UP: 13-year-old helps bring public toilets to his village | கழிப்பறை கட்டும் விவகாரம் : வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த சிறுவன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கழிப்பறை கட்டும் விவகாரம் : வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த சிறுவன்

Added : ஏப் 13, 2013 | கருத்துகள் (12)
Advertisement
கழிப்பறை கட்டும் விவகாரம் : வீட்டில் மட்டுமின்றி கிராமத்திலும் மாற்றம் கொண்டு வந்த சிறுவன்

லக்னோ:கிராம மக்களின் சுகாதாரம் கருதி, கழிப்பறைகள் கட்டும் விவகாரத்தில், வீட்டில் மட்டுமின்றி, கிராமத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான், 13 வயது பள்ளி சிறுவன்.


வித்தியாச முயற்சி:

உத்தர பிரதேச மாநிலம், கமாரியா தமுவான் கிராமத்தைச் சேர்ந்தவன், ஓம்கார் தூபே, 13. இவனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் திறந்த வெளியிலேயே, காலைக் கடன்களை முடிப்பது வழக்கம்.மழைக் காலங்களில், திறந்த வெளியில், மலம் கழிப்பதை மிகவும் சிரமமாக உணர்ந்த, தூபே, தன் குடும்பத்தினருக்கு என, ஒரு கழிப்பறை கட்ட ஆசைப்பட்டான்.தன் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்தான். குறைந்த வருமானம் உடைய குடும்பம் என்பதால், இரண்டு மாத சேமிப்பிற்கு பின், அந்த தொகையில், கழிப்பறை கட்டினர்.இதன்பின், தங்கள் குடும்பத்தினரைப் போன்றே, கிராமத்திலுள்ள மற்றவர்களும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என, எண்ணிய தூபே, ஊர் மக்கள் இடையே, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி னான். சிறுவனின் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் முயற்சியால், கிராமதலைவர், பொது கழிப்பறை கட்ட, நிதிஒதுக்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு பொது கழிப்பறை கட்டப்பட்டது. அதன்பின், ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்போடு, தற்போது, 13 கழிப்பறைகள், கட்டப்பட்டு வருகின்றன.அதேபோல், தான் பயிலும் பள்ளியிலும், கழிப்பறை கட்டப்பட வேண்டும் என, நினைத்தான் தூபே.


விழிப்புணர்வு:

பள்ளியை கண்காணிக்க வந்த அதிகாரிகளிடம், தன் விருப்பத்தை தெரிவித்தான். தற்போது, அப்பள்ளியில், மாணவர்மற்றும் மாணவியருக்கென, தனித்தனியாக, இரு கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தூபேயின் இந்ததூண்டுதல் மற்றும் விழிப்புணர்வால், தாங்கள் மிகுந்த பெருமை அடைந்து உள்ளதாக, அவனின்ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். கிராம மக்களும் அவனை பாராட்டுகின்றனர்.பெருகி வரும் சுகாதார சீர்கேட்டிற்கு மத்தியில், ஒரு சிறுவனின் தலைமையில், ஒரு கிராமமே, சுகாதார புரட்சியில் ஈடுபட்டு உள்ளது, அனைவரையும் வியப்படைய வைத்து உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poornima - Singapore,சிங்கப்பூர்
16-ஏப்-201302:47:42 IST Report Abuse
Poornima வாழ்த்துக்கள் தம்பி. உன் போல் பலர் வர வேண்டும் நம் பாரத தாயை பல சமுதாயக் கொடுமைகளில் இருந்தும் மீட்டு எடுக்க சிறுவன் என்று அலட்சியப் படுத்தாமல் அவரின் கருத்துக்குச் செவி சாய்த்த கிராம மக்களுக்கும் நன்றி
Rate this:
Share this comment
Cancel
anbu - Hamilton,நியூ சிலாந்து
14-ஏப்-201315:47:01 IST Report Abuse
anbu வாழ்த்துக்கள் அரசு வரவேற்க வேண்டும் தகுந்த உதவி செய்ய வேண்டும் அன்பு, நியூ சிலாந்து
Rate this:
Share this comment
Cancel
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
14-ஏப்-201315:44:57 IST Report Abuse
Mullai Periyaar தமிழ் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறதாம். 50% தமிழனும் திறந்த வெளியில் தானே மலம் கழிக்கிறான், அதுவும் இல்லாமல் வெளியிடங்களில் எதாவது ஒரு சுவரைப் பார்த்தால் போதும் வேட்டியைத் தூக்கிடுவான் தமிழன். இது உண்மை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
14-ஏப்-201315:41:33 IST Report Abuse
itashokkumar சிவகுமார் பையனுங்க,கமலஹாசன் பொண்ணுங்க,ரசினி தம்பி பொண்ணுங்க, இன்னும் பல அரசியல் வாரிசுகள் இதை படிக்க வேண்டும். குப்பையாக படம் எடுப்பதும் நடிப்பதும் தான் இந்தியாவை நிமிற்கும் என்பது போல போஸ் கொடுப்பது தவறோ தவறு என்று உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
parvathy murali - melbourne,ஆஸ்திரேலியா
14-ஏப்-201309:57:59 IST Report Abuse
parvathy murali இது போன்ற வாலிபர்களால் தான் இந்தியா முன்னேற்றம் காண முடியும் இந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
14-ஏப்-201309:56:47 IST Report Abuse
p.manimaran வாழ்த்துக்கள் தம்பி , உன்னை போல் எல்லோரும் உணரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
14-ஏப்-201309:12:03 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன் இச்சிறுவன்...சுகாதாரம் பேண வழிவகை செய்த இவனை அரசு தகுந்த முறையில் கவுரவிக்க வேண்டும். தமிழ் நாட்டிலேயே பல பள்ளிகளில் மாணவர் மற்றும் மாணவியருக்கென போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஏப்-201308:52:35 IST Report Abuse
kumaresan.m " திரு ..துபே சிறுவருக்கு வாழ்த்துக்கள் ....அந்த கிராம மக்கள் மிகவும் நல்லவர்கள் ...சிறு வயது பிள்ளை சொன்னாலும் நல்ல கருத்துக்களை ஏற்று கொள்கிறார்கள் " ஆனால் நம் மாநிலத்தில் நிலைமை அப்படியா ?
Rate this:
Share this comment
Cancel
Vinayagamurugan K - Rio de Janeiro,பிரேசில்
14-ஏப்-201307:58:22 IST Report Abuse
Vinayagamurugan K மிக சிறந்த மாணவன், எனது paaraattukkal
Rate this:
Share this comment
Cancel
Samurai - Japan,ஜப்பான்
14-ஏப்-201306:58:41 IST Report Abuse
Samurai தூபே வை நினைக்கும்போது "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை " ஞாபகதிர்ற்கு வருகிறது . தன்னலம் கருதாமல் இருக்கும் தூபே வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை