Karnataka highly fertile by Cauvery water | காவிரி நீரால் வளம் கொழிக்கும் கர்நாடகா : இளநீருக்கும் தமிழகம் கையேந்தும் அவலம் | Dinamalar
Advertisement
காவிரி நீரால் வளம் கொழிக்கும் கர்நாடகா : இளநீருக்கும் தமிழகம் கையேந்தும் அவலம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நீரை தர, கர்நாடகா அரசு மறுத்து, காவிரி நீரை அணை கட்டி தடுத்ததால், அந்த மாநிலம் விவசாயத்தில் செழித்தோங்கி வருகிறது. விவசாயத்தில் கொடிகட்டி பறந்த தமிழகம், அரிசி, இளநீர் என, அனைத்துக்கும் கர்நாடாகவிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, 700 கி.மீ., தூரத்துக்கு மேல் பயணித்து, தமிழகத்தில் வங்கக்கடலில் சங்கமிக்கிறது. கரிகாலச்சோழன், 2,000 ஆண்டுகளுக்கு முன், திருச்சி-தஞ்சை எல்லையில் கல்லணையை கட்டினார். இதனால் தமிழகம் விவசாயத்தில் செழித்தோங்கியது.மன்னராட்சி கடந்து, மக்களாட்சி கண்டபின், காவிரி நதியில் தமிழகத்துக்கு உள்ள உரிமை கரையத்துவங்கியது. கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, விவசாயத்துக்காக தண்ணீர் திருப்பப்பட்டது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீர் பங்கீடு பறிபோனது.தமிழகத்தின் நெல் உற்பத்தி பாதித்து, அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டன.

ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்ற நிலை மாறி, கர்நாடகா மாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு அரிசி, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் உரிமையை மீட்காததால், கர்நாடகம் விவசாயத்தில் செழித்தும், தமிழகம் அரிசி, இளநீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது.தற்போது கோடை வெயில் கடுமையாக வாட்டுகிறது. நடப்பாண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்து, காவிரியிலிருந்து உரிய நீர் தராததாலும், கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னை, நுங்கு மரங்களில் காய்ப்பு குறைந்துவிட்டது.

பொள்ளாச்சி தோப்புகளில், 10, 15 ரூபாய்க்கு இளநீர் வாங்கி, 20, 25 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். தமிழகத்தில் தென்னை மரங்களில் காய்ப்பு குறைந்ததால், கர்நாடாகாவிலிருந்து லாரிகள் மூலம் இளநீர் கொண்டுவரப்படுகிறது. 25, 30, 40, 50 ரூபாய்க்கு இளநீர் விற்பனை செய்யப்படுகிறது.தமிழக அரசின் முயற்சியால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு சமீபத்தில், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால், காவிரி நீரில் உரிய பங்கீடு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (60)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் - karaikudi,இந்தியா
12-ஏப்-201300:25:49 IST Report Abuse
இந்தியன் திருச்சி வழியாக கும்பகோணம் செல்லும் மலைகோட்டை மற்றும் காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தவேண்டும் என்று திருச்சியில் ஒரு பிரிவினர் போராட்டம் பண்ணும்போது கர்நாடகாகாரன் நமக்கு தண்ணீரை நிறுத்தியதை கேட்க உரிமை இல்லை.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
11-ஏப்-201323:25:52 IST Report Abuse
Venkatesh R Venkatesh ஹலோ சுலைமான் - தோஹா,கத்தார் அது TER COCONUT இல்லை.TER COCONUT (அதாவது முற்றிலும் விளையாத)
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
11-ஏப்-201323:13:49 IST Report Abuse
Venkatesh R Venkatesh ....இருந்தாலும் தமிழனை ஒன்னும் அசைக்க முடியாது.எல்லாம் ஆண்டவன் பார்த்துக்குவான்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
ashok kumar - Pondy,இந்தியா
11-ஏப்-201322:19:38 IST Report Abuse
ashok kumar மழை தான் கடவுள் அது பெய்யாவிட்டால் நாடு இல்லை
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
11-ஏப்-201320:57:21 IST Report Abuse
Ravi Ramanujam தேவராஜ் அர்ஸ் இருந்த காலத்தில் அங்கு அணை கட்டி கொள்ள சம்மதித்தது இந்த தஞ்சை மாவட்ட முன்னாள் முதல்வர் தான் என்பது மக்களுக்கு புரிந்தால் சரி. இவர் குடும்பத்திற்கு கன்னட சேனல் மூலம் வரும் வருமானம் குறைந்து விடக்கூடாது என்பதில் கூட கவனமாய் இருக்கீறார்கள்.மேலும் ஒரு பக்கம் தமிழ் தமிழ் என்று முழங்கி கொண்டு தனது IPL sun risers கிரிக்கெட் அணிக்கு தமிழ் இனத்தை அளித்த சிங்களரை அணி தலைவராக தேர்ந்து எடுத்து இருப்பது போன்று பல வழிகளிலும் இரட்டை வேடம் போட்டு திறமையாக நடிக்க கூடியவரை நாம் பெற்று இருக்கிறோம் என்பது பெருமையிலும் பெருமை.பல முறை தமிழ் இனத்திற்காக உயிரை இழந்த பெருமை பெற்றவர் இவர் மட்டுமே.
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Sameside Sekarsekaran - chennai,இந்தியா
11-ஏப்-201320:30:23 IST Report Abuse
Sameside Sekarsekaran அம்மா, சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவேன் என்று சொன்ன மாதிரி கர்நாடகாவுக்கும் ராணுவத்தை அனுப்ப தீர்மானம் போடுங்கள். குடகை வென்ற குல விளக்கே என்று பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்வோம்.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஏப்-201322:33:44 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல ஐடியா.. இது அடுத்த தேர்தலுக்கு உதவும்.....
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ganesh - dammam,சவுதி அரேபியா
11-ஏப்-201319:24:33 IST Report Abuse
Ganesh பாவம் தமிழ்நாடு
Rate this:
0 members
1 members
37 members
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
11-ஏப்-201319:12:46 IST Report Abuse
KMP பொறுத்திருந்து பார்ப்போம் ....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
11-ஏப்-201319:08:27 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA இலவச அரிசி, மின்பொருட்கள்... எங்கும் இலவசம், எதிலும் இலவசம்... ஆக இலவசட்டிர்க்காக நீர், மின்சாரம், இளநீர், அரிசி, போன்ற பொருட்களுக்கு வெட்கமில்லாமல் அடுத்த மானியாலங்களில் கைஎந்துவதில் தப்பே இல்லை.. எல்லாம் இலவசத்தின் மகிமை..
Rate this:
2 members
0 members
69 members
Share this comment
பஞ்ச்மணி - கொவை,இந்தியா
11-ஏப்-201322:15:17 IST Report Abuse
பஞ்ச்மணிஆமாம் இலவசம் வாங்கும் போது சந்தோசமா இருக்கும் தமிழகத்தில் ஒரு சமூகம் (அவர் இங்கு குடி அமர்தவர்கள்) மட்டும் இலவசத்தை அண்டுவது இல்லை அவர்கள் இளம் வாரிசுகள் எல்லாம் வாணிபம் தான் அவர்களை போல் நாமும் இலவசம் வேண்டாம் என்ற முடிவுக்கு வரவேண்டும ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
mukambikeswaran sukumar - bangalore ,இந்தியா
11-ஏப்-201318:48:57 IST Report Abuse
mukambikeswaran sukumar கன்னடாக்காரன் செழுமையாக வாழ்கிறான் என்பது தவறு. இன்னும் ஒரு மாதத்தில் மழை வரவில்லை என்றால் கர்நாடகாவிலும் தண்ணீருக்கு லாட்டரி அடிக்க வேண்டியது தான் . எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கே ஆர் சாகர் அணையில் மிகவும் குறைந்திருக்கிறது. இரண்டு பக்கமும் புரிந்து கொண்டு பத்திரிக்கையில் செய்திகள் வரவேண்டும். காவிரி பிரச்சினையை பெரிது படுத்துவது அரசியல்வாதிகளும் பதிர்க்கையால்ர்களும் தான். இரண்டு பக்கமும் விவசாயப் மட்டும் பிரதிநிகள் உட்கார்ந்து பேசினால் இந்த மாதிரி வரும் நீர் ப்ரியாசினைகளுக்கு நிச்சயமாகத் தீர்வு காணலாம்.
Rate this:
8 members
1 members
74 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்