Advertisement
மரண தண்டனையை ஆயுளாக குறைக்க முடியுமா? ; சுப்ரீம்கோர்ட் இன்று முக்கிய தீர்ப்பு
Advertisement
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 ஏப்
2013
10:35
பதிவு செய்த நாள்
ஏப் 12,2013 01:23

புதுடில்லி: "மரண தண்டனையை நிறைவேற்ற தாமதமாகினால், அந்த தண்டனையை ஆயுளாக குறைக்க முடியுமா?' என்பது குறித்த, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, சுப்ரீம்கோர்ட் இன்று வழங்குகிறது.

"மரண தண்டனை பெற்ற கைதிகளின், கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில், தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க, கால வரையறை நிர்ணயிக்க வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 1993ல் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் பலியாக காரணமாக இருந்த, காலிஸ்தான் விடுதலைப்படை பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங் புல்லாருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி, மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. புல்லாரின் கருணை மனுவை, எட்டு ஆண்டுகளுக்கு பின், ஜனாதிபதி நிராகரித்தார். அதனால், மரண தண்டனையை நிறைவேற்றுவதில், காலதாமதம் ஏற்பட்டதால், அவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என, குடும்பத்தினர் சார்பில் கோரப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு ஏப்ரல், 19ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இன்று இந்த வழக்கில், நீதிபதிகள் சிங்வி மற்றும் முகோபாத்யாய் அடங்கிய, "பெஞ்ச்' தீர்ப்பு வழங்குகிறது.

இன்று வழங்கப்படும் தீர்ப்பு, ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை பெற்றவர்கள் தொடர்பான வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை பெற்றவர்கள், தங்களுக்கான தண்டனையை நிறைவேற்ற காலதாமதமாகி விட்டதால், அதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் எனக்கோரி, ஏற்கனவே கோர்ட்டில், மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
12-ஏப்-201308:19:58 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி தீர்ப்பை பற்றி விமர்சித்து நீதி மன்ற அவமதிப்பில் ஆளாக ஒருவரும் விரும்பமாட்டார்கள். எனவே எந்த தீர்ப்பு வந்தாலும் நாம் அதை ஏற்றுகொள்வோம் இதுதான் இன்றைய நிலை. ஆனால் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதை விட, கருணை மனு வுக்கு ஒரு குறிப்பிட கால கெடு நிர்ணயிக்கலாம். ஜனாதிபதி உள்துறை அமைச்சரின் பரிந்துரையை தான் ஏற்கிறார். அதற்க்கு ஏன் இவ்வளவு கால தாமதம். எல்லோரும் சட்டத்திற்கு கட்டுபட்டவரே... மத சார்பு இன்மை என்று பேசி இந்து கடவுள்களை / கோவில்களை / சொத்துக்களை அரசு கட்டு படுத்தும் போது ஜனாதிபதிக்கு என்ன சிறப்பு அந்தஸ்து. படித்த அனுபவம் மிக்க நீதிபதிகளின் தீர்ப்பை அரசியல் செல்வாக்கு பெற்ற ஒருவர் நிறுத்தி வைக்க முடியும் என்றால் ஒவ்வொரு ஊரில் இருக்கும் நீதி மன்றங்களை மூடிவிட்டு, அந்த அந்த பகுதிகளில் இருக்கும் ஆளுநர், நியமன உறுப்பினர்கள் இனி நீதிபதிகளாக செயல்படலாம். ஆள்பவரின் விருப்பம்போல் தீர்ப்புகள் எழுதப்படலாம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
12-ஏப்-201308:03:32 IST Report Abuse

Hari Doss - Pollachi,இந்தியா
12-ஏப்-201307:57:08 IST Report Abuse
Hari Doss ஓட்டுக்காக தண்டனையினை தள்ளிப் போட்டால் இது போன்ற தலைவிதிகள் ஏற்படும் என்பதை இனிமேலாவது ஆளும் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை விரைவில் தூக்கில் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த வழக்குகள் தெரிவிக்கின்றன
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.