Advertisement
துணைவேந்தர் தேர்வில் அரசியல் : மத்திய அமைச்சர் ஆதங்கம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2013
00:01

கோவை:""நாட்டில் உயர்கல்வித்துறை வளர்ச்சி பெற, தகுதி, திறமை அடிப்படையில் தான், பல்கலை துணைவேந்தர்கள், தேர்வு செய்யப்பட வேண்டும்; அரசியல் தலையீடு கூடாது,'' என, மத்திய இணை அமைச்சர் தாமஸ், பேசினார்.

அகில இந்திய பல்கலைக்கழக அமைப்பு சார்பில், தெற்கு மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, கோவை காருண்யா பல்கலையில் நேற்று துவங்கியது. மாநாட்டில் மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணை அமைச்சர், தாமஸ் ,பேசியதாவது:இந்தியாவில், 62 மில்லியன் டன் உணவு தானியங்கள், உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 80 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பங்களிப்பு உள்ளது. வரும் 2020ல் உணவு தானியங்களின் உற்பத்தியை 82 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாட்டின் மக்கள் தொகை, தற்போது 120 கோடியை எட்டியுள்ள நிலையில், உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம்; இப்பெருமை விவசாயிகளுக்கே சேரும்.உயர்கல்வித்துறை வளர்ச்சியில் பல்கலை துணைவேந்தர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. உண்மையான தகுதி, திறமை அடிப்படையில் மட்டுமே, துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அரசியல் கட்சியினர் தலையீடு, இருத்தல் கூடாது. உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு உதவும் வகையில், துணைவேந்தர்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும்.இவ்வாறு, தாமஸ் பேசினார்.

மாநாட்டில் சமுதாய மாற்றத்தில், பல்கலையின் பங்கு, என்ற தலைப்பில் கருத்தரங்கு, நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 23 துணைவேந்தர்கள், பங்கேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.raj-chennai - chennai,இந்தியா
13-ஏப்-201312:31:57 IST Report Abuse
p.raj-chennai மன்னர் ஜவஹர் என்ற துணை வேந்தர் பணி காலத்தில் அவரால் வேலைக்கு நியமிக்கப்பட்ட அனைவருமே கிருத்துவர்கள். ஒரு துணை வேந்தர் குறுகிய வட்டத்தில் செயல் படுவதை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
13-ஏப்-201311:12:03 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண் மத்திய அமைச்சரின் கருத்து நியாயமானது. துணைவேந்தர் நியமனத்தில் திறமையை விட அரசியல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதியும் முக்கிய இடம் வகிப்படது. மக்கள் தொகையில் குறைவான் எண்ணிக்கையைக் கொண்ட எந்த ஒரு சாதியினரும் தமிழகத்தில் துணைவேந்தர் ஆகமுடியாது என்பது நிதர்சனம். இது மானிலப் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல மக்த்தியப் பல்கலைக்கழகங்களிலும் அதுதான் நடக்கிறது. மத்தியப்பல்கலைக்கழகங்களில் முதலில் இவர்கள் வெளிப்படையான த்துணைவேந்தர் நியமனத்தை செய்யட்டும். தேர்வுக்குழுக்களை நியமிப்பதில் இருந்து வெளிப்படையான அணுகுமுறை இல்லை. யார் யார் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள் பங்களிப்பு என்ன என்ன ? என்பதெல்லாம் வெளிப்படையாக த்தெரிவதில்லை. இணையம் இருக்கிறக்காலத்தில் அதனை செய்யவேண்டும்.சும்மனாச்சிக்கும் கூட்டத்தில் சொன்னால் போதாது. மத்திய அமைச்சரவைக்கூட்டத்திலும் இதை இவர் பேசவேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
13-ஏப்-201308:27:48 IST Report Abuse
பி.டி.முருகன்    போங்கண்ணே. இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்குற காரியமா? பணம் வேண்டும் அண்ணே பணம் வேண்டும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
13-ஏப்-201307:41:47 IST Report Abuse
யமதர்மன் டாக்டர் பட்டம் எப்போது முதன் முதலாக விற்க ஆரம்பித்ததோ அன்று முதல் கல்வி நிலையங்களில் அரசியல் அசிங்கம் நுழைந்து விட்டது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
13-ஏப்-201306:26:49 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் மனிதர்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கும்... அரசியல் இல்லாமல் எங்கும் ஒரு அணுகூட அசையாது.. ஆனால் அரசியல் அழுத்தம் கூடாது.. அரசியல் வேறு , அழுத்தம் வேறு.... நாம் எல்லாம் மாறி போயி ரொம்ப நாள் ஆகுது..அப்படிதானே தாமஸ்... :)
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
13-ஏப்-201301:08:41 IST Report Abuse
தமிழ் சிங்கம் அரசியலும் துணைவேந்தர் பதவியும் பின்னி பிணைந்தது. இதை வேறு வேறாக்க முடியாது. அரசியல் தலைவர்களுக்குதான் யார் பொறுப்பானவர் என்று தெரியும். மக்களின் மனுக்கள் மற்றும் கருத்துகளை கேட்டறியும் அரசியல்வாதிகளின் வழிநடத்து நம் பல்கலைகழகங்களுக்கு தேவை. நாடு இவ்வளவு தூரம் முன்னேறியதற்கு, ஒரு சில பட்டதாரிகள் இருந்த நம் இந்தியாவில் வீட்டிற்கொரு பட்டதாரி உருவானதற்கு காரணம் நம் அரசியல்வாதிகளின் குறுக்கீடுதான். இல்லையென்றால், பல்கலைகழகங்கள், தான்போக்காக நடந்து, நாடு குட்டிசுவராகி இருக்கும்.
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
16-ஏப்-201308:27:20 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண்ஐயா கருப்புத்தமிழரே அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் பல்கலைக்கழகம் இருக்கிறது இருக்கவேண்டும். ஏன் எனில் பல்கலைக்கழகங்கள் அரசு நிறுவனங்கள் அரசு நிதியினைப்பெற்று இயங்கு பவை. ஆனால் அரசு நிர்வாகம் வேறு அரசியல் தலியீடு வேறு.பல்கலைக்கழகங்க்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த உயரிய நோக்கங்களை அடைய அவை இயங்கவேண்டும். அவை சட்ட விதிகளின் படி இயங்கவேண்டும். அதுவே நிர்வாகம். மாறாக விதிகளை மீறி தகுதியின் அடிப்படையில் இல்லாமல் பணத்தின் அடிப்படையில் சொந்த பந்தங்களுக்கு பதவிகள் வழங்கப்படுமானால் சீட்டுகள் விற்கப்படுமானால் அது அதிகார துஷ்பிரயோகம, தலையீடு முறைகேடு எல்லாம். அதுவே தவறு என் கிறோம்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
13-ஏப்-201300:56:21 IST Report Abuse
Vettri மத்திய அமைச்சர் ரொம்ப அப்பாவியா இல்லை அடப்பாவியா? அரசியல் தலையீடு இல்லாத துறையே இல்லை இது அனைவருக்கும் நன்றாக தெரியும். உண்மையான தகுதி மற்றும் திறமை வாய்ந்த நாட்டை நல் வழிப்படுத்த அரசியல் தலைவர்கள் தான் இப்போதைய தேவை. துணை வேந்தர்கள் அல்ல.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.