கோ-புரோ ஹீரோ 3 கேமிராவின் பார்வையில் ஒரு பொக்கிஷம்...- எல்.முருகராஜ்| Dinamalar

கோ-புரோ ஹீரோ 3 கேமிராவின் பார்வையில் ஒரு பொக்கிஷம்...- எல்.முருகராஜ்

Updated : மே 08, 2013 | Added : ஏப் 13, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தினமலர்.காமின் பொக்கிஷம் பகுதியில் போட்டோகிராபி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிவருவது அனைவரும் அறிந்ததே.இதில் வரும் உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர்களின் படங்கள் மற்றும் அவர்களது அரிய புகைப்படங்கள் பலருக்கு பாடமாக அமைந்துள்ளது. அதைவிட முக்கியமாக வளரும் நமது இளம் புகைப்படக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் களமாக இந்த பொக்கிஷம் பகுதி அமைந்துவிட்டது,அதிலும் இப்போது விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களின் படங்களை பகிர்ந்து கொள்ளும் முக்கிய தளமாக மாறி மாணவர்களுக்கு நன்மை தந்து வருகிறது.

இப்போது அதிகமாக பேசப்படும் வைல்டு லைப் போட்டோகிராபி பற்றி அதில் ஈடுபட்டுள்ள புகைப்படக்கலைஞர்களின் படங்கள் அதிகம் பதிவு செய்ததும் நமது களமே.

இப்படி புகைப்படக்கலையின் மேன்மைக்கான இந்த தளம் பற்றி அறிந்த சென்னையில் உள்ள முன்னணி புகைப்பட நிறுவனமாக போட்டோ டிரேட் நிறுவனம், புதிதாக அறிமுகமாகியுள்ள அமெரிக்க தயாரிப்பான கோ-புரோ ஹீரோ 3 என்ற கேமிராவை நம்மிடம் கொடுத்து இதன் திறனறிந்து தரும் பொறுப்பை வழங்கியது.

கோ-புரோ கேமிராவானது தீப்பெட்டி அளவைவிட குறைந்தது,இதில் தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்கு வீடியோ மற்றும் ஸ்டில் படங்களை பதிவு செய்யலாம். மழை, வெயில், புழுதிக்காற்று, கடல் என்று எந்த சூழ்நிலையிலும் வெளியில் வைத்து படமெடுக்கலாம், அதற்கேற்ப பாலிகார்பனேட் கவசமிடப்பட்டுள்ளது.
தலையில் மாட்டிக்கொள்ளலாம், மார்பில் தொங்கவிடலாம், மணிக்கட்டில் கட்டிக் கொள்ளலாம், சைசக்கிள் முதல் படகு வரை எதிலும் பொருத்திக்கொள்ளலாம்.
வழக்கமான கேமிரா போல் இல்லாமல் அல்ட்ரா வைடு கோணத்தில் படங்களை தேவைக்கேற்ப ஸ்டில்லாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கிறது. ஒரு வித்தியாசமான பார்வை பார்க்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல கேமிரா.விலை முப்பதாயிரத்திற்குள் என்பதால் இதனை பல்வேறு விதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். உதாரணமாக திருமண வீட்டில் மணமகன் கையில் இந்த கேமிராவை பொருத்தி விடுகிறார்கள், அவர் அக்னியில் மங்கல பொருட்களை தூவுவது மற்றும் மாங்கல்யத்தை எடுத்துச் சென்று முடிச்சு போடுவது போன்ற நினைத்து பார்க்கமுடியாத வித்தியாசமான கோணங்களில் படத்தை பதிவு செய்து தருகிறது.
மேற்கத்திய நாடுகளில் சினிமா எடுப்பவர்கள் விலை குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் வாங்கிக்கொண்டு பல கோணங்களில் வைத்து படமெடுத்து வருகின்றனர். ஒரு கார் ஏறி இறங்குவதை இந்த கேமிராவின் மீதே ஏற்றி இறக்கி பதிவு செய்கிறார்கள். கேமிரா போனாலும் வித்தியாசமான காட்சி கிடைத்துவிடுகிறது. இதேபோல அடித்து உடைப்பது, ஆகாயத்தில் இருந்து விழச் செய்வது, கடலலைச் சறுக்கு விளையாட்டில் பயன்படுத்துவது, கடலுக்கு அடியில் படம் எடுப்பது போன்ற பல விஷயங்களில் இந்த கேமிராவை பயன்படுத்துகின்றனர்.


இந்த கேமிராவை நான் பயன்படுத்தி எடுத்த படங்களை இங்கே பார்வைக்கு வைத்துள்ளேன்.

பாழடைந்ததும், தற்போது சீர்செய்யப்பட்டு வருவதுமான 126 வருட பாரம்பரிய பெருமைமிக்க சென்னை விக்டோரியா பப்ளிக் ஹால் பற்றிய புகைப்படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
இந்த கேமிரா பற்றி மேலும் விவரமறிய தொடர்பு கொள்ளவும், சென்னை,போட்டோ டிரேட் எண்: 044-28547113.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
16-ஏப்-201314:01:30 IST Report Abuse
Narendra Bharathi நன்றி தினமலர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை