E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நெல்லையில் 7 அமைச்சர்கள் 2 மணி நேரத்தில் வறட்சி ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஏப்
2013
00:34
பதிவு செய்த நாள்
ஏப் 11,2013 23:47

திருநெல்வேலி: வறட்சியால் பாதிக்கப்பட்ட, நெல்லை மாவட்ட விவசாய நிலங்களை, ஏழு அமைச்சர்கள், இரண்டு மணி நேரத்தில் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில், சென்னை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து, டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும், ஏக்கருக்கு,15,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தர விட்டார். ஆனால், தென்மாவட்டங்களின் வறட்சி குறித்து, இதுவரை, கணக்கிடப்படவில்லை. இந்நிலையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட, ஏழு அமைச்சர்கள், நேற்று காலை, 10:00 மணியளவில், நெல்லை மாவட்டம், கானார்பட்டியில், வறட்சியால், அறுவடை செய்யமுடியாமல், காய்ந்து கிடந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர். நஷ்டம் குறித்து, விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். பின், தேவர்குளம், விஜயரங்கபுரம் கிராமத்திற்கு சென்று, அங்கு, வறட்சியால் காய்ந்து போன, மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டனர். காலை,10:00 மணிக்கு துவங்கிய ஆய்வை, 12:00 மணிக்கு முடித்துக்கொண்டு, தேனிக்கு புறப்பட்டுச் சென்றனர்.


அதிருப்தி: நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. மாவட்டத்தில், கார் பருவ நெல் சாகுபடி, ஆண்டுதோறும் ஜூன், ஜூலையிலும், பிசான பருவ நெல் சாகுபடி நவம்பர், டிசம்பரிலும் நடக்கிறது. மாவட்டத்தில், தாமிரபரணி நதி நீர் பாசனத்தின் மூலம், 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், இரண்டு பருவங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமைச்சர்கள் நேற்று பார்வையிட்ட பகுதிகள் எதுவுமே, அணை, குளம் பாசன நிலங்கள் இல்லாமல், மானாவாரியாக, மழையை நம்பி பயிரிடப்படும் பகுதிகளையே பார்வையிட்டனர். மேலும், அமைச்சர்களிடம் முறையிடுவதற்கும், கருத்துகள் கேட்பதற்கும் விவசாய சங்க பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை.


