உணவுக்காக தவிக்கும் இயலா குழந்தைகள் : நிதி ஒதுக்கீடு இன்றி அரங்கேறும் பரிதாபம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., கட்டுப்பாட்டில் வரும், பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல், நிதி ஒதுக்கீடு செய்யாததால், இயலாக் குழந்தைகள், மூன்று நேர உணவுக்கு வழியின்றி தவிக்கின்றன.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், பள்ளி செல்லும் வயதில் உள்ள இயலாக் குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கல்வி கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்காக, பகல் நேர பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன.இயலாக் குழந்தைகள் இனம் காணப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற முறையில், இங்கு கல்வி அளிக்கப்படுகிறது. இப்பணிக் காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும், இரண்டு சிறப்பாசிரியர்கள், நான்கு தசை இயக்கப் பயிற்றுனர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். என்.ஜி.ஓ.,க்கள் மூலம், ஆண்டுதோறும் இயலாக் குழந் தைகளை இனம் காண இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன; பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.பகல் நேர

பராமரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்காக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் சம்பளம், மருத்துவ முகாம், உதவி உபகரணங்கள் வழங்கல், ஆதார அறைகள், சாய்தளம், கழிப்பிடம் அமைத்தல், விழிப் புணர்வு முகாம் நடத்த, இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஒதுக்கீடு பெறப்பட்ட நிதி, தொண்டு நிறுவனங்கள் மூலம், சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தில் முழுமையாக செலவிடப்படுகிறதா என்பதை, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உறுதி செய்யவேண்டும்.

வாகன வசதி
தவிர, மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வர, வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையேல், மையங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோருக்கு, பஸ் கட்டணம் கணக்கிடப்பட்டு, அந்த வாரம் அல்லது மாதக் கடைசியில் வழங்க வேண்டும்.மத்திய அரசு நிதியாக, 60 சதவீதம், மாநில அரசு நிதியாக, 40 சதவீதம் எஸ்.எஸ்.ஏ.,

Advertisement

மூலம், பராமரிப்பு மையத்துக்கு வழங்கப்படுகிறது. 20 குழந்தைகள் வரை உள்ள, ஒரு மையத்துக்கு மாதத்துக்கு, உணவு செலவுக்காக, 7,000 ரூபாயும், பெற்றோர் குழந்தைகளை அழைத்து வர, போக்குவரத்து செலவுக்காக, 4,500 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிக்கல்
ஆண்டுதோறும் முறையாக வந்து கொண்டிருந்த நிதி, கடந்த மார்ச், 31ம்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதனால், இம்மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, மூன்று நேர உணவு வழங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்காக, உணவு கொண்டு வந்து ஊட்டி விடுகின்றனர்.எஸ்.எஸ்.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு அரசும், மார்ச் 31ம் தேதி முதல், நிதியை நிறுத்தி வைத்துள்ளன. சாதாரண குழந்தைகள் எனில் பரவாயில்லை என, விட்டு விடலாம். பரிதாபத்துக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர், அவர்களே உணவு கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். எப்போது நிதி வரும் என தெரியவில்லை' என்றார்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
18-ஏப்-201311:34:40 IST Report Abuse
p.manimaran எல்லோரும் உதவவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201310:53:35 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏழைகளின் சிர்ரிப்பில் இறைவனை கண்டதாக சொன்னவர்களின் அரசியல் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
13-ஏப்-201311:04:58 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் வழங்காமல் சோம்பேறிகளுக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கும் போற்றி ஊட்டி வளர்க்கிறது அரசு..
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
13-ஏப்-201309:28:51 IST Report Abuse
MSG இந்த விஷயம் முதல்வருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தேவையற்ற செலவினங்களை (இலவச பொருட்கள் விநியோகம்) குறைக்காமல் இந்த மாதிரியான முக்கிய செலவுகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சிறார்களின் வயிற்றுப் பசியை போக்காவிட்டல் பெரிய பாவத்தை சுமக்க நேரிடும். அது சரி இதை எல்லாம் முதல்வரிடம் எடுத்துச்சொல்ல மாவட்ட ஆட்சியாளர்கள் ஏன் முன்வரவில்லை.?
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
13-ஏப்-201304:25:33 IST Report Abuse
NavaMayam அனால் அம்மா உணவகத்தில் பாருங்கள் , பண்ட சட்டை போட்டா , கை கால் திடமாக உள்ளவர்கள் தின்று போகிறார்கள் ... அதற்க்கு நிதி உள்ளது , ஏனெனில் அவர்கள் வசம் ஒட்டு உள்ளது ... இந்த குழைந்தைகள் வசம் அது இல்லையே... காசில்லாதவர்களுக்கு மதிப்பில்லாத மாதிரி இந்த அரசாங்கத்தில் ஒட்டு இல்லாதவர்களுக்கும் மதிப்பில்லை ....
Rate this:
Share this comment
jksmahendraraj - karur,இந்தியா
13-ஏப்-201309:12:10 IST Report Abuse
jksmahendrarajதயவு குறந்து இந்த இடம் எங்கு உள்ளது என்று கோருங்கள், நான் என்னால் முடிந்த வரை உணவு, பணம் கொடுத்து உதவுகிறேன். இப்படிக்கு ஜ.கே.சு.மகேன்திரராஜ். கரூர்...
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
13-ஏப்-201314:59:00 IST Report Abuse
Krishஆம் நீங்கள் சொல்வது உண்மை நண்பரே, எங்கேயோ இருக்கும் ஈழ தமிழர்களுக்கெல்லாம் குரல் கொடுப்பார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கும் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவமாட்டார்கள். இங்கு நடப்பது எல்லாம் அரசியல். ஓட்டுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கி வருவார்கள் நம் அரசியல்வாதிகள். ஆண்டவன்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்....
Rate this:
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
18-ஏப்-201318:59:33 IST Report Abuse
Chenduraankrish ரொம்ப டீசெண்டா எழுதுகிறீர்கள். நான் என்றால் வேற மாதிரி எழுதி இருப்பேன். ஆனால் அதே ஆதங்கம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.