E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காங்., "மாஜி' டைட்லர் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 ஏப்
2013
00:42
பதிவு செய்த நாள்
ஏப் 10,2013 23:41

புதுடில்லி:"சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், ஜெகதீஷ் டைட்லர் மீது, எந்த குற்றமும் இல்லை' என, சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையை, டில்லி கோர்ட் தள்ளுபடி செய்தது. டைட்லர் மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், அவருக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


சீக்கியர்கள் மீது வெறி :




காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஜெகதீஷ் டைட்லர், 69. மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். கடந்த, 1984ல், முன்னாள் பிரதமர் இந்திரா, படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டில்லியில், கலவரம் வெடித்தது.சீக்கீயர்களுக்கு எதிராக கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அடுத்த சில நாட்களில், நாடு முழுவதும், 8,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தலை நகர் டில்லியில் மட்டும், 3,000 பேர் கொல்லப்பட்டனர்.வடக்கு டில்லியில், பாதல் சிங், தாகூர் சிங், குர்சரண் சிங் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கான வன்முறையை தூண்டியதாக, ஜெகதீஷ் டைட்லர், காங்., முன்னாள் எம்.பி., சாஜன் குமார் உள்ளிட்டோர் மீது, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. இதன் பின், 2007ல், "ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக, எந்த ஆதாரங்களும் இல்லை' என கூறி, வழக்கை முடித்துக் கொள்வதாக, சி.பி.ஐ., சார்பில், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின், 2009ம் ஆண்டிலும், "ஜெகதீஷ் டைட்லர் மீது, எந்த தவறும் இல்லை' என கூறி, வழக்கை முடித்துக் கொள்வதாக, மீண்டும் ஒரு அறிக்கையை, சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இதை எதிர்த்து, கலவரத்தில் கொல்லப்பட்ட, சீக்கியர் ஒருவரின் மனைவி, மேல் முறையீடு செய்தார்.


மேல் முறையீடு:




அவரின் மனுவில்," இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் இருவர், அமெரிக்காவில் உள்ளனர். அவர்களின் வாக்குமூலங்களை, சி.பி.ஐ., பதிவு செய்யவில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பான விசாரணையின் போது, "கலவரம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், ஜெகதீஷ் டைட்லர், முன்னாள் பிரதமர் இந்திராவின் வீடான, தீன்மூர்த்தி பவனில் இருந்தார். கலரவத்துக்கும், அவருக்கும், எந்த தொடர்பும் இல்லை' என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


திரும்ப விசாரிங்க...:




இந்நிலையில், இந்த வழக்கில், டில்லி கோர்ட், நேற்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்ததாவது:ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என, கூறுவதை ஏற்க முடியாது. எனவே, வழக்கை முடித்துக் கொள்வதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கை, தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., மீண்டும் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இந்த தீர்ப்பால், ஜெகதீஷ் டைட்லருக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


ஆயுள் உறுதி :




இதற்கிடையே, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்த, மற்றொரு வழக்கில், இரண்டு சீக்கியர்களை உயிரோடு எரித்து கொலை செய்ததாக, டில்லியைச் சேர்ந்த, லால் பகதூர், சுரேந்தர் சிங், ராம் லால், வீரேந்திர சிங் ஆகியோருக்கு, டில்லி ஐகோர்ட், ஆயுள் தண்டனை விதித்திருந்தது.இதை எதிர்த்து, நான்கு பேரும், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், சதாசிவம், இக்பால் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' ஐகோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து, தீர்ப்புஅளித்தனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
11-ஏப்-201321:05:08 IST Report Abuse
Natarajan Iyer இந்த சிபிஐ வைத்து இந்திராவும் ராஜீவும் தற்கொலை செய்துதான் இறந்தார்கள் என்று ஒரு அறிக்கை தரலாமே.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
11-ஏப்-201320:48:27 IST Report Abuse
Natarajan Iyer நான் அப்போது டெல்லியில்தான் இருந்தேன். வார்த்தைகளில் சொல்லமுடியாத கொடுமை அது. அதனால் இன்றுவரை எனக்கு சீக்கியர்கள்மேல் ஒரு பரிவும் காங்கிரஸ்மேல் வெறுப்பும் உண்டு. என் ஆயுளுக்கும் எனது குடும்ப ஒட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. வரும் தேர்தலில் அந்த கட்சி மண்ணை கவ்வும்.இது உறுதி.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஏப்-201313:03:25 IST Report Abuse
Nallavan Nallavan அய்யய்யோ .... மதச் சார்பின்மை என்ன ஆவது? மோதி செய்யாட்டியும் நாங்க அவருதான் முன்னாடி நின்னு நடத்தினாரு-ன்னு சொல்லுவோம் .... காங்கிரஸ் ஆளுங்க செஞ்சா அது தப்பில்லை ..... சீக்கியர்கள் உடம்பில் இருந்து வந்தா அது தக்காளிச் சட்னி .... முஸ்லிம்கள் உடம்பில் இருந்து வந்தா ரத்தம் .... இதுதான் எங்களுக்குத் தெரிஞ்ச நியாயம் ....
Rate this:
0 members
0 members
157 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-ஏப்-201310:17:26 IST Report Abuse
kumaresan.m " ஒரு இடத்தில் நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரங்கள் யார் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களே பொறுப்பு மற்றும் இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் ? இதனை தடுக்க தவறியது ஏன் ? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லவேண்டியவர்களை ...சிபிஐ விடுதலை செய்கிறது என்றால் ? இதில் பல அரசியல் அழுத்தங்கள் இருக்க கூடும் .....இது போன்று சிபிஐ செயல்பட்டால் வரும்காலங்களில் மக்கள் மனதில் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் "
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
11-ஏப்-201310:00:27 IST Report Abuse
Ambika. K இந்த ஆளை ஜெயில் ல போட கூடாது பஞ்சாபில் ஒரு பாத யாத்திரை போக சொல்லவேண்டும். நீதி கிடைத்து விடும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
rengasamy chandrasekaran - chennai,இந்தியா
11-ஏப்-201307:40:58 IST Report Abuse
rengasamy chandrasekaran நாடு நல்ல நாடு. பாருக்குள்ளே நல்ல நாடு. வாழ்க பாரதம். வாழ்க வளர்க நேரு குடும்பம். நாம் பரதேசிகளாக அண்டை நாடு சென்று விடுவோம். வணக்கம் திரு மரியா அல்போன்சே வாழ்க பல்லாண்டு
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
rengasamy chandrasekaran - chennai,இந்தியா
11-ஏப்-201307:36:31 IST Report Abuse
rengasamy chandrasekaran காங்கிரஸ் கட்சியினர் தங்களை மகாத்மாக்கள் என்று மார் தட்டிகொல்கின்றனர். படிப்பறிவில்லாத இந்தியரை எத்தனை நாள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே. மகாத்மா மரியா அல்போன்சே மனசாட்சியுடன் இந்த சாதாரண இந்தியனுக்கு பதில் சொல்லவும். ஜெய் ஹிந்த்
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
11-ஏப்-201306:51:18 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இத்தனை பேர் படுகொலைக்கு மனிதத்தன்மையே இல்லாமல் ஒரு சமாளிப்பு. வழக்குகளே இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது .படுகொலைகள் வெறும் நில அதிர்வு எனக் கூறினார் ராஜீவ் இதனை நினைத்ததாலோ என்னவோ ராஜீவ் கொலைக்கு வருத்தப்படத் தோன்றவே இல்லை .மனிதாபிமானமுள்ளவர்கள் மறைவின்போது மட்டுமே வருவதுதான் துக்கம்
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
11-ஏப்-201306:46:54 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் அதான் ராஜீவ் காந்தியே நாலாயிரம் பேர் கொலை செய்யப்பட்டது, ஒரு இந்திரா எனும் ஆலமரம் வீழும்போது நடக்கும் சிறிய நில அதிரவுக்கு சமம் என சூப்பர் விளக்கம் அளித்தாரே இன்னும் எதற்கு இந்த சுள்ளான் தலைவர்கள்மீது மீது வழக்கு .நல்ல வேளையாக இந்திய இராணுவத்திலுள்ள லட்சம் சீக்கிய வீரர்கள் ராஜீவ் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் வீட்டில் அதே போன்ற நில அதிர்வு ஏற்படுத்தாமல் விட்டார்களே
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஏப்-201313:15:42 IST Report Abuse
Nallavan Nallavanஅய்யய்யோ .... ஹிட்லர் .... சாரி டைட்லர் மேல பழி சொல்றதா .... இது ரொம்ப அபாண்டம் .... மோதி முன்னாடி நின்னு நடத்தி வைக்கலேன்னாலும் அவர்தான் குற்றவாளி ..... அவரைத்தான் நாங்க குறை சொல்லுவோம் .... சீக்கியர்களுக்கு வந்தா அது தக்காளிச் சட்னி .... முஸ்லிம்களுக்கு வந்தா அது ரத்தம் ........
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
11-ஏப்-201306:13:39 IST Report Abuse
ஆரூர் ரங நரேந்திர மோதியை கண்டிப்பவர்களில் எவ்வளவு பேர் அதற்கு முன்பே நடந்த 4000 சீக்கியர்கள் படுகொலை வெறித் தாண்டவத்தைக் கண்டிக்கிறார்கள்? பல நூறு காங்கிரஸ் ரவுடிகளாவது ஈடுபட்ட அந்தக் கோர நிகழ்வில் 29 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை சில டஜன் கீழ்மட்ட அடியாட்கள்,கூலிப்படையினர் தவிர வேறு எவர் மீதும் வழக்கு இல்லை. தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைவர்கள் மேல் பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப் பட்டுவிட்டன தூண்டிவிட்டதே காங்கிரஸ் தலைமை என்பது , மூன்று நாட்கள் கலவரம் தொடர்ந்தபோதும் , அதுவும் நாட்டின் தலைநகரிலேயே நடந்தபோதும் போலீசும் ,ராணுவமும் கைகட்டி வேடிக்கை பார்த்ததிலிருந்தே புரியும். ஆனால் இத்தனை நடந்தபின்பும், அது ஒரு மரம் விழுந்தபோது ஏற்பட்ட சிறிய பூமி அதிர்ச்சி போன்றது, மறந்து விடுங்கள் என ராஜீவ் காந்தி பார்லிமென்ட்டில் மழுப்பினார் என்னவொரு திமிர் பேச்சு ? எந்த வழக்கும் சீரியசாக நடக்காதபடி பார்த்துக் கொண்டார் .சீக்கியர்கள் வீடு வீடாகத் தேடிப்பிடித்து கொலை செய்யப்பட்டபோதும், பெண்கள் சிறுவர்கள் கூட உயிரோடு கொளுத்தப்பட்டபோதும் அது இனப் படுகொலையே இல்லை என சாதித்தார் அதே கட்சி இப்போது மோடியின் மீது குற்றம் சுமத்துவது அநியாயம்.தகுதியே இல்லை . ஒரு நாட்டின் தலைநகருக்குள் நடந்த கலவரத்தை அடக்கமுடியாதபோது ஒரு மாநிலம் முழுவதும் நடந்த குஜராத் கலவரத்தை வெறும் போலீசோ ராணுவமோ எப்படி உடனடியாக அடக்கியிருக்கமுடியும்.? பிறருக்கு ஒரு நீதி தனக்கு ஒரு சால்ஜாப்பா? அடேங்கப்பா இந்தக் கொலைக் காரர்களுக்கு மற்ற மைனாரிட்டியினர் தரும் ஆதரவுதான் ஆச்சர்யம், ஏனெனில் இனப் படுகொலைக்குள்ளக்கப்படதும் ஒரு மைனாரிட்டி சமூகமான சீக்கியரே ..பாவம் சீக்கியருக்குத்தான் மற்ற மைனாரிட்டியினர் போல அன்னிய தூண்டுதலோ ஆதரவோ இல்லையே.நாட்டுக்காக பெருமளவில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைக் காக்கும் சமூகத்திற்கு இப்படியொரு நன்றி தெரிவித்துள்ளனர் சுதந்திரம் வாங்கித் தந்த காங்கிரசார்
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Mekala Ramesh - Mumbai,இந்தியா
11-ஏப்-201308:44:46 IST Report Abuse
Mekala Rameshஒரு வாசகம் இல்லைதான்,ஆனா உண்மைய நச்சு நு சொன்ன நீங்கள் வாழ்க ...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
11-ஏப்-201310:43:53 IST Report Abuse
Hari Doss4000 இல்லை 8000 க்கும் மேல் சீக்கியர்களைக் கொன்ற ராஜீவ் தலைமையில் இருந்த காங்கிரசுக்கு எமதர்மராஜன் என்ற பட்டம் பொருந்துமே ஒழிய மோடிக்கு இல்லை என்பதை காங்கிரஸ் காரன்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எமனின் கிங்கரர்கள் நிறைந்த கட்சியே காங்கிரஸ் தானே ஒழிய வேறு கட்சிகள் ஏதும் இல்லை....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
11-ஏப்-201311:02:39 IST Report Abuse
S Rama(samy)murthyஎங்கே திரு மோடி அவர்களை எதிர்க்கும் தீவிரவாத அடிமைகள் ? சுப ராம அம்பலம் karaikudi...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.