ரயில் மூலம் கிடைக்கும் வருமானம் சில ஆயிரங்கள் மட்டுமேயாகும். "குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே நாள்தோறும் இரு முறை, ஊட்டி - குன்னூர் இடையே நான்கு முறை' என எட்டு முறை மலை ரயில் இயக்கப்படுகிறது. ஆண்டு தோறும் மார்ச் - மே கோடை சீசனில், மலை ரயிலில் கூட்டம் அதிகரிக்கும். பிற மாதங்களில் கூட்டம் குறைவாக இருக்கும். பஸ் கட்டணத்தை ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் மிகவும் குறைவாகும்.

இந்த சூழ்நிலையில், "நீலகிரி மலை ரயிலை தனியார்மயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வேயின் வர்த்தக நிறுவனமான (கமர்சியல்) ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம், நீலகிரி மலை ரயிலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி., இந்த மலை ரயிலை தன்னிச்சையாக இயக்கும் அதிகாரம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Baskar - Tiruvallur,இந்தியா
16-ஏப்-201323:43:01 IST Report Abuse
K.Baskar தனியார் மயம் ஆக்கினால் பயண கட்டணம் கூடும். சேவை தரம் பயண கட்டணத்தின் அளவு கூடுமா?
Rate this:
Share this comment
Cancel
francis xavier - Nagapattinam,இந்தியா
16-ஏப்-201312:37:20 IST Report Abuse
francis xavier இந்த முறையை மற்ற தடங்களுக்கும் விரிவு படுத்தலாமே . ஏனைய தனியாரையும் இதில் அனுமதிக்கலாமே ? சாலையில் தனியார் வாகனங்கள் ஓடுவது போல் தண்டவாளத்திலும் ஓடினால் என்ன ?
Rate this:
Share this comment
Cancel
ruth shiva - adel,ஜார்ஜியா
11-ஏப்-201314:05:02 IST Report Abuse
ruth shiva நல்லது இதனால் ரயில் சேவை imporve ஆகும்.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
11-ஏப்-201317:05:56 IST Report Abuse
சு கனகராஜ் சேவையும் பராமரிப்பும் நன்றாக இருந்தால் மிக்க வரவேற்பு இருக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
11-ஏப்-201313:58:59 IST Report Abuse
v j antony மலை ரெயிலை தனியார் வசம் கொடுப்பது மிகவும் நல்லது ஓபன் டெண்டராக இதை அறிவிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
11-ஏப்-201311:25:46 IST Report Abuse
Hasan Abdullah அதற்கு பதிலாக பஸ் செலவிற்கு சமமாக, கட்டணத்தை உயர்த்தி, வருவாயை பெருக்கினால் லாபமும் கிடைக்கும், பாரம்பரிய சின்னத்தை பாதுகாத்தது போலும் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
11-ஏப்-201309:04:00 IST Report Abuse
PRAKASH தனியாரிடம் விடுவதால் கட்டணம் அதிகமானாலும் சேவை பராமரிப்பு சரியாய் இருக்கும்
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
16-ஏப்-201300:06:17 IST Report Abuse
sethuநீங்கள் நினைப்பது நல்லாத்தான் இருக்கும் ஆனால் கொஞ்சம் யோசியுங்கள் டோல்கேட் போட்டு இப்போ கணக்கு இல்லாமல் பணம் வசூல் செய்யும் நெடுஞ்சாலைத்துறை எப்போ தனது வரி இல்லாத ரோடுகளை தனியாருக்கு ஒத்திக்கு விட்டதோ அன்றிலிருந்து ஒரு அரசு பஸ் தினமும் 750 ரூபாய் கொடுக்கும் துபோலதான் அனைத்து தனியார் வாகனமும் கொடுக்கிறது இதும் நமது பொறுப்பற்ற போருமையால்தான் ,ஆனால் கேரளாவில் இப்படி இல்லை 20 ரூபாய்க்குமேல் வசூல் செய்யமுடியாது என்ன செய்றது நாம் தமிழர்கள் இராக்கில் குண்டுபோட்டால் மதுரையில அதற்க்கு பதில் சொல்லுவார்கள் ,ஆனால் மதுரையில் கொள்ளையடித்தால் அது அவனது அஜாக்கிரதை அல்லது திருடனின் திறமை என வாஇபெசுவான் தமிழன் ,எல்லாமே தனியார் மாயம் என்றால் ,அரசின் வேலைதான் என்ன ....
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
11-ஏப்-201307:34:19 IST Report Abuse
sundararaman ஐ.ஆர்.சி.டி.சி.ஏற்கெனவே ரயில்களில் உணவை சரியாக வழங்காமல் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டது. இவர்களை நம்பி மலை ரயிலை ஒப்படைத்தால் அது பாதாள ரயிலாகத்தான் ஆகும். மலை ரயிலை எப்படி வெற்றிகரமாக ஓட்டலாம் என்பது பற்றி ரயில்வே நிர்வாகம் யோசிக்க வேண்டும். இப்படி தனியார் மயம் பிரச்னையை மேலும் வலுவாக்கும் என்பது நிதர்சனம்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
11-ஏப்-201302:56:20 IST Report Abuse
NavaMayam அப்படியே சரியாக ஓட்ட முடியாத அரசு பேருந்துகளையும் , தனியார் வசமாக்கினால் புண்ணிய மாக இருக்கும்...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
11-ஏப்-201317:06:49 IST Report Abuse
சு கனகராஜ் ஏற்கனவே ஓட்ட முடியாத பேருந்துகளை தனியார் காயலான் கடைக்கு தானே போகும் ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
11-ஏப்-201317:09:06 IST Report Abuse
சு கனகராஜ் இயற்கை எழில் சூழ்ந்த பாரம்பரியமிக்க நீலகிரி ஊட்டி ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளுக்கு நல்ல பொழுது போக்காக இருக்கும் அதை இன்னும் சுற்றுலாத்துறையும் சேர்ந்து மேலும் வளப்படுத்தலாம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை