E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்தால் எதிர்ப்போம் : ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2013
23:50

புதுடில்லி : ""தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால், அதை எதிர்ப்போம்; அதே நேரத்தில், காங்கிரசுடன், ஒருபோதும் கூட்டணி சேர மாட்டோம்,'' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொதுச் செயலர், தியாகி கூறினார்.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு, அந்த கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.இதற்கு, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனதா தளம், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான, நிதிஷ் குமார், நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு, வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் குறித்த, முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், தேசிய செயற்குழு கூட்டம், நேற்று, டில்லியில் துவங்கியது.

இந்தக் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின், பொதுச் செயலர், தியாகி பேசியதாவது:குஜராத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பின் நடந்த கலவரத்தை, அம்மாநில முதல்வரான, நரேந்திர மோடி, கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். அதை, செய்ய தவறி விட்டார். அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவித்தால், அதை, நாங்கள் எதிர்ப்போம்.அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி, எங்களின் எதிரி. அந்த கட்சியுடன், ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். பா.ஜ.,வுடன், நீண்ட காலமாக கூட்டணியில் நீடிக்கிறோம். எனவே, காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, காங்கிரஸ் கட்சி தான் தூண்டியது. எனவே, குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு, நரேந்திர மோடி மீது, புகார் கூறுவதற்கு, காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. தங்களின், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து, பா.ஜ., பார்லிமென்ட் குழுவே, இன்னும் முடிவு செய்யவில்லை.இதனால், இந்த விவகாரத்தில், பா.ஜ.,வுக்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டிய அவசியம் இல்லை. நிதிஷ் குமாரை, பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த, ஐக்கிய ஜனதா தளம், முயற்சிப்பதாக கூறும் தகவல்களில் உண்மையல்ல. பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில், நிதிஷ் குமார் இல்லை.இவ்வாறு, தியாகி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
18-ஏப்-201303:15:42 IST Report Abuse
Skv எங்கேயாச்சும் இந்திய நல்லா முன்னேறிட்டா இந்த லஞ்சதிபதிகள் மேலும் செஜிக்கமுடியாதே அதான்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-201316:43:40 IST Report Abuse
GANAPATHI V இஸ் ..... இப்போவே கண்ணா கட்டுதே ...... திரும்பவும் முதல்ல இருந்தா...................?
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
14-ஏப்-201316:41:07 IST Report Abuse
Peria Samy தே.ஜ.கூட்டணியின் பிரதமர் வேட்பாளாராக மோடிக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.மோடி ஒரு மதவெறியராக இருந்தால் மூன்றாவது முறையாக குஜராத்தில் வெற்றி பெற்றிருக்க முடியுமா,குஜராத்தைக் கடந்து அவர் புகழ் பரவியுள்ளது. இதைபொறுக்காத காங்கிரசின் கைக்கூலிகள் சிலர் பரப்பும் விஷமப் பிரச்சாரத்தைப் புறக்கணிப்போம்.மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லாத ஒன்று.
Rate this:
12 members
0 members
22 members
Share this comment
Cancel
Hajji mohamed Hidayathullah - alqassim,சவுதி அரேபியா
14-ஏப்-201314:22:28 IST Report Abuse
Hajji mohamed Hidayathullah மோடியை ஒட்டுமொத்த சங்பரிவார கூட்டமும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதற்கு காரணம், அவர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கருவருத்தார் என்பதற்காகத்தான், மற்றபடி அவர் குஜராத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசென்றார் என்பதெல்லாம் ஒரு போலியான மாயைதான், மோடிக்கு முன்பே குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலம்தான் . இதே மோடி அல்லாத, வேறு ஒருவர் முஸ்லிம்களை அழித்தொழித்தாநென்றால் அவரைத்தான் இந்த சங்பரிவாரம் பிரதம வேட்பாளராக பரிந்துரைத்திருக்கும். அவர்களை பொறுத்தவரை வளர்ச்சி, முன்னேற்றம், தேசப்பற்று என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான், முதல் வேலை முஸ்லிகளை ஒடுக்கவேண்டும், அவர்களை ஒழிக்கவேண்டும் . மோடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் அந்த வலி புரியும் , மற்றவர்கள் அவரை புகழ்வது முஸ்லிம்கள் மீதுள்ள காழ்ப்புனர்சியினால்தான்.
Rate this:
151 members
0 members
17 members
Share this comment
jaiHind - Chennai,இந்தியா
19-ஏப்-201302:13:35 IST Report Abuse
jaiHindபாவம் வரலாறு தெரியாமல் இருக்கே , முஸ்லீம்ஸ் ஆர் லிவிங் ஹப்பிலி அண்ட் பிசெபுல்லி இன் குஜராத் ,...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
SENTHIL KUMAR - oddanchatram,இந்தியா
14-ஏப்-201313:47:10 IST Report Abuse
SENTHIL KUMAR இங்க கமெண்ட் சொல்லுறத வைத்து பார்த்தா மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
Rate this:
11 members
0 members
28 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
14-ஏப்-201312:02:49 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி வெளியேறுங்கள். இனி உங்கள் ஆதரவுக்காக பிஜேபி தொங்கினால் என்னை போல் மானம் உள்ள எவரும் பிஜேபி கட்சிக்கு வாக்கு அளிக்க மாட்டான்.
Rate this:
7 members
0 members
36 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
14-ஏப்-201311:45:57 IST Report Abuse
Wilsonsam Sp என்னாது மோடி பிரதமர் ஆக கூடாது என்பதற்கு எதிர்ப்பா ஆப்ப நீங்களே சீவி வச்சிகிறீங்க.
Rate this:
4 members
0 members
27 members
Share this comment
deva - paris,பிரான்ஸ்
14-ஏப்-201316:43:44 IST Report Abuse
 devaசரியாக சொன்னிர்கள் , இவர்களுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை மோடி அவர்களின் மீது உள்ள பொறாமை காரணமாக எதிக்கிறார்கள்....
Rate this:
8 members
0 members
20 members
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
14-ஏப்-201311:39:26 IST Report Abuse
CHANDRA GUPTHAN இவங்களையெல்லாம் யார் கேட்டது . இவனுங்க தானும் படுக்க மாட்டனுங்க தள்ளியும் படுக்கமாட்டனுங்க ...... நம்ம தலை எழுத்து .
Rate this:
5 members
0 members
35 members
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
14-ஏப்-201311:27:17 IST Report Abuse
K.vijayaragavan நாளைய பாரதத்தின் நம்பிக்கை மோடி. மோசக்கார காங்கிரசின் அறுபத்தைந்து ஆண்டுகால ஆட்சியில் குற்றுயிரும், குலையுருமாய், சீர்குலைந்து நிற்கும் பாரதத்துக்கு உயிர் கொடுக்க மோடியால் மட்டுமே முடியும். இதில் எந்த காரணம் கொண்டும் பா.ஜ.பின்வாங்கக்கூடாது. பா.ஜ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த கேடு கெட்ட காங்கிரஸ் நிதிஷ் பரத்வாஜை விலைக்கு வாங்கியது போல், பா.ஜ கூட்டணியின் வலுவை குறைக்கும் முயற்சியிலும் இறங்கி விட்டது.இன்று காங்கிரசுக்கு எதிராக நாடு பூராவும் கண்ணுக்கு தெரியாத ஒரு அலை வீசிக்கொண்டிருக்கிறது. இதை பாரதீய ஜனதா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.முடிந்தால், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றாலும் பரவாயில்லை. தேவையில்லாமல், நிதிஷ் பரத்வாஜ் போன்ற பச்சோந்திகளுக்கு பந்தி வைத்து வீணாக சில எம்.பிக்களை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆகவே, மோடியே எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று துணிந்து அறிவிக்க வேண்டும். மோடியின் தலைமையில் பா.ஜ ஆட்சி அமையவேண்டும். பாரதம் இனியாவது, தன்மானத்துடன், தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். பாரத் மாதா கீ ஜெய்.
Rate this:
11 members
0 members
47 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
14-ஏப்-201311:25:02 IST Report Abuse
Ravi Ramanujam பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளர் ஆக நிறுத்தி தனித்து நின்றாலே பதவிக்கு வருவது உறுதி. சரத் யாதவ் மற்றும் நிதிஷை கழற்றி விடுங்கள். வெற்றி உறுதி. காங்கிரஸ் செய்த ஊழல்களே உங்களை ஆட்சியில் அமர்த்திவிடும் என்பது திண்ணம்.
Rate this:
8 members
0 members
39 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.