பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்

Updated : ஏப் 13, 2013 | Added : ஏப் 13, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மனைவி மீது கொண்ட பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்கு பின் வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவியின் சிலையை வைத்து வழிபட்டு வரும், 78 வயதான முதியவரின் பாசப்பிணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

புதுக்கோட்டை அடுத்த உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா, 78. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செண்பகவல்லி. இவர்கள், பத்து குழந்தைகளை (ஆண்-5, பெண்-5) பெற்றெடுத்தனர். இவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.தற்போது மகேந்திரவர்மன், நரேந்திரவர்மன், சவரணபவன், கணேசன் என, நான்கு ஆண் பிள்ளைகள், குழல்வாய்மொழி, அருள்மொழி, பொய்யாமொழி, வாசுகி என, நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

பிள்ளைகளில் மூத்தமகன் மகேந்திரவர்மன், இளைய மகன் கணேசன் ஆகியோர் மட்டுமே உசிலங்குளத்தில் உள்ள தந்தை சுப்பையா வீட்டில் அவருடன் வசித்துவருகின்றனர்.திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, இணை பிரியா தம்பதியராக சுப்பையா - செண்பகவல்லி வாழ்க்கை நடத்திவந்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்ட செண்பகவல்லி, 2006 செப்.,7ல் மரணமடைந்தார்.

மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனம் வருந்திய சுப்பையா அதிலிருந்து மீள்வதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை படிப்பது வழக்கம். ராமாயணத்தில் சீதையின் உருவபொம்மையை வைத்து ராமன் அஸ்வமேத யாகம் நடத்திய வரலாற்றுத் தகவல் சுப்பையா நினைவுக்கு வந்தது.

மனைவியின் மீது கொண்ட பாசத்தால், பொம்மையை ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது போல, தன்னுடைய அன்பு மனைவிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணம் உருவானது.ஆரம்பத்தில் மனைவியின் படத்தை வைத்து வணங்கி வந்த சுப்பையா, நாளடைவில் அவருக்கு சிலை வடிக்க முடிவு செய்தார். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடை உரிமையாளரை (மங்கள் அன்ட் மங்கள்) தொடர்புகொண்டு தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.அவரது ஏற்பாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர் சிலையை வைத்து வழிபடுவதற்காக வீட்டின் ஒரு பகுதி கோவிலாக மாற்றப்பட்டு, அதில் இரண்டு அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மீது மூன்றரை அடி உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவில் மற்றும் சிலைக்காக அவர் மூன்று லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கூடிய கோவில் எழுப்பிய மகிழ்ச்சியில் சுப்பையா நாள்தோறும் காலை, 6 மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு, விபூதி பூசியபின் கோவிலுக்கு சென்று மனைவியின் சிலைக்கு விளக்கேற்றியும், சூடம் காண்பித்தும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.தனக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஏதாவது காரியங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக மனைவின் சிலை முன் நின்று, வேண்டுவதையும் கணவர் சுப்பையா வழக்கமாக கொண்டுள்ளார்.மனைவியின் பிறந்தநாள் மற்றும் நினைவு(திதி) நாள் அன்று அன்னதானம் வழங்கி வருகிறார். அம்மா மீதான அன்பு காரணமாக, அப்பா நடத்தும் நிகழ்ச்சிகளில் அவரது பெண் குழந்தைகள் குடும்பத்துடன் பங்கேற்றுவருகின்றனர். ஆரம்பத்தில் தவிர்த்த ஆண் பிள்ளைகள், தற்போது ஆதரவு தெரிவிப்பதாக சுப்பையா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, நானும் என் மனைவி செண்பகவல்லியும், இணை பிரியா தம்பதியினராக வாழ்ந்துவந்தோம். பத்து குழந்தைகளை பெற்றெடுத்தோம். இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. என் மனைவி செண்பகவல்லி நோய்வாய்பட்டு, 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். மனைவியின் மரணம் என்னை நிலைகுலைய செய்தது. அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என, எண்ணினேன். அப்போது ராமாயணத்தில் சீதையின் பொம்மையை வைத்து, ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது நினைவுக்கு வந்தது.ராம பக்தன் என்பதால் அவரைப் போன்று மனைவிக்கு சிலை வடித்து வழிபட முடிவு செய்தேன். வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மூன்றடி உயரம் உள்ள மனைவி செண்பகவல்லியின் ஐம்பொன் சிலையை வைத்து வணங்கி வருகிறேன். என் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு கண்கலங்க கூறினார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manu - SETTINADU,இந்தியா
14-ஏப்-201307:38:05 IST Report Abuse
manu அனைத்து தினமலர் வாசகர்களுக்கும் எமது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நாம் முஸ்லிமாக ஹிந்துவாக கிறிஸ்டின் ஆக இருந்தாலும் நம்முடைய தாய் மொழி தமிழ் என்ற வகையில் நாம் அனைவரும் சகோதரரே ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
13-ஏப்-201312:59:56 IST Report Abuse
JAY JAY மனைவியை இறைவனாக்கி வழிபடும் இவரது நல்லமனதுக்கு வாழ்த்துக்கள்... தாய் தந்தையின் பணத்தை மட்டும் நேசிக்கும் இந்த யுகத்தில், இந்த நல்லமனிதரின் காலத்துக்கு பின்னர் அவரது பிள்ளைகள் இதனை செயலபடுதுமா என்பது சந்தேகமே.... கட்டுப்பாடு இல்லாமல் 10 பிள்ளைகளை பெற்றடுத்தது மட்டும் ஒரு தவறாக இருக்கலாம்... ஆனால் அவரது மனைவி பாசம் ஷாஜகானை , தாஜ்மகாலை நினைவுபடுத்துகிறது.... அந்த தாய் நிச்சயம் கொடுத்து வைத்தவளாக தான் இருந்திருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
BAS - TIRUVARUR,இந்தியா
13-ஏப்-201312:42:54 IST Report Abuse
BAS நாங்கள் இப்போது இருக்கும் நிலையில் மனைவிக்கு உயிரோடு இருக்கும்போதே சிலை வைக்கலாம் போல இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
13-ஏப்-201312:13:49 IST Report Abuse
KMP அந்த குடும்பத்திற்கு அன்பின் முழுவடிவமாக இந்த அம்மையார் திகழ்கிறார்
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
13-ஏப்-201311:44:58 IST Report Abuse
chinnamanibalan இன்றைய இளைஞர்கள் கண்டதும் காதல் கொள்கின்றனர் .திருமணத்திற்கு பின்னர் காதல் மோதலாகி நீதிமன்ற வாசலில் பிரிந்து போகும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர்.ஆனால் 78 வயது முதியவர் சுப்பையா தனது மனைவியுடன் 48 ஆண்டுகாலம் வாழ்ந்த பின்னரும் ,இறந்து போன தன் மனைவிக்காக சிலை வடித்து கடவுளாக வழிபடுகிறார்.இதுதான் உண்மை காதல்.இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
13-ஏப்-201310:45:36 IST Report Abuse
BLACK CAT கண்ணில் கண்ணீரை வர வளைத்த செய்தி இது ....
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
13-ஏப்-201310:05:06 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..
Rate this:
Share this comment
Cancel
SONAI MUTHU - Madurai,இந்தியா
13-ஏப்-201309:31:04 IST Report Abuse
SONAI MUTHU இந்த தம்பதிகள் போல் நாமும் வாழ முயற்சிப்போம் என்றும் நன்றியுடன் சோனை முத்து.
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
13-ஏப்-201308:34:53 IST Report Abuse
பி.டி.முருகன்    இவரை போல இப்போது யாரும் கிடையாது.ஆத்மார்த்த ரீதியான உறவுக்கு ஆண்டவனும் செவி சாய்ப்பான்.கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவருக்கு இவர் சிலை வைத்து கும்பிடுவது வரவேற்க தக்கது.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-ஏப்-201308:19:37 IST Report Abuse
Pannadai Pandian 10 பிள்ளைகளை பெற்றெடுத்த பெண்மணி கடவுளின் அவதாரம் தான். அவருக்கு மிகப்பெரிய தாய் பாசம் இருந்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை