செல்லப்பொண்ணுக்கு பையன் பிறந்துட்டான்....- எல்.முருகராஜ் | Dinamalar
Advertisement
செல்லப்பொண்ணுக்கு பையன் பிறந்துட்டான்....- எல்.முருகராஜ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

என் மகள் செல்லப்பொண்ணுக்கு பையன் பிறந்துட்டான், இந்தாங்க இனிப்பு சாப்பிடுங்க, என்று இலையில் சர்க்கரை பொங்கல் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த கிராமவாசி சன்னாசி.


இதில் கொண்டாட என்ன இருக்கிறது என்பவர்கள் கட்டுரையை கடைசி வரை படியுங்கள், அதற்கு முன்னால் " செல்லப்பொண்ணு' என்பது சன்னாசி வளர்க்கும் பசு என்பதை முதலிலேயே தெரிந்துகொள்ளுங்கள்.

ரியல் எஸ்டேட்காரர்களின் அகோர பசியால் காடு, கழனிகளை இழந்தது வருவது போல, கூடவே அதைச் சார்ந்த கால்நடைகளையும் இழந்தும்,மறந்தும் வருகிறோம்.

இந்த நிலையில் தான் வளர்த்த பசுவிற்கு பெத்த பிள்ளைக்கு செய்வது போல இரண்டு மாதத்திற்கு முன் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தார் இந்த மாடாபிமானி.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. பால் வியாபாரம் செய்யும் இவரிடம் மூன்று பசுக்கள் உள்ளன. மூன்றிக்கும் முறையே ராசாத்தி, ராணி, செல்லப்பொண்ணு என்று பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.
இந்த மூன்று பசுக்கள்தான் சன்னாசிக்கு உலகம், இவைகளை சீராட்டி, பாராட்டி, அன்பு பாராட்டி மகிழ்வார். இவைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்தும் போவார், இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாத நேசம், வெல்லமுடியாத பாசம்.
தான் அருமையாக வளர்த்த நான்கு வயதான செல்லப்பொண்ணு முதல் முறையாக கன்று ஈனப்போவது தெரிந்ததும், மனிதர் தலைகால் புரியாத சந்தோஷத்திற்கு உள்ளானார். இந்த சந்தோஷத்தை உற்றம், சுற்றம், நட்பு என அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பினார். இதற்காக நல்ல நாள் பார்த்து வளைகாப்பு நடத்திடவும் முடிவு செய்து அதற்கென தனி பத்திரிகை அடித்தார்.
அடித்த பத்திரிகையை தனது மனைவி தமிழரசியுடன் வீடு, வீடாக போய் வெற்றிலை பாக்குடன் வைத்து, "என் மகள் செல்லப்பொண்ணுக்கு வளைகாப்பு வச்சிருக்கேன், அவசியம் வந்து வாழ்த்திட்டு போங்க 'என்று வாயார, மனசார அழைத்தார்.
முதலில் இதை கோமாளித்தனமாக எடுத்துக்கொண்டவர்கள் கூட சன்னாசி பத்திரிகை வைத்து அழைத்த முறையை பார்த்துவிட்டு, அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பொதுஇடத்தில் ஒரு பேனரும் வைத்துவிட்டார்.
சுபயோக சுபமான அந்த நல்ல நாளும் வந்தது. மேற்பனைக்காடு மலைமாரியம்மன் ஆலய வளாகத்திற்கு செல்லப்பொண்ணுவை குளிப்பாட்டி அழகு படுத்தி கூட்டிவந்து நிறுத்தி சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட விசேஷமான உணவு கொடுத்தனர். பின்னர் ஊர் பெரியவர் வெள்ளி வளைகாப்பினை எடுத்து தர, தமிழரசி சன்னாசி அதனை செல்லப்பொண்ணுவின் கைகளில் (கால்களில்) ஊர்ப்பெண்களில் மங்கல குலவை ஒலிக்கு நடுவே மாட்டிவிட்டார், செல்லப்பொண்ணுவின் கண்களிலும், சன்னாசியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டனர்.
பின்னர் வந்திருந்தவர்கள் அனைவரும் செல்லப்பொண்ணுவிற்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டு வாழ்த்தினர், வந்திருந்த அனைவருக்கும் வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.
இது எல்லாம் நடந்து முடிந்து, சரியாக இரண்டு மாதங்கள் கழித்து செல்லப்பொண்ணு "சுகப்பிரசவத்தில்' ஒரு ஆண் கன்றை ஈன்றுள்ளது. கன்றைப்பார்த்ததும், கன்றுக்கு முன்பாக துள்ளிக்குதித்த சன்னாசி உதிர்த்த வார்த்தைதான் கட்டுரையின் முதலில் சொல்லியிருப்பவை.
உயிரும், உணர்வும் கொண்ட மனிதர்களையே கவனிக்க நேரமில்லாமல், கம்ப்யூட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், தான் பெறாத மகளாக நினைத்து ஒரு வாயில்லாத பிராணி மீது இவ்வளவு அன்பு கொண்டிருக்கும் சன்னாசி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தானே.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Saminathan - mumbai,இந்தியா
08-மே-201317:36:00 IST Report Abuse
R.Saminathan திரு.சன்னாசி அவர்களின் அன்பு பல்லாண்டு வாழும் ,,,நானும் வாழ வாழ்த்துகிறேன்.,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mahendran.m - tirupur,இந்தியா
01-மே-201300:07:30 IST Report Abuse
mahendran.m இது உண்மையில் ஒரு அதிசயம் .....................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Siva Ji - Coimbatore,இந்தியா
24-ஏப்-201309:43:05 IST Report Abuse
Siva Ji சந்தோசமா இருக்கு... அனைத்தும் கடவுள் கருணை...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ar shylas - tirupur,இந்தியா
18-ஏப்-201313:33:41 IST Report Abuse
ar shylas இதை படிக்கும் போதே கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
18-ஏப்-201322:47:16 IST Report Abuse
Hari Dossஉண்மை அன்பரே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
18-ஏப்-201306:35:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே உண்மையான பற்றுள்ள மனிதன், வாழ்க இவர்கள் போன்றவர்கள் , கடைசியில அதுக்கும் சக்கர பொங்கலா? எப்போவ், சக்கர பொங்கல்ல வெள்ளை சீனி போடாதீங்க, மாடுகளாவது மனிதர்களின் நோய் இல்லாமல் இருக்கட்டும்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
umakrishna - New Delhi,இந்தியா
17-ஏப்-201310:16:05 IST Report Abuse
umakrishna உண்மையில் மனதை தொட்டது. கோ மாதாவிற்கு சேவை செய்வதே மிக பெரிய பாக்கியம், அது எல்லோருக்கும் கிடைக்காது. பசு மாட்டை தன் மகள் போல் நடத்தும் சன்னாசி செய்யும் சேவை ஆண்டவனுக்கு செய்யும் சேவை. பகவான் கீதையில் அருள்லிருக்கிறார். அவருக்கு என் கோடி namaskarangal
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
16-ஏப்-201322:13:00 IST Report Abuse
Anantharaman சன்னாசி அவர்களின் உண்மையான அன்பே நிலையானது. என் இறைவன் உங்களையும் உங்கள் பெண்(பசு)களையும் காக்க வேண்டுகிறேன்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-ஏப்-201313:29:36 IST Report Abuse
Nallavan Nallavan இவரைப் போன்றோர் அறிதாகிவிட்டார்கள் ....
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
16-ஏப்-201309:25:19 IST Report Abuse
Hariganesan Sm மனித நேயம் குறைந்து வருகிறது இந்நாளில் தாய் தகப்பனை ஏன் பெற்றீர்கள் என்று பிள்ளைகள் சொல்லும் காலத்தில் வாழ்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பசு மாட்டை தன்னுடைய பிள்ளையாக பாவிக்கும் சன்னாசி மனித நேயத்துக்கும் மட்டும் அல்ல கால்நடைகளையும் தன்னுயிராக மதிக்கும் மேதை, பாராட்டித்தான் ஆக வேண்டும். ஹரி உ. பாளையம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Poornima - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201302:42:06 IST Report Abuse
Poornima பிரசவத்திற்கு வந்த பெண்ணை பணமில்லை என்று விரட்டியடித்த மனிதர்கள் வாழும் இதே பூமியில் தான் பசுவைப் பெற்ற பெண்ணாய் பார்க்கும் இந்த அற்புதமான மனிதரும் வாழ்கிறார்.
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்