Advertisement
வேலைக்கு ஆளில்லை : சித்திரை பட்டம் துவங்கப் போகுது: நித்திரையில் விவசாய தொழில்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 ஏப்
2013
00:56
பதிவு செய்த நாள்
ஏப் 13,2013 00:07

பொள்ளாச்சி: கிராமங்களில், வேலை உறுதி திட்டத்தில், தினக்கூலி அதிகரித்துள்ளதால், விவசாய கூலித் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகியுள்ளது. சித்திரை பட்டம், துவங்கவுள்ள நிலையில், ஆட்கள் கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

ஊராட்சிகளில், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தினக்கூலியாக பயனாளி ஒருவருக்கு, 148 ரூபாய் வழங்கப்படுகிறது.ஏப்., 1 முதல் கூலி உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், திட்டத்தில் சேரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாக்களில், கடந்த ஒரு வாரத்தில், மட்டும் 200 பயனாளிகள் வரை இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால், ஐப்பசி, கார்த்திகை பட்டத்தில், விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் வாடின. இதனால், பல விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். தற்போது, கோடை மழையை எதிர்பார்த்து, சித்திரை பட்டத்தில், பயிர்களை பயிரிட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.முன்னதாக, நில மேம்படுத்தும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இப்பணிக்கு, விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பது, குதிரைக்கொம்பாகியுள்ளது.

உள்ளூரில், பலர் வேலை உறுதி திட்டத்துக்கு சென்றுள்ளதாலும், கூலி பற்றாக்குறையால், இளைஞர்கள் மாற்று வேலை தேடி வெளியூர்களுக்கு சென்றுள்ளதாலும், கூலியாட்கள் கிடைக்காத நிலை உள்ளது.கேரள மாநிலத்தில் இருந்து கூலியாட்களை அழைத்து வந்து, குறைந்த கூலியில் பணியை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு, உணவு, தங்கும் வசதி மட்டுமின்றி. அதிக தொகையை கூலியாக தர வேண்டியுள்ளதால், விவசாயிகள் தவித்து வருகின்றனர். "ஏற்கனவே, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையில், கூலியாட்களும் கிடைக்காவிட்டால், விவசாய தொழில் பெரிதும் பாதிக்கும், என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் கூறியதாவது:உள்ளூரில், வேலை உறுதி திட்டத்துக்கு, பயனாளிகள் அதிகளவில் சேர்ப்பதால், விவசாய கூலி தொழிலுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. தற்போது, பெண் தொழிலாளிக்கு பணியை பொறுத்து குறைந்தபட்சம் 130 ரூபாய் முதலும், ஆண் தொழிலாளர்களுக்கு 160 ரூபாய் முதலும் வழங்கப்படுகிறது. வேலை உறுதி திட்டத்தில், தினக்கூலி உயர்ந்துள்ளதால், சில தொழிலாளர்கள், குறைந்தபட்சம் 200 முதல் 250 ரூபாய் வரை கேட்கின்றனர். விலைவாசி உயர்வால், அதிக கூலி வழங்க முடியாது.வேலை உறுதி திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளின் நில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. சித்திரை பட்டம் துவங்குவதற்கு முன் நிலமேம்பாட்டு பணியை மேற்கொண்டால், இந்தாண்டு விளை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
15-ஏப்-201307:13:41 IST Report Abuse
venkat Iyer விவசாயம் தொழிலாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.நெல்லுக்கு கட்டுப்பாடு விலைகள் கூடாது. viLaissaLil ஒட்டு மொத்த பாதிப்பு எற்பட்டால் சமுதாயம் அதிக விளை கொடுத்து வாங்க வேண்டும. விளைச்சல் அதிகமாக விளையும் போது அதனுடைய பலனை எல்லாரும் பெரும் பொது கஷ்டத்தில் எல்லோரும் பங்கு பெறுவதில் தவறு இல்லைதான் என்று தோன்றுகிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
14-ஏப்-201312:30:55 IST Report Abuse
mohan மத்திய, மாநில அரசுகளுக்கு, இஸ்ரேல் போல் விவசாயத்தின் மீதான, செயல்முறை அடிப்படையிலான அக்கறை இல்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. ஆளில்லாமல் விவசாயம் எப்படி செய்வது என்பது போன்ற நவீன முறையை கொண்டுவந்து, விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
13-ஏப்-201310:12:08 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu அறிவியலின் ஆதிக்கத்தால் மண்வழம் மாறிபோச்சு மரபுவழி விவசாயமும் மாறிபோச்சு காடுதிருத்தி கலநிசெய்து நெல்விதைத்து அறுவடை செய்யும்போதில் ஆனந்தப்பட்ட மருதன்குடி இன்றோ சுய அடையாளங்களை தொலைத்து இன்றோ வந்தவன் போனவனெல்லாம் தன்னை விவசாயிஎன்று அரசாங்க இலவசங்களுக்காகவும் மாநியங்களுக்காகவும் கடன்தல்லுபடிக்காகவும் விவசாயி என்ற வேடதாரிகளால் வந்தவினை நூறு ஏக்கர் நிலம் வைத்திருப்பவனும் இலவச மின்சாரம் பெறுகிறான் விவசாயிகளை வகைப்படுத்தி உண்மை விவசாயி யார் அவனுக்கு என்ன தேவை என்று உணர முடியாதஓட்டுபொறுக்கி அரசாங்கம் மும் அரசியல் வாதிகளும் தான் இதற்க்கு காரணம் உண்மை விவசாயி என்ன பயன் அடைகிறான் காலமெல்லாம் கடன் வாங்கி தன்னை அடமானம் வித்து விடுகிறான் தன்னை மட்டுமல்ல தன் சந்ததிகளையும்தான்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
13-ஏப்-201309:30:52 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //கேரள மாநிலத்தில் இருந்து கூலியாட்களை அழைத்து வந்து, குறைந்த கூலியில் பணியை மேற்கொள்கின்றனர். // - இந்த கருத்து தவறு..கேரளத்திலே கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் பீகார் மற்றும் தமிழ் நாட்டிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிபுரிகின்றனர்.
Rate this:
0 members
0 members
28 members
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
13-ஏப்-201309:23:03 IST Report Abuse
Chenduraan குறைந்த பதச்ச கூலியை 200 அல்லது 250 கொடுத்துத்தான் அவர்களை வேலை செய்ய சொல்ல வேண்டும். வேலை செய்கிறவர்கள் குடும்பமும் வாழவேண்டுமே? எங்க ஊரிலும் 200 அல்லது 250 கொடுக்கிறோம்.
Rate this:
9 members
0 members
0 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
13-ஏப்-201308:17:51 IST Report Abuse
K.Balasubramanian சிங்கபூரிலும் . ,. மலேசியாவிலும் மக்கள் விவசாயன பலன் பெறுகிறார்கள் நம் நாட்டில் அரசாங்க ஆதரவு விவசாயத்திற்கு குறைந்து வருவது கண்கூடான உண்மை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
13-ஏப்-201307:43:49 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே என் தந்தையார் விவசாயியாக இருந்த காலத்தில் (இப்போ எல்லா விளைநிலத்தையும் வித்துட்டோம்) பக்கத்து வயல் விவசாயிகள் எல்லாம் பேசி, ஒரு நாளைக்கு ஒருவர் நிலம் என்று விவசாயிகளே வேலை செய்தனர், சிருவிவசாயியாக இருந்ததினால் இது சாத்தியம், ஆனால் பேரு வயல்களில், முடிந்த வரை ஆட்டோமேஷன் செய்ய முயற்சிக்க அரசு உதவ வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-ஏப்-201307:37:11 IST Report Abuse
rajan விவசாயத்த ஒழித்த பெருமை இந்த காங்கரஸ் கழக கட்சிகள் தான். ஒட்டு வாங்க வந்தது தான் இந்த தேசிய ஊரக வேலை திட்டம். மக்கள் நலனுக்காக அல்ல. கடைசில எல்லாவனும் டாஸ்மாக் வீரர்களா சுத்தி வருவானுக குவாட்டரும் பிரயாணியும் போடுரவரைக்கும்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
13-ஏப்-201307:31:58 IST Report Abuse
Thangairaja சோம்பேறிகளை வளர்க்கும் திட்டங்களில் நமது அரசாங்கங்கள் விரையமாக்கும் பணத்தை விலை உயர்வை கட்டுப்படுத்த பயன் படுத்தலாம் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
13-ஏப்-201307:06:47 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஊராக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் -ன்னு ஒரு திட்டத்த கொண்டு வந்து இருக்குற எல்லா மக்களையும் சோம்பேறியா மாத்திட்டாங்க..நான் கண்ணால் கண்டது , வெறும் 1 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.. கூலியை வங்கி கணக்கில் இருந்து பெற்றுகொள்கிரார்கள்... காட்டில் வேலை செய்ய ஆள் கிடைக்க மாட்டிகிது.. இதுல வேற வட இந்தியர்கள் குறைந்த கூலி கொடுத்தாலும் அதிக நேரம் வேலை செய்ய தயாராக உள்ளனர்.. உள்ளூர் காரர்களை எவனும் வேலைக்கு வைத்து கொள்வதில்லை, எந்த வேலையாக இருந்தாலும் ஒப்பந்தம் போட்டு வட இந்தியாவில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள்.. உள்ளூர் காரன் அதிக கூலி , குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்கிறான்.. அதனால் இவர்களை எட்டி கூட பார்ப்பதில்லை முதலாளிகள்.. இப்படியே நிலைமை போனால் , தமிழன் நாளை வேலை இல்லாமல் மீண்டும் வரலாறு திரும்பி - வட இந்தியா செல்ல நேரிடும் வேலை தேடி...
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.