MLA in cycle shop | சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., | Dinamalar
Advertisement
சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டும் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சட்டசபையில் இருந்து, ஆறு மாதம் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பணியாற்ற முடியாத, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., தனது பழைய தொழிலில், ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார்.

தே.மு.தி.க.,வின் போட்டி எம்.எல்.ஏ., தமிழழகனுடன், சட்டசபையில் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பாக, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சந்திரக்குமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, பால அருட்செல்வன், செந்தில்குமார், முருகேசன் ஆகிய, ஆறு பேர், ஓராண்டுக்கு, சட்டசபையில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


"சஸ்பெண்ட்':
எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இவர்கள் மீதான "சஸ்பெண்ட்' நடவடிக்கை, ஆறு மாதமாக குறைக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில், இவர்களுக்கு, எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம், அடிப்படை தகுதிகள் மற்றும் சலுகைகள் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. "சஸ்பெண்ட்' நடவடிக்கையை எதிர்த்து, இவர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்."சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, ஆறு பேரில், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வசதி படைத்தவர்கள். ஆனால், சென்னை எழும்பூர் தனித்தொகுதி எம்.எல்.ஏ., நல்லதம்பி, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர், எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு வரை, சென்னை புரசைவாக்கத்தில், வாடகை சைக்கிள் மற்றும் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். எம்.எல்.ஏ.,வான பிறகு, மக்கள் பணிகளை கவனிக்க துவங்கியதால், சைக்கிள் கடையை, தனது கடையில் வேலை பார்த்தவரிடம் ஒப்படைத்தார்.


சிறுவர்கள் ஆர்வம்:
தற்போது, "சஸ்பெண்ட்' நடவடிக்கைக்கு ஆளாகி, எம்.எல்.ஏ., பணியை மேற்கொள்ள முடியாததால், சைக்கிள் கடை பணியை, நல்லதம்பி மீண்டும் கவனிக்க துவங்கி விட்டார். பள்ளி கோடை விடுமுறை துவங்கி விட்டதால், சைக்கிள் ஓட்டுவதில் சிறுவர், சிறுமிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.இதனால், சைக்கிள் டயருக்கு பஞ்சர் போடுவது, காற்றடிப்பது போன்ற பணிகளில், நல்லதம்பி "பிசி'யாகிவிட்டார்.இருப்பினும், இவரை பார்க்க, நாள்தோறும், தொகுதி மக்கள் வழக்கம்போல் வந்து செல்கின்றனர். தொகுதி பிரச்னை, குடும்ப பிரச்னைகளை கூறிவிட்டும், உதவி கேட்டும் செல்கின்றனர்.

இது குறித்து நல்லதம்பி கூறியதாவது:மகப்பேறு உதவித்தொகை பெற, புதிய வங்கி கணக்கு துவங்கவேண்டும். எனது தொகுதியில் உள்ள பலருக்கு, முகவரிச்சான்று உள்ளிட்டவை இல்லாததால், வங்கி கணக்கை துவங்க, நான் பரிந்துரை கடிதம் வழங்கினேன். போக்குவரத்து கழகத்தில் பணியில் சேர, நன்னடத்தை சான்றிதழ் வழங்கினேன். தாசில்தார் அலுவலகத்தில், வருமானம், ஜாதிச்சான்று, முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவித் தொகை பெற, பலருக்கு கடிதம் கொடுத்தேன். கவுன்சிலர்களிடம் சென்றால், பணம் கொடுக்க வேண்டும் என்பதால், என்னிடம், பரிந்துரை கடிதங்களை, தொகுதி மக்கள் இலவசமாக பெற்றுச் சென்று பலனடைந்தனர். ஆனால், தற்போது, எம்.எல்.ஏ.,வாக செயல்பட முடியாதததால், பரிந்துரை கடிதம் வழங்க முடியாது. இது தெரியாமல், கடிதம் வாங்க, தொகுதி மக்கள் என்னை பார்க்கின்றனர். விஷயத்தை நான் விளக்கிய பிறகு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


ஏமாற்றம்:
சைக்கிள் டயருக்கு பஞ்சர் ஒட்டுவதும், ரிப்பேர் செய்யும் கைத்தொழில் நன்றாக தெரியும் என்பதால், பொருளாதார ரீதியாக, என்னை வளைக்க நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இந்த தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம் மூலம், முன்பு, குடும்பத்தை கவனித்து கொண்டு, கட்சி பணியையும் செய்தேன். அதே வேலையை இப்போதும் தொடர்கிறேன்.எனது அலுவலகம் அருகே தண்ணீர் பந்தல் திறந்துள்ளேன். தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, வாரம் ஒருமுறை, மக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழ துண்டுகளை வழங்குகிறேன்."சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற கவலை மட்டும் தான் என்னிடம் உள்ளது.இவ்வாறு நல்லதம்பி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
16-ஏப்-201310:51:05 IST Report Abuse
mirudan சைக்கிள் கடைக்கு கண்ணாடி கதவு போட்டு இருக்கும் முதல் ஆள் இவராகத்தான் இருக்கும்.
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
14-ஏப்-201317:56:15 IST Report Abuse
Raju Rangaraj விரைவில் திமுகவுடன் கூட்டணி வைக்க போவதால் உங்களுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது பரிதி இளம் வழுதியோடு ஒன்றாக காரில் வலம் வர நல்ல யோகம் உள்ளது சுக்கிரன் எட்டாம் இடத்தை பார்ப்பதால் விரைவில் டூ-வீலர் கூட்டிகளை வாங்கி விற்கும் டீலராக மாறும் யோகம் தெளிவாக தெரிகிறது அதன்பிறகு கேப்டன் மகனை போட்டு ஒரு திரைப்படம் எடுக்க உள்ள யோகமும் சுக்கிரன் ஏழாம் இடத்தில் வருவதால் உண்டு மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு முடிந்தால் உங்கள் ஏரியாவில் ஒரு பழக்கடையும் ஜூஸ் கடையும் வைத்தால் நற்பலனுண்டு திமுகவில் உள்ள ஜே .அன்பழகன் வழியில் நடந்தால் நல்லது சினிமா படம் எடுக்கும் ஆசை கை கூடும்வாழ்க வாழ்கவே
Rate this:
51 members
0 members
9 members
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-201316:47:20 IST Report Abuse
GANAPATHI V நல்ல வருமானம் ...ஒரு பஞ்சருக்கு 15 ரூபாய் ......ம்ம் ...
Rate this:
62 members
2 members
26 members
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
14-ஏப்-201315:35:20 IST Report Abuse
Asokaraj என்னமோ வெளிச்சம் போட்டு படம் ஓட்டுற மாதிரி தெரியுது. இவரால் காசு கொடுக்காமல் பலன் அடைந்த, உண்மையை சொல்லும் அந்த தொகுதி மக்களுக்கே வெளிச்சம்.
Rate this:
33 members
1 members
15 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஏப்-201315:19:39 IST Report Abuse
Pannadai Pandian எல்லாம் சரிதான், தன்னுடைய லாயல்டியை காட்டிக்கொள்ள சட்ட மன்றத்தில் அந்த உறுப்பினரை தாக்கி அவரது சட்டையை கிழித்து அசிங்கமாக நடந்து கொண்டது தவறு. ஆட்டம் போட்டால் இப்படித்தான் சக்தி உள்ளவர்கள் வீட்டு திண்ணையில் உக்கார வைத்து விடுவார்கள்.
Rate this:
63 members
0 members
58 members
Share this comment
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
14-ஏப்-201317:05:08 IST Report Abuse
vaaithaa vampanகொத்தடிமை எல்லாம் கூவகூடாது ...
Rate this:
8 members
0 members
20 members
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
14-ஏப்-201317:13:38 IST Report Abuse
K.Sugavanamஅதான் அடக்கி வாசிக்கிறாரோ???...
Rate this:
4 members
1 members
2 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஏப்-201315:05:15 IST Report Abuse
Pannadai Pandian இதே எழும்பூர் தொகுதியில் உள்ள முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி முன்னாடி பத்து காரு, பின்னாடி பத்து காரு இடையில் இவருன்னு இன்னமும் ஜமாய்கிறாரு. தொகுதியில் மட்டுமல்லாது சென்னை முழுவதும் மறைமுக சொத்துக்கள் உள்ளன. தலைவர் எப்படி வளர்த்துவிட்டுருக்காருன்னு பாருங்க. இந்த வசதி வாய்ப்புகளுக்கெல்லாம் காரணம் சட்டமன்றத்தில் அடிக்கடி வேட்டிய உருவி விட்டு,நேராக கோபாலபுரம் சென்று ஆசி பெற்றது தான்.நீங்க என்னன்னா இன்னமும் பஞ்சர் ஓட்டிகிட்டு இருக்கீங்க.
Rate this:
23 members
1 members
50 members
Share this comment
Cancel
sanau - riyadh,சவுதி அரேபியா
14-ஏப்-201314:23:25 IST Report Abuse
sanau can i see this same MLA after ten years in the same job if we support and make him to win all upcoming election? is it possible? no chance,difficuit in our politices.
Rate this:
28 members
0 members
15 members
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
14-ஏப்-201316:01:39 IST Report Abuse
itashokkumarநீங்க இதை ஒ. ப. விடம் கேளுங்கள் ஏனெனில் அவரும் இப்படி கடையில் இருந்து வந்தவர்தான்....
Rate this:
4 members
0 members
27 members
Share this comment
Cancel
Dass S - Chennai,இந்தியா
14-ஏப்-201313:38:15 IST Report Abuse
Dass S யாரும் அ தி மு க கட்சியில் சேராதீர்கள் அதுவே நல்லது
Rate this:
14 members
0 members
47 members
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
14-ஏப்-201312:29:44 IST Report Abuse
p.manimaran உண்மையானவர்.
Rate this:
13 members
0 members
63 members
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
14-ஏப்-201317:15:14 IST Report Abuse
K.Sugavanamபாத்தா கேப்டனுக்கு காத்து குத்துகிறது போல இருக்கு.....
Rate this:
17 members
0 members
5 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
14-ஏப்-201311:54:34 IST Report Abuse
Wilsonsam Sp அம்மா காலில் சரணடைந்தால் உங்களுக்கு சகல சவுகரியமும் கிடைக்கும் நீங்க என்னடான்னா உழைச்சி வாழ்வேன்னு அடம்புடிக்கிறீங்க.
Rate this:
35 members
0 members
31 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்