Advertisement
அ.தி.மு.க., பக்கம் சாயும் காங்கிரஸ்: சட்டசபையில் அச்சாரம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஏப்
2013
23:52

தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., பக்கம், காங்கிரஸ் செல்கிறது. சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், இதற்கான அச்சாரம் போடப்படுகிறது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதால், எப்போது கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐ.நா., சபை மனித உரிமை ஆணையத்தில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு எடுத்த முடிவை, சாதகமாக்கிக் கொண்டு, கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியது.தமிழகத்தில், பிரதான கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியன, தங்களுக்கு எதிராக இருந்தால், பெரும் தோல்வியை, லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் சந்திக்க வேண்டி வரும் என்பதால், ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் ஏற, காங்கிரஸ் முயற்சிப்பது வழக்கமான ஒன்று.

கூட்டத்தொடர்:



இந்த நிலையில், தி.மு.க., வெளியேறிய நிலையில், அ.தி.மு.க., பக்கம் போவதற்கான, காய்களை நகர்த்தி வருகிறது. இதில், கொஞ்சம் வெற்றியும் பெற்று வருவதாக, அக்கட்சி நினைக்கிறது. தற்போது, நடந்து கொண்டிக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான முனைப்புகளை, காங்கிரஸ் காட்டுகிறது.காங்கிரசிடம் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். இவர்களின், ஆதரவு அல்லது எதிர்ப்பால், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எவ்வித லாபமோ, நஷ்டமோ இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆதரவு, தமிழக அரசுக்கு முக்கியமாக உள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி பெறுதல், மின்சாரத்தை வெளிமாநிலங்களிருந்து, தமிழகத்துக்கு கொண்டு வர பாதை அமைத்தல், அண்டை மாநிலங்களுடன் இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்தல் போன்றவற்றுக்கு, மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.

காங்கிரசுக்கு சங்கடம்:



இதுவரை, தி.மு.க., கூட்டணியில் இருந்ததால், அதன் நேர் எதிர்க் கட்சியான, அ.தி.மு.க., அரசுக்கு உதவுவது, காங்கிரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது. தி.மு.க., வெளியேறிவிட்ட நிலையில், அ.தி.மு.க., வுக்கு உதவுவதில், எவ்வித சிக்கலும், காங்கிரசுக்கு இல்லை.அதனால், இரு கட்சிகளும், சட்டசபையில் நெருங்கி வரும் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க., அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் வாழ்த்திப் பேசுவதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். சட்டசபை விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. காங்கிரசோ, வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

முதல்வருக்கு வாழ்த்து:



காங்கிரசின் சட்டசபை தலைவர் கோபிநாத், முதல்வருக்கு, தெலுங்கு ஆண்டு பிறப்பு வாழ்த்துக்களை சட்டசபையில் பேசும் போது தெரிவித்தார். காங்கிரசின் பெண் எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசுகையில், ""மாநில அரசின் கோரிக்கைகளை, காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு செல்வோம். கூடுதல் நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்போம்,'' என, கூறினார். விஜயதாரணியின் பேச்சை, மேஜையை தட்டி, அ.தி.மு.க.,வினர் வரவேற்றனர். காங்கிரசின் குளச்சல் எம்.எல்.ஏ., பிரின்சை, "செல்லதம்பி பிரின்ஸ்' என, முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது, பெரும் அதிர்வலையை, சட்டசபையில் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அ.தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்துள்ள காங்கிரசுக்கு, சட்டசபையில் பேச அனுமதிப்பதை, அ.தி.மு.க., தாராளப்படுத்திஉள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Iyer - chennai,இந்தியா
14-ஏப்-201317:56:41 IST Report Abuse
Natarajan Iyer வரும் தேர்தலில் சிவகங்கை சின்ன பையன் டெபாசிட் கூட வாங்க கூடாது. காங்கிரசை கருவருக்கவேண்டும்,..
Rate this:
11 members
0 members
20 members
Share this comment
Cancel
Kuppusamy - Erode,இந்தியா
14-ஏப்-201316:02:40 IST Report Abuse
Kuppusamy உண்மையை வெளிபடுத்திய தினமலர்..... நன்றி நன்றி நன்றி.... ஆதரவு நிலையை எடுத்துள்ள காங்கிரசுக்கு, சட்டசபையில் பேச அனுமதிப்பதை, அ.தி.மு.க., தாராளப்படுத்திஉள்ளது. - நமது சிறப்பு நிருபர் -
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஏப்-201316:01:07 IST Report Abuse
Pugazh V 1 ரூபாய்க்கு இட்டிலி சாப்பிட்டுவிட்டு, அ தி மு க விற்கு மீண்டும் ஓட்டு போட்டுவிட்டு, அப்புறம் 5 வருடம் குய்யோ முறையோ என்று இப்போது மாதிரியே இருட்டிலும் வேர்வையிலும் அவதிப்பட்டுக் கொண்டே காலம் தள்ள வேண்டியது தான்.
Rate this:
8 members
0 members
38 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஏப்-201315:57:52 IST Report Abuse
Pugazh V இனி உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் எல்லோரும் போயிட்டு பொங்கலுக்கு அப்புறம் வாங்க. கலைஞரையும் காங்கிரசையும் பிரிக்கும் அசைன்மெண்ட் முடிச்சதுக்கு நன்றி. இலங்கையாவது, தமிழனாவது. அ தி மு க விற்கு ஜே போடு, பரீட்சை முடிஞ்சதும் ஊரைப் பாக்க ஓடு. காங்கிரசை வசை பாடிய அ தி மு க அன்பர்களின் முகம் கிழிந்து தொங்குகிறதே, பாவம்.
Rate this:
5 members
0 members
40 members
Share this comment
Cancel
AR.SENTHILKUMAAR rengarajan - karaikkudi,இந்தியா
14-ஏப்-201315:23:25 IST Report Abuse
AR.SENTHILKUMAAR rengarajan முதலில் ஒழிக்க பட வேண்டிய கட்சி தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சி திமுகதான் ..அதன் பிறகே நமக்கு விடிவுகாலம்
Rate this:
38 members
0 members
20 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
14-ஏப்-201314:52:39 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் அதிமுக , மதிமுக போன்றவை காங்கிரஸ் உடன் எல்லாம் கூட்டணி வைக்காது...
Rate this:
16 members
0 members
28 members
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
14-ஏப்-201314:40:54 IST Report Abuse
Sulo Sundar அம்மா...உஷார்...வேண்டவே வேண்டாம் இந்த காங்கிரஸ் கூட்டு....தமிழகத்தில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பே செத்துப்போன கட்சி அது....மஞ்சதுண்டின் சகவாசாத்தால் மக்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்து உள்ளார்கள் அவர்கள்...ஆகவே அவர்களை தூரத்திலேயே வையுங்கள்...
Rate this:
11 members
1 members
16 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
14-ஏப்-201314:37:50 IST Report Abuse
amukkusaamy எல்லாம் அம்மாவும் போடும் நாடகம்தான். கடைசி நேரக் காட்சிகள் மாறும்.
Rate this:
0 members
2 members
31 members
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஏப்-201313:52:27 IST Report Abuse
Krish Sami காங்கிரஸ், 1967 க்கு பிறகு, எந்த காலத்திலும் தமிழ் நாட்டிற்கு நன்மை செய்தது கிடையாது, இதே கால கட்டத்தில், கர்நாடகா, ஆந்திரா, உத்தர பிரதேஷ் போன்ற மாநிலங்களுக்கு காங்கிரஸ், எத்தனை மத்திய அரசாங்க நிறுவனங்கள் கொடுத்துள்ளது என்பதை மட்டும் எண்ணி பாருங்கள் மக்கள் இப்பவும் தெளிவாகவே இருக்கிறார்கள். தி மு க வெட்டப்பட வேண்டியது என்றால், காங்கிரஸ் வேரோடு பிடுங்கப்பட வேண்டியது. 2013 / 2014 லில் இரண்டும் ஒழிந்து போகட்டும். உண்மையில், மக்கள் இவர்கள் சேர்ந்து வர வேண்டும் என்று காத்திருந்தார்கள், ஒரே போடாய் போடுவதற்கு.
Rate this:
17 members
0 members
30 members
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
14-ஏப்-201317:39:24 IST Report Abuse
Krish Samiஇங்க கள்ள வோட்டு போட்டு ஒரு 'தோற்றத்தை' ஏற்படுத்த முயற்சி செய்தாலும், தனி தனியாக வந்தாலும், சேர்ந்தே வந்தாலும், காங்கிரஸ் & தி மு க என்ற கூட்டு களவாணிகளுக்கு கிடைக்க போவது 0/40 போடுங்க, இதுக்கும் கள்ள வோட்டு தேர்தல் ரிசல்ட் வர அன்னிக்கு டி வியை off செய்துட்டு முடங்கி கிடக்கலாம். 2011 ரிசல்ட் சமயத்தில் tr தெரிஞ்சவுடன், கலைஞர் டி வி, துண்ட காணும், துணியை காணும் ன்னு ஓடிட்டாங்க, வெட்டி நிகழ்ச்சிகள் காட்ட 2013 / 2014 ரிசல்ட் சமயத்தில், எண்ணிக்கை ஆரம்பிச்ச பத்தாவது நிமிடமே மற்ற நிகழ்ச்சிகள் காட்டலாம் இப்ப போடுங்க கள்ள வோட்டு ம்ம்ம், ஆரம்பிக்கட்டும்....
Rate this:
5 members
0 members
14 members
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
14-ஏப்-201313:24:24 IST Report Abuse
R.சுதாகர் தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் எந்தக் கட்சியின் வெற்றிவாய்ப்பும் பறிபோகும் என்று ஜெயலலிதா நன்கு உணர்ந்தே இருக்கிறார். கலைஞர் தூக்கி எறிந்த கட்சி என்ற ஒரே காரணம் போதுமே ஜெயலலிதா காங்கிரசை ஒதுக்க...
Rate this:
7 members
2 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.