இதுகுறித்து, பாபநாசம் முதல் கால்வாய் நீர்ப்பாசன குழு தலைவர் சிவகுருநாதன் கூறியதாவது: தாமிரபரணி நீர்ப்பாசன பகுதியில் தான் நெல் உற்பத்தி அதிகம் நடக்கிறது. குறிப்பாக, அம்பாசமுத்திரம்,சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை என, எந்த பகுதியையும் பார்வையிடாமல், நெல்லையில் இருந்து தேனி செல்லும் ரோட்டில் உள்ள பகுதிகளை மட்டும் பார்வையிட்டு சென்றுள்ளனர். எனவே, மாவட்டம் முழுவதும் வறட்சியை பார்க்க, மாவட்ட அளவிலாவது அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர்கள் ஏழு பேரும், வறட்சி பகுதிகளை பார்த்த பின், விவசாயம் பாதித்த, ஏக்கர் எவ்வளவு, நஷ்ட ஈடு எப்போது வழங்கப்படும், என்பன போன்ற விபரங்களை பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. தாமிரபரணி பாசன பகுதிக்கு, செல்லவில்லையே என, நிதியமைச்சரிடம் கேட்டபோது, "புன்னகையை' பதிலாக்கிச் சென்றார்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (22)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
13-ஏப்-201311:47:50 IST Report Abuse
MOHAMED GANI பெயரளவிற்குத்தான் அமைச்சர்கள் குழுவின் விசிட் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ளது. ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், தமிழக அரசு அறிவித்தபடி எந்த நிவாரணமும் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் அமைச்சர்கள் குழு சும்மா பெயரளவில் மட்டும் ஆய்வு நடத்தியதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் எடுத்துக்கொண்டால், தாமிரபரணி பாசனப் பகுதிகள்தான் மிகவும் முக்கியமான பகுதியாகும். அங்கு செல்லாமல் இக்குழு சென்றதே அமைச்சர்கள் குழுவின் அலட்சியத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Sugavanam - sengkang,சிங்கப்பூர்
12-ஏப்-201317:02:30 IST Report Abuse
K.Sugavanam இப்பல்லாம் வெளில வாயை திரக்கரதில்லெ...
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஏப்-201316:09:17 IST Report Abuse
Nallavan Nallavan தங்கள் கை "வறட்சியை" ஆய்வு செய்து "நிவாரணம்" தேடுவது என்றால் ஆற .... அமர யோசித்துச் செய்வார்கள் ....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
12-ஏப்-201311:58:32 IST Report Abuse
பி.டி.முருகன்    மக்களை கவர்வதற்கு இதெல்லாம் ஒரு ஐடியா சார். நம்மோட மந்திரிங்க சுறுசுறுப்பாக இருக்காங்கலாம்.
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
12-ஏப்-201311:34:13 IST Report Abuse
HARINARAYANAN நாங்களும் பார்வையிட்டோம் என்று பெயருக்கு செய்தது தெளிவாக தெரிகிறது......... ஏழு அமைச்சர்கள் சென்ற போதும் பார்வையிட்டு மதிப்பிடப்படாத வறட்சி இனி எத்தனை அதிகாரிகள் வந்து பார்த்து தீரப்போகிறதோ..... நியாயமாகப்பார்த்தால் விவசாயத்துறை அமைச்சர் மட்டும் அவருடைய அதிகாரிகளுடன் முன்னறிவுப்புடன் சென்று முழு பகுதியையும் பார்வையிட்டால் போதுமே...... இந்த விசிட்டுக்கு என்ன செலவோ...... ஒரு வேலை தினமலர் செய்தியை தொடர்ந்து சாப்பாட்டு செலவை குறைதுக்க்கொண்டார்களோ?........
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
12-ஏப்-201310:23:30 IST Report Abuse
mirudan இந்த தடவை இவர்களின் சாப்பாட்டு செலவு எவ்வளவு ஆகியது என தினமலர் விசாரித்து எழுத வேண்டும்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
12-ஏப்-201309:55:15 IST Report Abuse
Chenduraan இதுவும் சென்னையில் வெள்ள நிவாரணத்தொகை கொடுத்த மாதிரிதான் (வோட்டுக்கு லஞ்சம்) விவசாயம் பற்றி நன்கு தெரிந்த அல்லது நன்கு படித்த அமைச்சர்களை அனுப்பினால் பரவாயில்லை கொள்ளை அடிக்க மட்டும் தெரிந்த அமைச்சர்களுக்கு விவசாயத்தைப்பற்றி என்ன தெரியும். ஒழுங்கா கரண்ட் இருந்தால் விவசாயிகள் யாரிடமும் கையேந்தமாட்டார்கள்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
12-ஏப்-201309:55:04 IST Report Abuse
Baskaran Kasimani நல்லா தங்க பஸ்பம், சிட்டுக்குருவி லேகியம் எல்லாம் சாப்பிட்டுட்டு வாங்க..
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
மன்னைபாரதி - காட்டுமன்னார்கோயில்,இந்தியா
12-ஏப்-201309:43:05 IST Report Abuse
மன்னைபாரதி சாப்பாட்டு செலவு யார் கணக்கு... கோவிந்தா
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
12-ஏப்-201309:08:28 IST Report Abuse
PRAKASH வறட்சி நிவாரண நிதில உங்க போக்குவரத்து சாப்பாடு ஹோட்டல் ரூம் செலவையும் செத்துகொங்க ... மறந்துடபோறீங்க
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.