ஒரே நபரிடம் லஞ்சம் வாங்கிய 36 போலீசார் சஸ்பெண்ட்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: மும்பையில், சட்டவிரோத கட்டுமான பணியை தொடர, ஒருவரிடம், லஞ்சம் பெற்ற, 36 போலீசார், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். போலீசார் லஞ்சம் பெற்றதை, ரகசியமாக கேமராவில் படம் பிடித்து, வீடியோ ஆதாரங்களை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்ததால், அவர் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டை புனரமைக்க...: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் புறநகர் பகுதியான, குர்லாவில் வசிப்பவர் பிரகாஷ் நெவ்லே. இவர், குர்லாவில் உள்ள தன் வீட்டை புனரமைக்கும் பணியை துவக்கினார். புனரமைப்பு பணிக்கு, உரிய ஒப்புதல் பெறாததால், மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்படி, பணி நிறுத்தப்பட்டது. அப்போது, பிரகாஷ் நெவ்லேயை அணுகிய, அப்பகுதி போலீசார், "லஞ்சம் கொடுத்தால், பணியை தொடர அனுமதிக்கிறோம்' என, ஆசை வார்த்தை கூறினர். அதிர்ச்சி அடைந்த, பிரகாஷ் நெவ்லே, தன் நண்பர், காசிம் கானிடம் இந்தத் தகவலை தெரிவித்தார். உடனே, அவர் லஞ்சம் கேட்கும் போலீசாரை, தன்னிடம் அனுப்பும்படி தெரிவித்தார். போலீசார் தன்னிடம் வருவதற்கு முன்னதாக, தன்னுடைய இருப்பிடத்தில், ரகசிய கேமராவை பொருத்திய கான், லஞ்சம் வாங்கிய ஒரு போலீஸ்காரரை படம் பிடித்தார்.
கேமராவில் சிக்கினர்: முதலில், ஒரு போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய தகவல் அறிந்ததும், அடுத்தடுத்து மற்ற போலீஸ்காரர்களும், கானிடம் வந்து லஞ்சம் கேட்டனர். கடந்த மார்ச், 9ம் தேதி முதல், 26ம் தேதி வரை, பல்வேறு காலகட்டங்களில், 36 போலீசார் லஞ்சம் வாங்கினர். இதையெல்லாம், ரகசிய கேமராவில், கான் பதிவு செய்தார். இதன்பின், இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய, "சிடி'யை, மும்பை போலீஸ் கமிஷனரிடம், பிரகாஷ் நெவ்லேயும், காசிம் கானும் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் கமிஷனர், லஞ்சம் வாங்கிய போலீசார், 36 பேரையும், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
வெட்கக் கேடான செயல்: சம்பவம் பற்றி மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் கூறியதாவது: போலீசார் லஞ்சம் வாங்கியது, வெட்கக் கேடான செயல். இது போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேநேரத்தில், வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும் போது, போலீசார் லஞ்சம் வாங்கிக் கொள்ளும்படி, தூண்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்துவர். இவ்வாறு சத்யபால் சிங் கூறினார். லஞ்சம் வாங்கிய போலீசாரில், பெரும்பாலானவர்கள், கான்ஸ்டபிள்கள். மற்றவர்கள் எல்லாம் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள். சமீபத்தில், மும்பை அருகேயுள்ள தானேயில், ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 74 பேர் பலியாயினர். அதிகாரிகளின் கவனக்குறைவே, இச்சம்பவத்திற்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும் பணியையும், தானே மாநகராட்சி அதிகாரிகள் துவங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், சட்ட விரோதமாக கட்டுமான பணியை தொடர, போலீசார், 36 பேர் லஞ்சம் வாங்கிய விவகாரம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
12-ஏப்-201319:02:16 IST Report Abuse
naagai jagathratchagan என்னவோ நடக்காதது நடந்து விட்டதாக ஏன் கூச்சல் ...குழப்பம் ...இந்த நாட்டில் ஆண்டி முதல் ஆள்பவரை இது கூடாது என்றும் ...சட்டம் தன் கடமையை செய்யும் ..இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் .அரசும் .ஒப்பாரியும்... முகாரியும் ...பாடிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ...வாங்குபவர்கள் கொழுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ...கொடுத்தவர்கள் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள் ...எப்போதாவது ஒன்று இரண்டு சம்பவம் தெரிந்து விட்டால் உடனே ..செய்தி தாளும் தொ(ல்)லை காட்சியும் ..செய்தியை பரப்பும் ..அப்புறம் ..பொழுது விடியும், மறையும் ...ஒப்பாரியும் ஓலமும் ...ஓங்கி ஒலிக்கும் ...அப்புறம் பட்டுக்கோட்டையார் சொல்லியது போல "முடியிருந்தும் மொட்டைகளாய் ..மூச்சிருந்தும் கட்டைகளாய் ,,,விழியிருந்தும் ...பொட்டைகளாய் ..விழுந்து கிடக்கப் போறீங்களா ...முறையை தெரிஞ்சு நடந்து பழைய நினைப்பை மறந்து உலகம் போற பாதையிலே உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா .."...சொல்லுகண்ணே ...சொல்லு ...
Rate this:
Share this comment
Cancel
d.karthick - mumbai,இந்தியா
12-ஏப்-201316:28:59 IST Report Abuse
d.karthick இது எல்லாம் போலீஸ் ல சகஜம் அப்பா
Rate this:
Share this comment
Cancel
d.karthick - mumbai,இந்தியா
12-ஏப்-201316:27:29 IST Report Abuse
d.karthick போலீசார் லஞ்சம் வாங்கியது, வெட்கக் கேடான செயல். இது போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சூப்பர் காம்முடி for தி year 2013
Rate this:
Share this comment
Cancel
suren - chennai,இந்தியா
12-ஏப்-201315:35:19 IST Report Abuse
suren ப்ப்க்ப்க்க்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஏப்-201315:15:37 IST Report Abuse
Pasupathi Subbian திரு சென்னை கருப்பு தமிழன் அவர்களின் கூற்றுப்படி அடுத்து திருடர்கள் சங்கம் அமைத்தால் ஒரே வீட்டில் திரும்ப திரும்ப கொள்ளை அடிப்பது தவிர்கபடும். அதே போல அரசியல்வாதிகள் சங்கம் அமைத்தால் லஞ்சம் வாங்குவது விலை நிர்ணயக்கபடும் . (எல்லாம் தலைவிதி)
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
12-ஏப்-201314:02:03 IST Report Abuse
Kavee ஹா ஹ ஹா ...இதெல்லாம் நம்ம நாட்டு போலிசுக்கு சகஜம்ங்க ... லஞ்சம் வாங்கலேன்ன அவங்க போலீஸ் காரங்களே இல்லை. அவங்களும் நம்ம அரசு ஊழியர்கள்தானே, அப்புறம் என்ன அரசு ஊழியர்களின் இலக்கணத்தை மாற்ற முடியுமோ?
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
12-ஏப்-201313:58:07 IST Report Abuse
Ashok ,India நல்லா இருக்கே. சாதாரண வெப் கேமரா எந்த அளவிற்கு நன்மை தருகிறது. ஒரு நாட்டை அழிக்க அணு குண்டு தான் வீச வேண்டும் என்பதில்லை. அந்த நாட்டின் பொருளாதரத்தை வீணாக்கும் லஞ்ச விஷ விதைகளை தூவி விட்டால் போதும்.....அந்த நாடு தானாகவே அழிந்து விடும். லஞ்சத்தால் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் தரம்ற்றதாகி மக்களின் வரிப்பணம் கோடி கணக்கில் வீணாகி பொருளாதாரம் பாதிக்கும். பணம் கொடுத்தால் நாட்டை காட்டி கொடுத்து விடுவார்கள் இந்த காவலர்கள். சீருடையில் "சிறப்பாக" பணி புரிந்த இவர்களுக்கு சஸ்பென்ட் மட்டும் தான் பரிசா??
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
12-ஏப்-201313:52:46 IST Report Abuse
Snake Babu அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் கமிஷனர், லஞ்சம் வாங்கிய போலீசார், 36 பேரையும், "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் கமிஷனர்.....என்ன காமடி
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
12-ஏப்-201313:14:15 IST Report Abuse
JALRA JAYRAMAN மொத்தமா வாங்கி பங்கு போடலாம்? ஒருத்தர் ஒருத்தர போய் வாங்கறது சரியில்லை
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
12-ஏப்-201313:09:17 IST Report Abuse
itashokkumar நல்லா தெரிஞ்சுக்குங்க வேறு எந்த போலிசுமே லஞ்சம் வாங்குவதில்லை.????????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்