Lawyers should obey law: High court | வக்கீல்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களே: கோவையில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வக்கீல்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களே: கோவையில் ஐகோர்ட் நீதிபதி பேச்சு

Updated : ஏப் 13, 2013 | Added : ஏப் 11, 2013 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Lawyers should obey law: High court

கோவை: "சட்டம் படித்த வக்கீல்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்தான்,' என, ஐகோர்ட் நீதிபதி ராஜேந்திரன் பேசினார்.

கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில், இளம் வக்கீல்களை அறிமுகப்படுத்தி "வழக்கறிஞர் தொழில் வழிகாட்டல்' விழா நேற்று கோர்ட் வளாக கூட்ட அரங்கில் நடந்தது. விழாவுக்கு கோவை வக்கீல்கள் சங்க தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் லோகநாதன் வரவேற்றார். மாவட்ட நீதிபதி ஆதிநாதன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில், சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட் நீதிபதி ராஜேந்திரன் பங்கேற்று, இளம் வக்கீல்களை வாழ்த்தி பேசியதாவது: படித்து முடித்து கோர்ட் வளாகத்துக்குள் நுழையும் இளம் வக்கீல்கள், வக்கீல்களின் எண்ணிக்கையைக் கண்டு துவண்டு விடக்கூடாது. ஒரு சீனியர் வக்கீலிடம் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் கோர்ட்டில் ஆஜராகி, காலை முதல் மாலை வரை கோர்ட்டில் நடக்கும் நிகழ்வுகள், வழக்கின் வாதங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வக்கீலும் வெவ்வேறு விதமாக தங்கள் வாதங்களை வெளிப்படுத்துவர். வழக்கு தொடர்பான வாதங்களை வைப்பதோடு, எழுத்து வடிவிலும் நீதிபதி முன் வைக்க வேண்டும். நீதிபதி சங்கடப்படும் அளவுக்கு இந்த வாதம் இருக்கக் கூடாது. விரைந்து படிக்கும் அளவில் சுருக்கமாகவும்,தெளிவாகவும் பேச வேண்டும். வழக்கு விபரம், நடந்த சம்பவம், சொத்து விபரங்களை தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிட வேண்டும். புதிதாக கோர்ட்டில் ஆஜராகும் இளம் வக்கீல்களுக்கு, வேலை அதிகம் இருக்கும். ஆனால் வருமானம் மிகக்குறைவாகவே கிடைக்கும், அவர்களே சீனியர்களாக ஆகும்போது,வேலை குறைவாக இருக்கும்; வருமானம் அதிகமாக இருக்கும். இளம் வக்கீல்கள் மிகத்தெளிவான, நுணுக்கமான ஆதாரங்களைக் கொண்டு சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும். தெளிவில்லாத வாதத்தை முன் வைத்து நீதிபதியின் அதிருப்திக்கு ஆளாகி விடக்கூடாது. வழக்கை புரிந்து கொண்டு, தேவையான சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி கோர்ட்டில் வாதிட வேண்டும். சட்டம் படித்த வக்கீல்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தான். வக்கீலாகி விட்டோம் என்பதால் சட்ட புத்தகங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சட்டப்பிரிவுகளையும், அதன் நுணுக்கங்களையும் படிக்காமல் இருந்து விடக் கூடாது. தினமும் காலை முதல் மாலை வரை கோர்ட்டில் நடக்கும் பல்வேறு வழக்குகளின் வாதங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். கிடைக்கும் சட்ட புத்தகங்களை படித்துக்கொண்டே இருக்க வேண்டும். சீனியர்களின் வாதிடும் திறமையை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இளமையில் கடுமையாக உழைத்தால் எதிர்காலம் வளமாக அமையும். விழாவில், கிரிமினல் வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்க தலைவர் வெண்ணிலா, தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அருணாசலம், அரசு பிளீடர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஏப்-201316:10:20 IST Report Abuse
Nallavan Nallavan சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் கிடையாது .... மக்களில் பலர் வக்கீல்களை சமூக விரோதிகளைப் போலப் பார்க்கும் அவலம் (நிதர்சனம்?) உள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-201311:28:02 IST Report Abuse
baalaa சரியா சொன்னீங்க எஜமான் நாட்டில் இந்த வக்கீலுங்க அட்டகாசம் தாங்க முடியலை அதிலும் இந்த வக்கீலுக்கு படிக்கிற பசங்க பண்ற அட்டூழியம் ரொம்ப மோசம் படிக்க வந்தாங்களா இல்லை ரவுடியிசம் பண்றாங்களா இதுக படிச்சி முடிச்சி வேலைக்கு போயி சட்டத்துக்கு அடங்கவா போகுது ??
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
12-ஏப்-201310:35:22 IST Report Abuse
mirudan இப்பொழுது சட்ட கல்லூரியில் படிப்பவர்களை பார்க்கும் பொழுதே ரவுடி மாதிரி இருக்கு, இவர்கள் வக்கீல் ஆனால் ?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
12-ஏப்-201310:26:43 IST Report Abuse
mirudan மருத்துவம், இன்ஜினியரிங் படிக்க வாயுப்பு இல்லாதவர்கள் தான் சட்ட படிப்பு படிக்கிறார்கள், இப்போ சட்டம் கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டைகளை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-201309:58:38 IST Report Abuse
Baskaran Kasimani வாதம் செய்யும் பொழுது கண்டமேனிக்கு பொய் சொல்லும் வக்கீல்களை நீதிபதிகள் ஏன் ஒன்றும் செய்வதில்லை?
Rate this:
Share this comment
Cancel
Truth Teller - chennai,இந்தியா
12-ஏப்-201309:47:32 IST Report Abuse
Truth Teller இந்தியாவில் தைரியமாக குற்றம் செய்வதற்கு இவர்கள் தான் காரணம் ...வாயிலா
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
12-ஏப்-201307:01:39 IST Report Abuse
Thangairaja சொல்லவே இல்லே.......வக்கீலுங்க சட்டத்தை மதிக்கிராங்களாக்கும்.......
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
12-ஏப்-201306:48:44 IST Report Abuse
NavaMayam நீதி பதிகள் நீதிக்கு கட்டுப்பட்டு , நிதிக்கு கட்டுப்படாமல் இருந்தாலே அவர்களும் சட்டத்துக்கு கட்டுபடுவார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
12-ஏப்-201306:45:06 IST Report Abuse
K.Sugavanam அப்புடி எங்களுக்கு தெரியலையே.சட்டம் பொது மக்களுக்கு தான்.வக்கீல்களுக்கும் அதுக்கும் எந்த சம்பதமும் இல்லைன்னு நெனக்கிற அளவுல தானே பெரும்பாலோரோட செயல்கள் இருக்கு..ஒருவேள சிலர் அப்படி நெனைக்கலாம்..அவங்களை எங்களுக்கு தெரியாது..
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
12-ஏப்-201306:41:53 IST Report Abuse
NavaMayam என்ன வாதம் வைத்தாலும் , நீதி , நிதிக்கு அடிமை ஆகும் போது தான் அவர்கள் துவண்டு விடுகிறார்கள் என்பது தான் உண்மை ..இப்போ கட்ட பஞ்சாயத்து செய்யும் வக்கீல்களுக்குத்தான் வேலை குறைவு வருமானம் அதிகம் ...முன்பு சட்ட நுணுக்கங்கள் மூலம் விதியை மதியால் மாற்றிய நீதி துறை ....... இப்போ நீதியையே நிதியால் மாற்றி விடுகிறார்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை